மங்கையர்க்கரசி
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
மங்கையர்க்கரசி
கவிஞர் சுரதா
சுரதாபதிப்பகம்
சென்னை–600 078
- முதற் பதிப்பு : பிப்ரவரி, 1950
இரண்டாம் பதிப்பு : பிப்ரவரி, 1978.
- முதற் பதிப்பு : பிப்ரவரி, 1950
- கல்லாடன் தயாரிப்பு
- கல்லாடன் தயாரிப்பு
- விலை ரூ. 3–00
- சுரதா பதிப்பகம்
56–அ, டாக்டர் லட்சுமணசாமி முதலியார் சாலை,
கலைஞர் கருணாநிதி நகர்,
சென்னை–600078.
- சுரதா பதிப்பகம்
- அச்சிட்டோர் : ஜீவன் பிரஸ், சென்னை–600 005.
இதோ ஒரு சுரதா
மங்கையர்க்கரசி : இது சினிமாவுக்காக எழுதப்பட்ட கதை. சினிமா எடுக்கப்பட்டு ஓரளவு வெற்றியுடன் நடந்து வருகிறது.
ஒருகதை சினிமாவில் வந்தபின் அதைச் சுவடியாக அச்சிட்டு வெளியிடுவதால் மக்களிடம் சினிமா அறிவு வளரும். கதையமைப்பு, சோடிப்பு, பேச்சழகு, முதலியவற்றின் அருமை பெருமை விளங்கும்.
சினிமாவில் வந்த கதையைப் பெரும்பான்மை முதலாளிகள் அதை அப்படியே அச்சிட்டு வெளியிட எண்ணுவதில்லை. அவர்கட்குக் கதை கிடைக்கும் வகையிலும், அதை எழுதி முடிக்கச் செய்த வகையிலும், அவர்கள் கையாண்ட சூழ்ச்சிகளும், போதிய தமிழறிவின்மையும் அதற்குக் காரணமாகும்.
சுரதா எழுதிய மங்கையர்க்கரசியை, அவர் தம் பொறுப்பிலேயே சுவடியாக அச்சிட்டுத் தருகிறார். இதனால் ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய கையிருப்புத் தம்மிடம் இருப்பதாக நம்புகிறார் சுரதா. இரண்டு காரணங்களால் சுரதாவின் எழுத்துக்குச் சுரதா எழுத்தே நிகர்.
முதற்காரணம்: அவர் பிறர் எழுதியதிலிருந்து திருடுவதில்லை; கருத்தையோ தொடரையோ! தானே தோன்றிய சொற்றொடர் ஒவ்வொன்றும் இனிக்கும் கவிதைத் துணிக்கை! எடுத்துக்காட்டாக:
ஒரு கவிஞனை நல்ல முறையில் அறிமுகப்படுத்துகிறார் சுரதா:
- “இவர் கவிஞர் திலகம். காவியங்களின் தந்தை” என்று.
சர்வாதிகாரத்தை வெறுத்துப் பேசுகிறார் சுரதா :—
- “ஒரு நாட்டை மகுடங்கள் ஆட்சி செய்யக்கூடாது
- மக்கள் எண்ணம் ஆளவேண்டும்”
இரவுக்கு அழகு சேர்க்கிறார் :—
- “நட்சத்திரங்கள் தாலாட்டும் இந்த
- இனிமையான நேரத்தில்”
மற்றோரிடத்தில்,
- “அவள் சாகவில்லை, அவளுக்கிருந்த
- மரணந்தான் செத்துவிட்டது”
என்று கூறிச் சுரதா பாலைவனத்தில் “பச்சைப்பலா” வைத்தருகிறார். ஒருத்தியை வெறுத்துப் பேசுகிறான் ஒருவன். அவ்விடத்தில் சுரதா எழுதியுள்ள தொடர் ஆழ்ந்த கருத்தையும் அள்ளூறும் சுவையையும் பயப்பது.
- “மானைப்போல் பார்க்கத் தெரிந்த உனக்கு,
- அதன் மானத்தைப்போல் வாழத் தெரியவில்லையா?”
மங்கையர்க்கரசியில் எங்கும் இவ்வகை இன்பத் தொடர்களைக் காணலாம். மங்கையர்க்கரசி ஓரிடத்தில் தன் உண்மையை விளக்கியும், பிறர் மடமையை எடுத்துக் காட்டியும் பேசும் நீண்ட பேச்சு ஓர் அழகிய சிறு காப்பியமாகும்.
முதலாளிகள் கண்ணை மூடிக்கொண்டு. இதோ இந்தக் கதையை எழுதி முடிப்பீர் என்று ஒப்படைத்து விட்டால் கனகச்சிதமாக எழுதி முடித்துத்தர ஓர் எழுத்தாளர் தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் பெயர் சுரதா. அவர் வாழ்க!
14–1–1950
புதுவை
பாரதிதாசன்
உறுதியாக நம்புகிறேன்
ஸ்ரீ சுரதா அவர்களை வெகு நாட்களாக அறிவேன். பல ஆண்டுகளுக்கு முன்னரே அவருடைய கட்டுரைகள், நாடகங்கள், முதலிய வற்றை என்னிடம் காட்டுவதுண்டு. அப்போதே இவருடைய எழுத்துக்களின் உணர்ச்சியைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். நல்ல எழுத்தாளராகப் பேர் பெறக்கூடிய பல அம்சங்கள் இவருடைய கட்டுரைகளில் இருந்ததைக் கண்டு நான் பாராட்டியிருக்கிறேன்.
