புதிய திரிபுரங்கள்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
புதிய திரிபுரங்கள்
சு. சமுத்திரம்
13, தீனதயாளு தெரு,
தியாகராயநகர், சென்னை-600 017
- கங்கை முதற் பதிப்பு : செப்டம்பர் 1997
உரிமை : ஆசிரியருக்கு
- கங்கை முதற் பதிப்பு : செப்டம்பர் 1997
- விலை : ரூ. 25–00
Title : PUDHIYA THIRIPURANGAL Subject : Novel Language : Tamil Author : SU. SAMUTHIRAM Edition : First Edition September, 1997 Paper : 11.6 Kg. Mysore Cream Wove Pages : 152+4=156 Price : Rs. 25–00 Published by : GANGAI PUTHAKA NILAYAM
13, Deenadayalu Street,
Thiyagarayanagar, Chennai-600 017
நேரு அச்சகம், 43, அம்மையப்பன் தெரு, சென்னை—600 014.
பதிப்புரை
- திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவபெருமானின் நடராஜ தாண்டவத்தைப்பார்த்து சு. சமுத்திரத்திற்கு ஒரு பொறி தட்டிற்று போலும்.
- கொடியவனும், அரக்கனுமான முயலகனைக் காலால் மிதித்து, கையிலே தீச்சட்டி ஏந்தி உக்கிரத்தோடு நடனமிடும் நடராஜப் பெருமானின் திருக்கோலம், சமுத்திரத்திற்கு ஒரு தீவிரவாதக் கதை உருவாகக் காரணமாகிறது.
- கொடியவர்களாகவும் கொலை பாதகர்களாகவும் உள்ள ஒரு கட்டுமானக் காண்ட்ராக்ட் நிறுவனத்தின் முறைகேடான செயல்களை எதிர்த்துப் போராட ஒரு இளைஞன் உருவாகிறான். தொழிலாளர்களின் உழைப்பால் கொழுத்து வாழும் ‘காண்ட்ராக்டர்’களின் கொடுமைகளைத் தட்டிக் கேட்கப் புறப்படும் அந்த இளைஞன், ஈஸ்வர சன்னதியில் சாமியாரால் ஆசீர்வதிக்கப்பட்டுக் காரியத்தில் இறங்குகிறான்.
- பல்வேறு கருத்துக்களால் சிதைந்து கிடக்கும் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி, தொழிற்சங்கம் அமைத்து, உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்த முனையும்போது, அவனுக்கும், அவன் காதலிக்கும் காண்ட்ராக்டர்களால் இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டு ஈஸ்வர பூஜை செய்துகொண்டிருந்த சாமியாரே கொதித்தெழுகிறார்.
- காவியுடையைக் களைந்துவிட்டு காக்கியுடை அணிந்து, புதிய திரிபுரங்களை அழித்து, ஆட்கொள்ளப் புறப்படுகிறார்.
- இதில் இடம்பெறும் இன்னொரு நாவலான ‘கேள்வித் தீ’ எனும் குறுநாவலும் ஒரு குருதிப் புனல்தான்.
- கல்விக்கூடத்தை நிர்வகிப்பவன் ஒருவனின் கயமைத்தனத்தையும், பகலுணவுக்கு வரும் உணவுப் பொருள்களை விற்றுவிட்டு ஆட்டம் போடும் அயோக்கியத்தனத்தையும், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரியையும், இவர்களின் கூட்டுச் சதியை தட்டிக் கேட்கும் ஆசிரியர்களை வேலைநீக்கம் செய்யும் அராஜகத்தையும், எதிர்த்துப் போராடும் ஆசிரியர்களின் போராட்டங்களையும் ஆசிரியர் சமுத்திரம் அவர்கள் வேகமாகவும் கோபமாகவும் எழுதிக் காட்டுகிறார். படிக்கும் வாசகர்களையும் கொதிக்க வைக்கிறார். ‘புதிய திரிபுரங்களும்’ ‘கேள்வித் தீயும்’ வாசகர்களின் மனதில் ஒரு கோபத் தீயை மூட்டிவிடும் என்பது நிச்சயம்.
கங்கை புத்தக நிலையத்தார்
