உள்ளடக்கத்துக்குச் செல்

மகாகவி பாரதியார்/"செந்தமிழ் நாடென்னும்"

விக்கிமூலம் இலிருந்து


பாரதியார்
"செந்தமிழ் நாடேன்னும் போதினிலே"
[என்ற பாடல் உற்பத்திக்குக் காரணம்.]



தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்க்கவிகள் தந்தால்
அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று,
சான்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் உரைத்தார்.
தேன்போற் கவிஒன்று செப்புகநீர் என்று
பலநண்பர் வந்து பாரதி யாரை
நலமாகக் கேட்டார்; அதற்கு நமதையர்,
என்கவிதான் நன்றா யிருந்திடினும் சங்கத்தார் [தான்
புன்கவிஎன் றே சொல்லிப் போட்டிடுவார்; போட்டால்
சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும் ! ஆதலினால்,
உங்கட்கு வேண்டுமெனில் ஓ துகின்றேன் என்றுரைத்
அந்தவிதம் ஆகட்டும் என்றார்கள் நண்பரெலாம். [தார்!
'செந்தமிழ் நாடென்னும் போதினி லேயின்பத்
தேன்வந்து பாயுது காதினி லே' என்
றழகுத் தமிழ்நாட்டை அப்படியே செஞ்சால்
எழுதி முடித்தார் ! இசையோடு பாடினார் !
காதினிக்கும் கல்ல கருத்தினிக்கும் பாட்டிந்நாள்
மேதினியிற் சோதி விளக்கு !