மருத்துவ களஞ்சியப் பேரகராதி/D
dacrocystography : கண்ணீர் நாள ஊடுகதிர்ப்படமெடுத்தல்; கண்ணீர்ப்பை வரைவியல் : கண்ணீர் வழியும் நாளத்தை ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் படம் எடுத்து ஆராய்தல்.
dacryocystorhinostomy : மூக்கினுள் கண்ணீர் வடிய அறுவை மருத்துவம்; கண்ணீர்ப் பை-நாசி வழிதிறப்பு : மூக்குக் கண்ணிர் நாளத்தில் தடங்கல் ஏற்பட்டிருக்கும்போது, கண்ணீர்ப்பையிலிருந்து மூக்கினுள் கண்ணீர் வடியுமாறு செய்வதற்கான அறுவை மருத்துவம்.
dacryocystotomy : கண்ணீர்ப்பை கிழிப்பறுவை; கண்ணிர்ப்பை கிழிப்பு : கண்ணிர்ப்பையைக் கிழித்தல்.
dacryo : கண்ணீரின்; கண்ணீருக்குரிய; கண்ணீர்ப்பைக்குரிய, கண்ணீர் நாளம் தொடர்பான.
dacryolith : கண்ணீர் பாதைக் கட்டி; கண்ணீர்க்கல் : கண்ணீர் வழியும் பாதைகளில் கட்டி உண்டாதல்.
dacryops : கண்ணீர் ஒழுக்கு : கண்ணிலிருந்து நீர் ஒழுகும் நிலை. கண்ணிர் குழல் தளர்ச்சி. அடையும் போது, இந்த நிலைமை ஏற்படும்.
dacryorrhoea :கண்ணீர் மிகைப்பு : கண்ணிலிருந்து அளவுக்கு அதிகமாகக் கண்ணிர் வடிதல்.
dactyl : விரல் : கால் விரல்.
dactylon : இடைத்தோல் இணைப்பு விரல்; ஒட்டிய விரல்கள்; கூட்டு விரல் : வாத்தின் கால் விரல்கள் போன்று இடைத்தோலால் ஒன்று பட்டிணைந்த விரல்கள்.
dactylitis : விரல் வீக்கம்; விரல் அழற்சி : விரல் அல்லது கால் விரல் வீக்கம். எலும்புகளை முடியுள்ள சவ்வு வீங்குவதால் விரல் வீங்குகிறது. பிறவி மேக நோய், காச நோய் போன்ற.
dactylography : கைரேகை ஆராய்ச்சி : கை ரேகைகளின் அமைப்பு வடிவம், எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிமேற் கொள்வது.
dactylogryposis : விரல் முடக்கம்; விரல் வளைவு : கை அல்லது கால் விரல்கள் நிரந்தரமாக வளைந்துவிடுவது. தொழு நோய் பாதிப்பால் விரல்கள் வளைவது.
dactylology : விரல் சைகை மொழி; விரல்மொழி : ஊமைகள் செவிடர்களுடன் பேசுவதற்குப் பயன்படும் விரல் சைகை மொழி.
dactylolysis : விரல் இழப்பு; விரல் நீக்கம்; விரல் அகற்றுதல் : விரலை நீக்குதல்; விரலை வெட்டி விடுதல், அறுவை மருத்துவம் மூலம் விரலை சரிசெய்தல்.
dairy : பாற்பண்ணை.
dalkon shield : டால்கன் மூடி : பெண்களுக்கான கருத்தடைப் பொருள்; கருப்பைக்குள் வைக்கப்படும் கருத்தடைப் பொருள்.
Dalton's law : டால்கன் விதி. daltonism : டால்டானியம்.
damp proof : ஈரங்காத்தல்.
danazol : டெனாசால்.
dancing eyes : நடன விழிகள்.
dander : இறகு ஒவ்வாமை; செதில் ஒவ்வாமை.
dandrut: தலைப்பொடுகு; அசறு; பொடுகு : மண்டையில் செதிள் உதிர்தல். இது ஒரு வகைத் தோல் நோய்.
dandy fever : முடக்குக் காய்ச்சல் : கணுத்தோறும் கடும்வலி உண்டு பண்ணும் கொள்ளைக் காய்ச்சல் வகை. இதனை "டெங்கு'க் காய்ச்சல் என்றும் கூறுவர்.
danthron : டாந்த்ரான் : முகத்தை மிருதுவாக்கும் பொருள் கொண்ட ஒருவகை மருந்து. இது பேதி மருந்தாகவும் பயன்படுகிறது. இது மாத்திரைகளாகவும், திரவமாகவும் கிடைக்கிறது.
Dantrium : டான்ட்ரியம் : டாண்ட்ரோலீன் என்ற மருந்தின் வணிகப்பெயர்.
dantrolene : டாண்ட்ரோலீன் : தசைச்சுரிப்புக் கோளாறுகளைக் குணப்படுத்தும் மருந்து. கடுமையான இசிப்பு நோய், இழைமைக் காழ்ப்புக் கோளாடு, தண்டு வடக்காயம் போன்றவற்றுக்குப் பயன்படுகிறது.
Daonil : டயோனில் : கிளைபென் கிளாமைடு என்ற மருந்தின் வணிகப்பெயர். நீரிழிவு நோயாளிகளுக்கு இது கொடுக்கப்படுகிறது.
dapsone : டாப்சோன் : சல்ஃபோனிலிருந்து வழிப் பொருளாக எடுக்கப்படும் மருந்து. இது தொழுநோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படுகிறது.