இந்த “மங்கையர்க்கரசி” என்னும் வசன நூலை நான் படித்துப் பார்த்தேன். இதை ஏற்கனவே திரைப்படத்தின் மூலம் மக்கள் கண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். இவருடைய வசன நடை புதுக்கோட்டதை அறிவேன். இதிலுள்ள கதையின் போக்கைப்பற்றிப் பல அபிப்ராயங்கள் இருக்கலாம். ஆனால், ஸ்ரீ சுரதாவின் வசனநடை மிகவும் போற்றற்குரியது. ஜீவன் நிரம்பியிருக்கிறது. பாத்திரத்துக்கேற்ற பேச்சு பளீரென்று வருகிறது.
நம்முடைய சுதந்திரக் குடியரசாட்சி நன்றாக நடைபெற வேண்டுமானால் திரைப்படத்தையும் நாடகத்தையும் மிகவும் புதிய முறையில் சீர்படுத்தவேண்டும். அதற்கு விருவிருப்பான நல்ல வசனங்கள் எழுதக்கூடி கூடியவர்கள் தேவை. அந்தத் தேவைக்கு ஸ்ரீசுரதா மிகவும் உபயோகப்படுவார் என்று உறுதியாக நம்புகிறேன்.
புதுப்புதுக் கற்பனைகளுடன் சுரதாவின் எழுத்து வெகு விரைவில் புகழடையவேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.
| நாமக்கல் | ஆஸ்தான கவிஞன் | ||||
| 20–1–1950 | |||||
புதுக்கோட்டைத் தங்கமாய்
நடிகர்களுக்கோர் சிங்கமாய்
விளங்கிய பி. யு. சின்னப்பா
அவர்கட்கு இந்நூலைப்
அன்புடன் படைக்கின்றேன்.
சுரதா
8–2–1978
சுரதா
8-2-1978
சூரியன் மீண்டும் உதிக்கிறது
திரைப் படங்களுக்கு, இன்று யார் வேண்டுமானாலும் உரையாடல் எழுதிவிடலாம். அவ்வாறே படங்களுக்குப் பாடல்களும் எழுதிவிடலாம். ஆனால், 1950-க்கு முன் இப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை. ஒரே ஒரு இளங்கோவன்தான் வசனம் எழுத முடியும். ஒரே ஒரு உடுமலை நாராயணகவிதான் பாடல்கள் எழுத முடியும்.
அப்படிப்பட்ட கால கட்டத்தில், சிறுவனாகிய நான் 1944-ஆம் ஆண்டு, பி. யு. சின்னப்பா, பி. கண்ணாம்பா, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் முதலியோர் நடித்த மங்கையர்க்கரசி என்னும் படத்திற்கு வசனம் எழுதும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன்.
இந்தச் சிறுவனா இப்படத்திற்கு வசனம் எழுதமுடியும்? என்று அப்போது பலர் பேசிக் கொண்டனர். ஆனால் நடிகர் சின்னப்பவோ, என் எழுத்தாற்றலைப் பாராட்டியதோடு படாதிபதிகள் பலருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய ஆதரவு மட்டும் எனக்கு இல்லாதிருக்குமாயின், நான் ஒரு வசனகர்த்தாவாகியிருக்க முடியாது.
முதன் முதலில் நான் வசனம் எழுதிய இப்படம் 3—9—1949-ல் வெளிவந்தது. அது முதல், இளங்கோவனைப் போல் நானும் ஓர் சிறந்த வசனகர்த்தா என்று பலராலும் பாராட்டப் பெற்றேன்.
இப்படத்தில் வரும் உரையாடல் மிகச் சிறந்த உரையாடல் என்று பலரும் கருதிய காரணத்தால், இதனை ஒழுங்காகத் தொகுத்துக் காலத்தை வென்ற கவிஞர்கள் இருவரின் அணிந்துரைகளோடு 1950-ல் முதல் பதிப்பாக வெளியிட்டேன். 28–ஆண்டுகளுக்குப் பிறகு இந்நூல், இரண்டாம் பதிப்பாக இப்போது வெளிவருகிறது.
இதையடுத்துப் புரட்சி நடிகர் எம். ஜி. ஆரும், பி. எஸ். சரோஜாவும் நடித்து 1953–ல் வெளிவந்த ஜெனோவா என்னும் படத்திற்கு நான் எழுதிய உரையாடல் வெளிவரும்.
8—2—1978
சுரதா
- உள்ளடக்கம்
- மங்கையர்க்கரசி/001
- மங்கையர்க்கரசி/002
- மங்கையர்க்கரசி/003
- மங்கையர்க்கரசி/004
- மங்கையர்க்கரசி/005
- மங்கையர்க்கரசி/006
- மங்கையர்க்கரசி/007
- மங்கையர்க்கரசி/008
- மங்கையர்க்கரசி/009
- மங்கையர்க்கரசி/010
- மங்கையர்க்கரசி/011
- மங்கையர்க்கரசி/012
- மங்கையர்க்கரசி/013
- மங்கையர்க்கரசி/014
- மங்கையர்க்கரசி/015
- மங்கையர்க்கரசி/016
- மங்கையர்க்கரசி/017
- மங்கையர்க்கரசி/018
- மங்கையர்க்கரசி/019
- மங்கையர்க்கரசி/020
- மங்கையர்க்கரசி/021
- மங்கையர்க்கரசி/022
- மங்கையர்க்கரசி/023
- மங்கையர்க்கரசி/024
- மங்கையர்க்கரசி/025
