மகாகவி பாரதியார்/பாரதியார் புகழ்!
Appearance
பாரதியார் புகழ்
(தில்லானா மெட்டு)
இராகம்: நாட்டை]
[தாளம்: ஆதி
பல்லவி
தோயுந்தேன் கவிதரு நம்
சுப்ரமண்ய பாரதியைச் செப்புக தினம் !
(தோ)
அநுபல்லவி
சுதை நிலாவை நாம் எலாம் மிக வின்பத்தால்
சொந்தத் தமிழ் நாடாம் இந்தப் பெருவானில்
(தேச)
சரணம்
ஓய்ந்த தமிழரிடம் உணர்வினை யூட்டும் !
உலக மனிதர் சமம் எனநிலை நாட்டும் !
தீய மறை வகற்றி அகத் தெழில் கூட்டும் !
செகம் பெறும் ஒவ்வொரு பாட்டும் !
தாகிடஜெம் தாகிடஜெம் தகும் தரிகிடதக தத்தரிகிடதக
தளாங்கு தகதிகதொக ததிக்கிணத்தோம்—தளாங்கு
(தோ)