மணமக்களுக்கு/மகள் கொடை
மகள் கொடை
14. பெண் வீட்டார் திருமணம் செய்து கொடுப்பதை மகட்கொடை என்பர். மகட்கொடையோடு பொருட் கொடையும் கொடுப்பர். இதை வரதட்சணை எனவும் கூறுவர். இது சமூகத்தைப் பற்றியுள்ள ஒரு தீய பழக்கம். இதை நாட்டுப் பற்றுடையோரும், சமயத் தலைவர்களும், சமூகத் தலைவர்களும் வெறுத்து
ஆண்களை விடப் பெண்கள் நன்றாகப் படிக்கிறார்கள். படித்த பெண்கள் அதிகமாகவும், படித்த பையன்கள் குறைவாகவும் காணப்படுகிறார்கள். இதனால் படித்த பெண்களுக்குப் படித்த ஆண்களைத் தேடுவதில் வரதட்சிணை அதிகமாகக் கொடுக்க வேண்டிய நிலை, இப்போது எல்லாச் சமூகத்திலும் ஏற்பட்டு விட்டது. இது பெண்ணை ஏன் படிக்க வைத்தாய்? என்று கேட்டு அபராதம் போடுவது போன்றிருக்கிறது. இது பெருந் தவறு.
பெண்ணைப் பெற்று வளர்த்துப் படிக்க வைத்து அறிவாளியாக்கி, ஒருவனுக்கு வழங்கும் பெற்றோர்களுக்கு, மணமகனாக வருபவன் நன்றி செலுத்தியாக வேண்டும். இந்த நல்ல நிலைமை தமிழகத்தில் மலர, தமிழ்ச் சமுதாயத்தினர் கடுமையாக உழைத்தாக வேண்டும்.