Daranide : டாரானைடு : டைக்ளோர்ஃபினாமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.
Daraprim : டாராப்ரிம் : பைரி மெத்தமின் என்ற மருந்தின் வணிகப்பெயர்.
Darier's disease : டாரிடர்நோய் : வெகு அரிதாகக் காணப்படும் ஒரு பரம்பரை நோய். ஃபிரான்ஸ் நாட்டின் தோல் நோய் வல்லுநர் இதனைக் கண்டறிந்ததால், இந்தப் பெயரைப் பெற்றது.
dark : இருள்; இருண்ட.
dark adaptation : இருள் இசைவாக்கம்; இருள் தகவமைப்பு : விழிகள் அதிக ஒளியைக் கண்ணுற்ற பின்பு குறைந்த ஒளியைக் காண்பதற்கு விழித் திரை தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் காலம்.
dark field microscopy : இருள் வெளி நுண்ணோக்கல் : ஸ்பைரோகீட் நுண்ணுயிரிகளைக் கண்டறிய உதவும் பரிசோதனை முறை. கறுப்புப் பின்புலத்தில் இக்கிருமிகள் ஒளிர்வதைக் காண இயலும்.
darkground illumination : இருள் பின்னணி ஒளிர்வு.
dark reactivation : கருமை மீள் செயலாக்கம் : புற ஊதாக்கதிர் களால் அழிக்கப்பட்ட டி.என்.ஏ. தனக்குரிய நொதிப் பொருள்களால் சீராக்கிக் கொள்ளுதல்.
dartos : டார்ட்டாஸ் தசை; விரைப்பைச் சுருங்குதசை : விரைப்பையின் கீழ்ப்பகுதியில் உள்ள சுருங்கு தசை விரைகளின் வெப்பநிலையை சமப்படுத்துவதற்கு இத்தசை உதவுகிறது.
Darwinism : கூர்தல்வாதம்/உயிர் மலர்ச்சிக் கோட்பாடு : சார்லஸ் டார்வின் (1809 - 82) ஆராய்ந்து நிறுவிய உயிரினத் தோற்றக் கோட்பாடு. உயிர்கள் தங்கள் சூழ்நிலையில் உயிர் வாழ்வதற்குத் தங்களைச் சிறந்த முறையில் தகவமைத்துக் கொண்டு வளர்சிதை மாற்றம் பெற்று பரிணாமம் பெறுகின்றன என்று கூறுவது படிமலர்ச்சிக் கோட்பாடாகும்.
darwin's stubercle : டார்வின் எலும்புப் புடைப்பு : காதின் மேலுள்ள எலும்புப் புடைப்பு. இது மனிதரிடம் சிறிதாகவும் குரங்குகளிடம் பெரிதாகவும் இருக்கும்.
darwinian theory : டார்வினியக் கோட்பாடு : "அனைத்துப் பிராணி களின் வழித்தோன்றல்களும் தங்கள் பெற்றோர்களிலிருந்து சற்றே வேறுபட்டிருக்கும்" என்று சார்லஸ் டார்வின் (1809-1882) வகுத்த உயிர் மலர்ச்சிக் கோட்பாடு எனும் படி மலர்ச்சிக் கொள்கை அவ்வாறு மாறுபட்ட வழித் தோன்றல்களில் தங்கள் சூழல்களுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் திறன் உடையவை உயிர் வளர்கின்றன; மற்றவை இறந்து விடுகின்றன.
dash board fracture : உந்து பலகை முறிவு : முன் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் ஒருவர் முன்னோக்கி வீசப்படுவதால் அவரது இடுப்பு மூட்டு நழுவி துண்டாகி எலும்பு முறிவு ஏற்படுதல்.
daughter cell : சேய் உயிரணு : உயிரணு பகுபடுவதன் மூலம் உண்டாகும் உயிரணு. தாய் மூலக்கூறு கதிரியக்கத்தில் சிதைவடைவதால் உண்டாகும் ஒரு நியூக்ளைடு.
data : தரவு; தகவல்; விவரம்.
daunorubicin : டாக்னோரூபிசின் : டாக்சோரூபிசின் போன்றது. கடுமையான வெண்குட்டத்திற்குக் கொடுக்கப்படுகிறது. இது டி ஆக்சிரிபோ நியூக்ளிக் அமிலம் (DNA) உண்டாவதை தடைசெய்வதாக நம்பப்படுகிறது. இது கடுமையான எலும்பு மச்சைக் குறைபாட்டினையும், இதயத் தசைகளில் நச்சுத்தன்மையையும் உண்டாக்கக் கூடியது.
