பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/தீ ஓட்டம்

விக்கிமூலம் இலிருந்து


16. தீ ஓட்டம்


ஆட்டம் தொடங்குவதற்கு முன்:

இருக்கின்ற ஆட்டக்காரர்களை நான்கு குழுவாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழுவும் சம எண்ணிக்கை அளவிலே இருக்க வேண்டும்.

நேராகக் கோடு கிழித்து, ஒவ்வொரு குழுவிற்கும் இடையில் 3 அடி இடைவெளி இருப்பதுபோல, வரிசையாக நிறுத்திவிட வேண்டும். அந்தந்தக் குழுவிற்கு எதிரே 30 அடி துரத்தில் ஒவ்வொரு மெழுகு வர்த்தியை வைத்து விட்டிருக்க வேண்டும்.

இப்பொழுது ஒவ்வொரு குழுவின் முன்னால் நிற்கும் ஒவ்வொருவரிடமும் (நான்கு குழுக்களிலும்) ஒரு மெழுகுவர்த்தி, ஒரு தீப்பெட்டிக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். 

விளையாடும் முறை :

ஆட்டத்தை நடத்துபவர் விசில் சத்தத்தின் மூலம் அனுமதி கொடுத்தவுடன், மெழுகுவர்த்தியும் தீப்பெட்டியும் வைத்திருப்பவர்கள், தங்களிடம் உள்ள தீப்பெட்டி மூலம் தீயை உண்டாக்கி, கையிலுள்ள மெழுகுவர்த்தியை எரியவிட்டு, வர்த்தி எரிய ஆரம்பித்தவுடன், தனக்கு எதிரே வைக்கப்பட் டிருக்கும் மெழுகுவர்த்தியை நோக்கி ஓடவேண்டும்.

ஒடிச் சென்று தன்னிடம் உள்ள மெழுகுவர்த்தியைப் பொருத்தி எரியச் செய்து, பின்னர் அத&ன அணைத்துவிட்டு, தன் குழுவை நோக்கித் திரும்பவும் ஓடிவந்து, தனக்குப் பின்புறம் நின்றிருப்பவரிடம், தன்வசம் உள்ள தீப்பெட்டியையும் மெழுகுவர்த்தியையும் தந்துவிட வேண்டும்.

மேலே விவரித்தவாறு, 'ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ள மெழுகுவர்த்தியைக் கொளுத்திக் கொண்டு ஓடி, அங்கிருப்பதைக் கொளுத்திவிட்டு, பிறகு அணைத்துவிட்டு திரும்பவும் ஓடி வந்து தன் பின்புறம் உள்ளவரிடம் தந்துவிட்டு, பின்னல் போய். நின்று கொள்ள வேண்டும்.

எந்தக் குழுவில் எல்லோரும் ஒரு வாய்ப்புப் பெற்று, முதலில் செய்து முடிக்கின்றார்களோ, அந்த குழுவே வெற்றி பெற்றதாகும்.

விளையாட்டுக்குரிய விதிகள் : .

1- ஆட்டத்தில் ஒடத் தொடங்குபவர் தன்னிடம் உள்ள மெழுகுவர்த்தியை எரியவிட்ட பிறகே ஒடத் தொடங்க வேண்டும். - -

2. இடை வழியிலே மெழுகுவர்த்தி அணைந்து போனல்கூட, திரும்பவும் பற்ற வைத்துக்கொண்டு. அணைந்த இடத்திலிருந்தே மீண்டும் ஓடவேண்டும்.

3. தனியே வைக்கப்பட்டிருக்கும் மெழுகுவர்த்தி நன்றாக ஏற்றப்பட வேண்டும். எரியும்போது அணைத்துவிட்டு ஓடி வரலாம். -

4. திரும்ப ஓடிவரும் பொழுது தன்னிடம் கையில் இருக்கும் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. - -

5. யாரையும் ஏமாற்ற முயலாமல் விளையாட்டை மதித்து விளையாடினால் ஆட்டம் விறுவிறுப்புடனும் உற்சாகத்துடனும் அமையும்.

6. அணைந்து போகும் மெழுகு வர்த்தியைப் பொருத்த, யாரும் யாருக்கும் உதவி செய்யக் கூடாது. அவரவரேதான் எரியவிடவேண்டும்.