மணமக்களுக்கு/வாழ்த்து
வாழ்த்து
20. பெரியோர்களே! மேலும் உங்களின் அருமையான காலத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. இங்கு மேடையிலுள்ள நாங்கள் மட்டும் மணமக்களை வாழ்த்த வரவில்லை. இங்கு வந்திருக்கிற தாய்மார்களும், பெரியோர்களும் ஆகிய எல்லோரும் மணமக்களை வாழ்த்தியாக வேண்டும். அதற்கு நேரமின்மையால், நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்த்துவதாக உங்கள் எல்லோருடைய சார்பிலும் நான் மணமக்களை வாழ்த்துகிறேன்.
மணமகன், மணமகள் ஆகிய இருவரும் பன்னெடுங் காலம் நல்ல உடல் நலத்துடனிருந்து, நன்மக்களைப் பெற்று, எல்லா மொழிகளையும் ஆராய்ந்து, தமிழை ஆழமாகக் கற்றறிந்து, நன் மக்களோடு பழகி, நல்ல வழியில் பொருளைத் தேடி, சிக்கனமாகச் செலவழித்து, எஞ்சிய பொருளைச் சேமித்து வைத்து, அதையும் பல நல்ல அறச் செயல்களிலே ஈடுபடுத்தி, நாட்டுக்கும், மொழிக்கும், மக்களுக்கும், சமூகத்திற்கும் செய்ய வேண்டிய நற்றொண்டுகளைச் செய்து, நல்வாழ்வு வாழ. வேண்டுமென முழு மனதோடு வாழ்த்துகிறேன்.
வாழ்க மணமக்கள்!