Davis gag : டேவிஸ் வாயடைப்பு : வாயை விரித்துப் பிடித்துக் கொள்வதற்காக-குறிப்பாக தொண்டையில் இருபுறமும் நிணத்திசுக் கோளங்களை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சையின்போது பிடித்துக் கொள்வதற்காக-பயன்படுத்தும் ஒரு பற்றுக் கருவி.
daxtra : தோல்நோய் வகை.
day care : பகல் நேரக் கவனிப்பு : பகல் நேரத்தில் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருக்கும் போது கைக்குழந்தைகளையும் பள்ளி வயது வராத குழந்தைகளையும் கண்காணிக்கவும், அவர்களின் தேவைகளைக் கவனிக்கவும் உள்ள வசதி.
day care centre : பகல் நேர கவனிப்பு மையம்.
day, dreaming : பகற் கனவு.
dead : இறப்பு; இறந்தவர்.
dead birth : இறந்து பிறத்தல் : கருப்பையிலே குழந்தை செத்துப் பிறத்தல். இதில் சுவாசம் இராது; வேறு உயிரியக்க அறிகுறிகளும் இருப்பதில்லை.
dead-born : இறந்து பிறந்த.
dead-cart : கொள்ளை நோய் பிண வண்டி.
dead space : வெற்றுவெளி.
day blindness : பகல் குருடு : மங்கலான ஒளியில் மட்டுமே பொருள்களை ஒன்றாகப் பார்க்க இயலும் பார்வைக் கோளாறு.
'dead-cloths : பிண ஆடை : பிணக் கோடித்துணி.
dead deal : பிணப் பலகை : பிணம் கிடத்தும் பலகை.
day hospital : பகல் மருத்துவமனை : நோயாளிகள் நாள் தோறும் வந்து செல்வதற்கான ஒரு மையம். இது பொழுதுபோக்கு வசதிகள், தொழில் முறை மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இது உளவியல் துறையில் பெரிதும் பயன்படுகிறது.
D.D.T : டிடிட்டி : டைகுளோரோடைஃபினைல் டிரைகிரோத்தான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தின் சுருக்கப் பெயர். இதனை டைக்கோஃபோன் என்றும் அழைப்பர். இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அழிக்கிறது. மிகவும் ஆற்றல் வாய்ந்த பூச்சி கொல்லி மருந்து.
dead foetus syndrome : இறந்த கருமுளை நோய் : கருப்பையில் கருமுளை இறந்துபோய் 48 மணிநேரத்துக்கு மேல் இருப்ப தால் உண்டாகும் ஒரு நோய்.
deaf : செவிடு; காது மந்தமான; கேளாத; கேள் உணர்வின்மை : 1. செவியால் கேட்க இயலாத நிலை. 2. கேட்க விரும்பாத நிலை.
deafaid : காது கேட்கும் கருவி : செவித்துணைக் கருவி.
deaf and dump : செவிட்டூமை.
deaten : பேரொலி; செவி அதிர்வொலி : கூச்சலினால் காதடைக்கச் செய்தல்.
deofening : ஒலித்தடை : ஒலித்தடைப் பொருள்.
deaf mute : செவிட்டூமை; பேச்சுக் கேள் உணர்வின்மை; கேட்பு பேச்சுப்புலன் இன்மை : பேசவும், கேட்கவும் இயலாத நிலைமையில் உள்ளவர்.
deaf mutism : செவிட்டு ஊமை; கேட்புப் பேச்சுப் புலனின்மை : ஒருவர் வாயால் பேசவும், செவியால் கேட்கவும் இயலாத நிலைமையில் இருத்தல்.
deatness : செவிடு; செவிட்டுத் தன்மை; கேட்புத் திறனின்மை; கேளாமை : கேட்கும் சக்தியை முழுவதுமாக அல்லது பகுதியாக இழந்து போன நிலை.
deamination : அமினோ நீக்கம் : அமினோ அமிலங்கள் போன்ற கரிமக்கூட்டுப் பொருள்களில் இருந்து அமினோ பொருள்களை அகற்றுதல்.
dearticulation : மூட்டு நழுவல் : மூட்டு தன்னுடைய இயல்பான இடத்திலிருந்து நழுவி விடுதல் அல்லது நகர்ந்து விடுதல்.
death : இறப்பு (சாவு); மரணம்; சாதல்; மாள்வு; உயிர் நீத்தல் : உடலின் இன்றியமையாத இயக்கங்கள் நின்றுபோதல். பொதுவாக நாடித் துடிப்பு நின்றுவிடுதல். சுவாசம் இல்லாதிருத்தல் போன்ற அறிகுறிகளால் இது கணிக்கப்படுகிறது. மூளைத்தண்டு இறுதியாகவும் குணப்படுத்த முடியாத அளவுக்கும் சேதமடைந்திருந்த போதிலும் எந்த முறைச் சுவாசத்தினாலும் இன்றியமையாத இயக்கங்கள் நடைபெறலாம். எனவே, மரணத்தைக் கண்டறிய கடுமையான சோதனைகள் நடத்தப்படுகின்றன.
death-agony : மரண துயர்; மரண வேதனை : சாத்துயர்.
death-bed : மரண படுக்கை; இறுதிப் படுக்கை.
death damp : மரண வியர்வை.
death - wound : மரணப் புண் : சாவுக் காயம்.
