பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/நாம் இருவர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


15. நாம் இருவர்

விளையாட்டில் ஆட இருக்கின்றவர்களை முதலில் இருவர் இருவராகப் பிரிக்கவேண்டும். ஆண்களாக இருந்தால் நல்லது. பெண்களும் அதில் இருந்தால், பெண்களுக்குள்ளே இருவரை (Partner)ப் பிரித்து வைப்பது நல்லது.

யாருக்கு யார் இணை என்று முதலில் தெரிவித்த பின்னர், அவரவரை அறிமுகப்படுத்தி வைத்து விட வேண்டும்.

பின்னர் அனைவரின் கண்களையும் ஒவ்வொரு. கர்சீப்பால் கட்டி மறைத்துவிட வேண்டும்

பிறகு, சத்தமில்லாமல், ஒவ்வொருவரையும் அங்குமிங்கும் நடக்கச் செய்து, தாங்கள் எங்கே நிற்கின்ருேம் என்பதை தடுமாற்றத்துடன் உணரச் செய்வது போல செய்து விடவும் வேண்டும்

சிறிது நேரம் கழித்து, உங்கள் தோழரை அல்லது உங்கள் தோழியைக் கண்டு பிடியுங்கள் என்று சக்தம் போட்டு அறிவித்து விடவேண்டும்.  இருவர் முதலில் தாங்கள் பார்ட்டினரைக் கண்டு பிடித்து ஒன்று சேர்ந்து, நாங்கள் இருவரும் கண்டு பிடித்து விட்டிோம்’ என்று முதன் முதலாக அறிவிக்கின்ற குழுவே வென்றதாக அறிவிக்கப்படும்.

குறிப்பு : 1. பங்கு பெறுபவர் அனைவரும் ஒருவருக்கொருவர் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், பெயர்களைச் சொல்லி விட்டாலே போதும். அறிமுகம் தேவையில்லை.

2. அப்பொழுது தான் அறிமுகம் ஆகின்றார்கள் என்றால், அவர்கள் பெயர்களேக் குறிப்பிட்டு அறிவித்த பின்னர், ஒரிரு நிமிடங்கள் அவர்களைக் கலந்துரையாடச் செய்யலாம்.

3. கண்களை துணியால் மறைத்துக் கட்டும் பொழுது, உண்மையிலேயே பார்வையை மறைப்பது போல கட்டிக் கொள்ள வேண்டும். அல்லது கட்டி விட வேண்டும். இதில் ஏமாற்று வேலே இருக்கக் கூடாது.

4. எல்லோரும் தங்களது கண்கள் மறைக்கப் பட்டிருக்கும் பொழுது,கைகளை முன்புறமாக நீட்டித் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், எதிரே யாராவது தென்பட்டால், அவர்களே வேண்டுமென்றே கட்டிப் பிடித்துத் கொள்வதோ அல்லது எட்டிப் பிடித்துக் தள்ளுவதோ தவறு. இந்த சம்யத்தில் மிகவும் பெருந்தன்மையுள்ளவர்களாக எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும். 

3. தங்களது தோழரை அல்லது தோழியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில், பெயர்களைக் கூறியவாறு திரிகிற காட்சி, பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், பங்கு பெறுவோருக்கு விநோதமான அனுபவமாகவும் அமையும். இதை உணர்ந்து ஆடினால் ஆட்டம் மிகவும் உற்சாகமாக அமையும்.

6. ஒருவர் தனது தோழரைக் கண்டுபிடிதது. விட்டால், அவர்கள் அறிவிப்புக்குப் பிறகு சரியானதென்று கண்டு பிடித்தவுடனே ஆட்டத்தை நடத்துபவர், விசில் மூலமோ அல்லது வேறு ஒலி மூலமாகவோ முடிவை அறிவித்து விடவேண்டும்.