Debendox : டேபின்டோக்ஸ் : டாக்சிலாமின், பைரோடாக்சின், ஹைடிரோ குளோரைடு கலந்த டைசைக்ளோமின் தயாரிப்பின் வணிகப்பெயர். கரு வுற்ற தாய்மார்களின் மசக்கையின் போது வாந்தியையும் குமட்டலையும் நிறுத்தக் கொடுக்கப்பட்டு வந்தது. இப்போது இதனால் குழந்தைகள் கோர உருவுடன் பிறக்கலாம் என்று ஐயுறப்படுவதால், இதைப் பயன் படுத்துவது நிறுத்தப்பட்டு விட்டது.
debilitated : வலுக்குறைந்த; நலிவான.
debility : நரம்புத் தளர்ச்சி; வலு விழப்பு நோய் : நரம்புத்தளர்ச்சி காரணமாக உடல்சோர்வும் தசைத்தளர்ச்சியும், ஊக்கக் கேடும் உண்டாகும் நிலை.
debridement : அயற் பொருள் நீக்கம்; கசடு எடுத்தல் : ஒரு காயத்தின் சேதமடைந்த திசுவிலிருந்து அயல் பொருளை அப்புறப்படுத்துதல்.
debris : மடிவுச் சிதறல்; உண்வுத்துகள்; குப்பைக்கூளம் : உயி ரூட்டம் பெறாத திசுக்கள் அல்லது அயல் பொருள்கள் சிதைவுறுதல்.
debrisoquine : டெப்ரிசோக்குவின் : தாழ்ந்த இரத்த அழுத்தத்தைக் குணப்படத்துவதற்கான மருந்து.
debulking operation : கட்டி அறுவைச் சிகிச்சை : பெரிய உக்கிரமான கட்டித் திரட்சிகளை வெட்டி எடுத்துக் குறைத்தல்.
Decadron : டெக்காட்ரோன் : டெக்சாமெத்தாசோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
Deca Durabolin : டெக்கா டுராபோலின் : ஆண்பால் செயற்கை இயக்குநீர் உயிர்ப்பொருளின் வணிகப் பெயர். இது நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. புற்றுநோய் உயிரணுக்கள், 'ஊஸ்டிரோஜன்' என்ற பொருளை எடுத்துக் கொள்வதைத் தடுக்கிறது.
decalcification : சுண்ணகமகற்றுதல்; பற்சுண்ணம் நீக்கம்; சுண்ணம் எடுத்தல் : பல் சொத்தையை அகற்றுதல், கால்சியம் வளர்சிதை மாற்றுக் கோளாறுகளில் எலும்பை அகற்றுதல் போன்று, கனிம உப்புகளை நீக்குதல்.
decannulation : உயிர்ப்பு உதவும் குழாய் நீக்கம் : அறுவை உயிர்ப்புக் குழாயை அகற்றுதல்.
decant : வடித்திறுத்தல்; இறுத்தல் : வண்டலை அடியில் படிய விட்டு, திரவத்தை மட்டும் வடித்து இறுத்தல்.
decantation : வடித்து வடிகட்டல்; வடித்து இறுத்தல்.
decapitate :தலைநீக்கல்; தலைகொய்தல்.
decapitation : தலை வெட்டல்; தலைவெட்டு; தலை கொய்வு; தலை அகற்றல்; தலை சீவல் : உடலிலிருந்து தலையைத் துண்டித்து வேறாக எடுத்தல்; தலையை வெட்டுதல், எலும்பின் தண்டிலிருந்து தலைப் பகுதியைத் தனியாக பிரித்தெடுத்தல்.
decapsulation : தோலுறை நீக்கம்; கூடு எடுத்தல் : மென்தோல் பொதியுறையினை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.
decarboxylase : டீகார்பாக்சிலேஸ் : அமினோ அமிலங்கள் போன்ற கூட்டுப் பொருள்களிலிருந்து கார்பன் டையாக்சைடு விடுபடுவதற்கு ஊக்குவிக்கிற ஒரு செரிமானப் பொருள்.
decay : சிதைவுறுதல்; மரித்தல்; திசுமரித்தல்; திசு அழுகல்; திசுச் சிதைவு : கரிமப்பொருள் சிதைவுறுதல்; ஒர் அணு கதிரியக்க முறையில் சிதைவுறுதல்.
decerebrate : மூளை இயக்க நிறுத்தம்; முளியம் : மூளை செயற்படுதல் இல்லாதிருத்தல்; ஆழ்ந்த உணர்வற்றநிலை; ஒரு நோயாளியின் நான்கு உறுப்பு வாதத்திற்கு உட்பட்டு நோயாளி உணர்வற்று இருக்கும்நிலை. இது பெருமூளை கடுமையாகச் சேதமடைந்திருப்பதைக் குறிக்கிறது.
decerebrate position : உணர்விழப்புநிலை : மூளைத்தண்டின் அடிப்பகுதியில் அழுத்தம் காரணமாக ஒரு நோயாளி உணர்விழந்துள்ள நிலை. இந் நிலையில் கைகள் வளைந்து இருக்கும், உட்புறம் சுழலும்; உள்ளங்கால் வளைந்து இடுப்பு நீண்டிருக்கும்.
decibel : பதின்பெல் : மின்விசை அல்லது ஒலிவிசை போன்ற இருவிசைகளின் விகிதத்தை அளவிடுவதற்கான ஒர் அலகு. இது, 'பெல்' எனப்படும் ஒலிகள்-மின்னோட்டங்கள் முதலியவற்றின் செறிவினை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவின் பத்தில் ஒருபகுதி.
Decicain : டெசிக்கெய்ன் : அமித்தோக்கெய்ன் ஹைடிரோ குளோரைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.
decidua : கருச்சவ்வு; கருப்பை உட்படலம்; கருவுரியம் : குழந்தைப் பேற்றுக்கு பிறகு வெளிப்படும் மெல்லிய கருச்சவ்வு.
decidual space : கருச்சவ்வு இடைவெளி : கருவுற்ற தொடக்க நிலையில் எஞ்சியிருக்கும் கருப்பை உட்குழிவு.
deciduoma : கருப்பைக்கட்டி : கருச்சவ்வுத் திசு அடங்கியுள்ள ஒரு கருப்பைக் கட்டி.
deciduous : பல் விழுதல் : பற்கள் மீண்டும் முளைப்பதற்காகப் பருவத்தில் விழுதல். decimal : பதின்முறை.
Declimax : டெக்ளினாக்ஸ் : டெப்பிரிசோக்குவின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
decoction : வடிநீர்(கஷாயம்) : தாவரப் பொருள்களை நீருடன் சேர்த்துக் கொதிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு திரவத் தயாரிப்பு.
decolourization : நிற நீக்கம்.
decompensation : சரிநிலைக் காப்புச் செயலின்மை; ஈட்டுத் திறன் இழப்பு; செயலிழப்பு : இதய நோய்களில் சரிநிலைக்காப்பு செயற்படாதிருத்தல்.
decomposed : அழுகிய.
decomposition : ஆக்கச் சிதைவு : 1. சிதைதல், அழுகுதல். 2. ஒரு கூட்டுப் பொருளை அதன் ஆக்கக் கூறுகளாகப் பிரித்தல்.
decompression : அழுத்தம் தளர்த்தல்; அழுத்தக் குறைப்பு; அழுத்த நீக்கம் : காற்றுப்புகாப் பேழை மூலம் நீரடியிலும், பிற இடங்களிலும் உழைப்பவர்களுக்கு நேரும் அழுத்த மிகுதியைத் தடுத்தல்.
decompression sickness : அழுத்தத் தளர்வு நோய் : ஆழ் கடலில் மூழ்கியவர்களுக்கும், மீகாமர்களுக்கும் அழுத்தக் குறைவினால் உண்டாகும் ஒரு வகை நோய்.
deconditioning : உடல் தகுதி இழப்பு : உகந்த அளவு உடற் பயிற்சி செய்யத் தவறுதல் காரணமாக உடல் தகுதியை இழத்தல்.
decongestants : மூக்கடைப்பு நீக்க மருந்து; சளி இளக்கி : மூக் கடைப்புகளைக் குறைக்கும் அல்லது நீக்கும் மருந்து. இதனை வாய்வழியாக உட்கொள்ளலாம்; அல்லது துளிகளாக விடவோ, தெளிக்கவோ செய்யலாம்.
decongestion : மூக்கடைப்பு நீக்கம்; அடைப்பு நீக்கம்; திரட்சி நீக்கம் : முக்கடைப்பினை நீக்குதல்.
decontamination : நச்சு நீக்கம் : தீங்குவிளைவிக்கும் பொருள்களை நீக்குதல்.
decortication : புறப்பகுதி நீக்கம் : ஒர் உறுப்பின் மேலுறையை அல்லது புறப்பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்குதல்.
decrement : குறைமானம் : 1. பொருளின் அளவு அல்லது வீரியம் குறைதல். 2. திரும்பத் திரும்ப ஏற்படும் துண்டுதலுக்கு நரம்பு மண்டலத்தின் துலங்கல் குறைதல். 3. காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை குறைதல்.
decreptitude : முதுமை தளர்ச்சி.
decultus : கிடை நிலை; கிடைவு. decussation : நரம்பிழைக் குறுக்கு வெட்டு; குறுக்குப்பின்னல் : நரம்பிழைகள் ஒரு புள்ளியில் குறுக்காக வெட்டுதல். கண் நரம்பிழைகள் இவ்வாறு அமைந்திருக்கும்.
dedifferentiation : தனிப்பண்பு நீக்கம் : தனிச் சிறப்பான அம் சங்களை நீக்கி மீண்டும் மூல வடிவத்துக்குக் கொண்டுவருதல்.
deep : ஆழ்; ஆழ்ந்த.
defaecation : மலநீக்கம்; மலக்கழிப்பு; மலப்போக்கு : மலத்தை நீக்குதல்.
defect : குறை.
defence : நோய் எதிர்ப்பு; அரண்; காப்பு : 1. ஒரு நோயை எதிர்த் தல். 2. காயத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை.
defervescence : வெப்பத் தணிவு; இறக்கம்; காய்ச்சல் தணிப்பு : காய்ச்சலின் அறிகுறிகள் தளர்வுறுதல்.
defibrillation : நுண்ணிழைப் பிரிவுத் தடுப்பு; உதறல் நீக்கல்; குறுநடுக்கமெடுப்பு : இதயத் தசை நார் நுண்ணிழைகளாகப் பிரிவதைத் தடுத்தல்.
defibrillator : நுண்ணிழைப்புப் பிரிவுத் தடுப்பி; உதறல் நீக்கி; குறுநடுக்கமெடுப்பு : தசைநார் நுண்ணிழைகளாகப் பிரிவதைத் தடுக்கும் மருந்து.
deficiency : குறைவு.
deficient : குறைபாடுடைய.
deficiency disease : குறைபாட்டு நோய்; பற்றாக்குறை நோய் : நல்ல உடல்நலத்துக்கு இன்றியமையாத பொருள் உணவில் குறைவாக இருப்பதால் உண்டாகும். குறிப்பாக, வைட்டமின்கள் குறைபாட்டினால் ஏற்படும் நோய்.
deficient : குறை.
definition : வரையறை : 1. ஒரு நோயின் செயல் முறையின் வரையறைகளைத் துல்லியமாக அறுதியிடுதல். 2. ஊடுகதிர் ஒளிப் படச்சுருளில் உருக்காட்சிகளைப் பதிவு செய்தல்.
deformity : ஊனம்.
degeneration : இனச்சிதைவு; திசு அழிவு; திசு செயலிழப்பு; நலிவு; அழிவு : திசுக்கள் சீர் கேடுற்று கீழ்நிலை நோக்கித் தாழ்வுறுதல். உயிர்கள் இனப்பண்பு அழிந்து கீழ்நோக்கி மடங்கிச் செல்லுதல். இது மேல் நோக்கிய உரு மலர்ச்சிக்கு எதிர் மாறானது.
degloving : தோலுரிப்பு : அடிநிலைத் திசுவிலிருந்து தோலைத் தனியாகப் பிரித்தெடுத்தல்.
degradation : தரக்குறைவு; நிலை இறக்கம்; நிலையழிவு; இயற்குறைவு : இயற்பியல், வளர் சிதை அல்லது வேதியல் மாற்ம் காரணமாகச் சற்று எளிமையான வடிவத்துக்குத் தரங்குறைதல்.
dehiscence : காயப்பிளப்பு; வெடிப்பு : ஒரு காயத்தைப் பிளத்தல் அல்லது கட்டியை உடைத்தல்.
dehydrocholesterol : டிஹைடிரோகொலஸ்டிரால் : தோலில் காணப்படும் ஒருவகை ஸ்டிரால். இது ஒளிப்பிறக்கம் காரணமாக இயல்பூக்கம் ஏற்பட்டபிறகு "D" வைட்டமினாக உருவாகிறது.
dehydration : நீரிழப்பு; உடல் வரட்சி; உடல் நீர்க்குறை; நீர் வற்றல்; நீரின்மை; வற்றல் : உடலிலிருந்து திரவம் அளவுக்கு மீறி வெளியேறி விடுவதால் உண்டாகும் நிலை. உடலிலிருந்து வெளியேறும் திரவத்தின் அளவுக்குச் சமமான அளவு திரவம் உடலுக்குள் செல்லா திருப்பதால் இந்நிலை உண்டாகிறது. இரத்தப் போக்கு, வயிற்றுப்போக்கு, அளவுக்கு அதிகமான வியர்வை, வாந்தி போன்றவை பொதுவாக இந்தச் சமநிலையைச் சீர்குலைக்கிறது.
dehydrocholic acid : டிஹைடிரோகோலிக் அமிலம் : ஈரலிலிருந்து பித்தநீர் உற்பத்தியாவதைத் தூண்டுகிற ஒரு பித்தநீர்உப்பு.
dehydrocorticosterone : டிஹைடிரோகார்ட்டிகோஸ்ரெடரோன் : அண்ணிரகப் புறணியிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட உடலியல் இயல்பூக்க இயற்கை இயக்குநீர்.
Dejans' syndrome : டிஜான்ஸ் நோய் : கன்னத்தில் ஏற்படும் வலி, உணர்விழப்பு, கண்விழிப் பிதுக்கம், இரட்டைப் பார்வைக் கோளாறு. இது கண் குழித் தளத்தில் ஏற்படும் ஒரு நைவுப் புண்ணைக் குறிக்கிறது. ஃபிரெஞ்சு கண்மருத்துவ அறிஞர் எம்.சி. டிஜான்ஸ் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
dejavuphenomenon : வலிப்பு நோய்க்கனவு நிலை : சிலவகைக் காக்காய் வலிப்பு நோயின் போது ஏற்படும் கனவு நிலை. இதில் எல்லா நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்தது போன்று அறிமுகமான நிகழ்வுகள் என்ற உணர்வு ஏற்படும்.
dejection : மனச்சோர்வு : குடற்கழிவு; மலம் மனம் கிளர்ச்சியின்றி சோர்ந்திருக்கும் நிலை.
delay : தாமதம்; சுணக்கம்.
delinquent : பிழையாளி.
delinquent juvenile : இளம் பிழையாளி.
deliquescent : கசிவுறுதல்; நீர்ப்பு : காற்று வெளியில் ஈரத்தை உறிஞ்சிக் கசிவுற்று திரவமாதல்.
delirious : சன்னி சார்ந்த; அறிவு நிரம்பிய : மூளைக்கோளாறினால் ஒருவகை மயக்க வெறி கொண்ட delirium : சன்னி; பிதற்றல்; மனத் தடுமாற்றம்; பதைப்பு : வெறிப் பிதற்றலான நிலை. அதிகமான காய்ச்சல், மனநோய் நிலைகளில் இது உண்டாகும்.
delirium tremens : நடுக்க மூளைக் கோளாறு; குடிப்பழக்கம்; பிதற்றம்; நடுக்குச்சன்னி : அளவுக்கு மீறிய குடியினால் ஏற்படுகிற வலிப்பு அல்லத நடுக்கத்தடன் கூடிய வெறிப் பிதற்றலுள்ள மூளைக்கோளாறு.
delivery : பிள்ளைப்பேறு; ஈனுதல்; குழந்தை வெளிப்பாடு; பிறப்பு.
delivery, premature : குறை பிறப்பு.
delta sign : ‘டெல்டா' குறியீடு : சிறுமூளைச் சிரைக் குழிவுப் புழைக் குருதியுறைவில் காணப்படும் ஒரு நிரப்புக் கோளாறு.
Deltacortril : டெல்ட்டாகோர்ட்டிரில் : பிரட்னிசோலோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
deltonism : நிறமயக்கம்; நிறப் பார்வையின்மை; நிறக்குருடு : பச்சையையும் சிவப்பையும் வேறு பிரித்தறிய இயலாத கோளாறு நிலை.
delusion : மருட்சி; தீரிபுணர்வு; எண்ண மயக்கம்; மாறுகோள் : ஒருவரின் பண்பாட்டுக்கும்; பழக்கத்திற்கும், அறிவுத்திறனுக்கும் முரணான ஒரு போலி நம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் காரண காரியங்களைக் கூறி மாற்றுவது கடினம். பல்வேறு உளவியல் நோய்களின்போது இந்த அறிகுறி தோன்றக்கூடும் குறிப்பாக, முரண் மூளை நோய், அறிவுப் பிறழ்ச்சி, முதுமைத் தளர்ச்சி போன்ற நிலைகளில் இது ஏற்படும்.
demarcation : (திசு எல்லை) வரையறை; வேற்றுமைக் கோடு; வரையறுத்தல் : நோயுற்ற திசுக்களும் ஆரோக்கியமான திசுக்களும் சந்திக்குமிடத்தில் இரண்டுக்குமிடையில் எல்லை குறித்தல்.
demented : அறிவு குழம்பிய; பைத்தியம் பிடித்த : மூளைத் தளர்ச்சியால் அறிவு குழம்பிய நிலை.
dementia : மூளைக் குறை; மூளைக் கேடு : மனத்தளர்வால் ஏற்படும் பைத்திய நிலை.
demorgraphy : சமுதாய நிலை ஆய்வு; மக்கள் நிலை மதிப்பீடு; மக்களியல் : மக்களை தொகை பற்றிய, குறிப்பாக மக்கள் தொகை, மக்கள் தொகைக்கட்டமைப்பு, மக்கள் தொகையின் இடப்பரவல் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்களை அறிவியல் முறையில் ஆய்வு செய்தல்.
dementia : அறிவுக் குழப்பம்; முதுமை மறதி : மனத்தளர்ச்சி யினால் உண்டாகும் அறிவு குழம்பிய பைத்தியநிலை. இதனால், நினைவாற்றல் குறையும். தன்னைக் கவனித்துக் கொள்ளும் திறன் குறையும்.
demethlchlortetracycline : டிமெத்தில்குளோர் டெட்ராசைக்கிளின் : டெட்ராசைக்ளின் மருந்து வகைகளில் ஒன்று.
demonstration : செயல்விளக்கம்.
Demser ; டெம்செர் : மெட்டிரோசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
demus cent : நோயாற்றும் மருந்து; எரிச்சல் அடக்கி; உறுத்தல் அடக்கி; இளக்கி : நோயைத் தணிக்கும் மருந்து. இது வழுவழுப்பான திரவம். இது எரிச்சலை நீக்கும்; வீக்கத்தைக் குறைக்கும்.
demyelination : மையலின் நீக்கம் : நரம்பு இழைகளின் மேலுறை யிலிருந்து மையலின் என்னும் வெண்ணிறக் கொழுப்புப் பொருளை அழித்தல்.
demyelinization : நரம்பிழை உறையழிவு : நரம்பிழைகளைச் சுற்றியுள்ள மேலுறைகள் அழிந்து போதல். அணு உள்ளரிக் காழ்ப்பின் போது இது உண்டாகும்.
denaturation : புரத மாற்றம்; இயல் முறி : செயல் முறையை இழப்புக்கு வழிசெய்யும் மிதமான வெப்பம் மூலம் புரதங்களை மாற்றுதல்.
dendrite : இழைமப் பிரிவு : ஒரு நரம்பு உயிரணுவின் உடற்பகுதி யிலிருந்த கிளையாகப் பிரியும் இழைமங்களின் ஒரு பிரிவு.
dendritic ulcer : இழைமப் புண்; கிளையோட புண் : விழி வெண் படலத்தில் வரிவரியாக ஏற்படும் சீழ்ப்புண். இதனால், தேமல் படர்ந்து மரம் போன்ற கிளைப் பிரிவுகள் உண்டாகிறது. ஐடோக் சூரிடின் என்ற மருந்தின் மூலம் இது குணமாக்கப்படுகிறது.
denervation : நரம்புத் துண்டிப்பு; நரம்பு எடுப்பு; நரம்பிழப்பு : நரம்புத் தொடர்பினைத் துண்டிக்கும் முறை. ஒரு நரம்பில் ஏற்படும் அடைப்பினை நீக்குவதற்கு இவ்வாறு செய்யப்படுகிறது.
dengue : மூட்டுவலிக் காய்ச்சல்; 'டெங்கு' காய்ச்சல் : மூட்டுகள் தோறும் கடுமையான நோவு உண்டு பண்ணக்கூடிய கொள்ளை காய்ச்சல். தலைவலியும் கண் சிவப்பாதலும், முதுகிலும் மூட்டுகளிலும் கடுமையான வலியையும் உண்டாக்கும். இந்நோய் ஒவ்வொரு முறை தாக்கும்போது 3-6 நாட்கள் நீடிக்கிறது. இது வெப்ப மண்டலங்களில் ஒரு வகை கொசுவினால் உண்டாகிறது. இதே கொசு மஞ்சள் காய்ச் சலையும் உண்டாக்குகிறது.
denitrogenation : நைட்ரஜன் நீக்கம் : ஒருவரின் உடம்பிலிருந்து நைட்ரஜனை நீக்குதல். இதன் மூலம் 100% ஆக்சிஜன் சுவாசிப்பதற்கு வழிவகுக்கப் படுகிறது.
Dennis Browne splints : எலும்பு வரிச்சல் : பிறவியில் ஏற்படும் கோணக்காலைச் சரிப்படுத்துவதற்கு எலும்பைக் கட்டப் பயன்படும் வரிச்சல். இது உலோகத்தினால் செய்யப்பட்ட பாதத்தைக் கொண்டிருக்கும். இதனுடன் குழந்தையின் பாதம் இணைக்கப்பட்டிருக்கும்.
Denny-Brown neuropathy : டென்னி-பிரவுன் நரம்புக் கோளாறு : நரம்பு மண்டலம் நேரடியாகத் தொடர்பு கொள்ளாதிருக்கிற உக்கிர வேகம் தொடர்பான நரம்புக் கோளாறுகள் மற்றும் தசை நலிவுகள்.
dense granule : அடர் துகள் : ADP, ATP, கால்சியம், பைரோ பாஸ்பேட், செரோட்டோனின் ஆகியவை அடங்கியுள்ள தகட்டணுக்களிலுள்ள ஒரு வட்டவடிவச் சேமிப்பிடம்.
densitometer : செறிவு மானி : 1. பாக்டீரியா வளர்ச்சியை அள விடுவதற்கான ஒரு கருவி. 2. ஊடுகதிர் ஒளிப்படத்தின் ஒளியியல், செறிவினை அளவினை அளவிடுவதற்கான ஒரு கருவி.
density : அடர்த்தி; அடர்வு.
dental : பல்.
dental plaque : பல் கரை : பற்களைச் சுகாதார முறையில் துப்புரவாக வைத்துக் கொள்ளாத தன் காரணமாகப் பற்களில் பாக்டீரியாக்கள் திரண்டு காரையாகப் படிதல்.
dentate : பல்லுள்ள : பற்களைக் கொண்டிருக்கிற.
denticle : சிறுபல்.
dentifrice : பற்பசை; பற்பொடி : பல்துலக்க உதவும் பொருள்.
dentine : பற்காழ்; பல்திசு : பல்லின் பெரும் பகுதியான காழ்க்கூறு. பற்களில் உண்டாக்கப் பட்டிருக்கும் எலும்பு போன்ற பல் திசு.
dentist : பல் மருத்துவர்.
dentition : பல் முளைப்பு; பல் அமைவு; பல் அமைப்பு : பல் வரிசையைக் குறிக்கிறது. மனிதரிடம் பருவத்தில் வாழத்தக்க பற்கள் பாற்பற்கள் எனப்படும். இவற்றின் எண்ணிக்கை பொதுவாக 20 வயது வந்தவர்களுக்குப் பொதுவாக 32 பற்கள் உள்ளன. இவை இரண்டாம் நிலைப் பற்கள் எனப்படும்.
denture : பல் தொகுதி; கட்டுப் பல்; பற்கட்டு : செயற்கைப் பல் தொகுதி.
denudation : புறணி நீக்கம்; தோல் நீக்கம் : அறுவைச் சிகிச்சை மூலம் அல்லது நோய்க்குண நிலை மூலம் காப்புப் படலத்தை அல்லது உறையை நீக்குதல்.
Denver shunt : டென்வர் தடமாற்றம் : வயிற்று உறுப்பு உறை சார்ந்த சிரையில் தடமாற்றம். இது மகோதரத்தைத் தளர்த்தி, சிறு நீரகத்தின் செயற்பாட்டை மேம்படுத்துகிறது.
deodorant : மணமகற்றும் மருந்து; நாற்றம் போக்கி; நாற்றம் அகற்றி; வாடை முறி : அருவருப்பான வாசனையை அகற்றக் கூடிய ஒரு பொருள். பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு, ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை. காயங்களின் நாற்றத்தை அகற்ற இவை பயன் படுகின்றன.
deontology : மருத்துவ அறிவியல் : மருத்துவம் பற்றிய ஒழுக்கவியல்.
deossification : எலும்பு கனிம நீக்கம் : எலும்பிலிருந்து கனிமப் பொருள் இழக்கப்படுதல் அல்லது நீக்கப்படுதல். deoxycortone acetate : டியாக்சிக் கோர்ட்டோன் அசிட்டேட் : குண்டிக்காய்ச் சுரப்பியின் மேலுறையில் சுரக்கும் முக்கியமான இயக்குநீர் (ஹார்மோன்). இது, சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. முன்னர், அடிசன் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு இது முக்கியமாகப் பயன்படுத்தப் பட்டது.
deoxygenation : ஆக்சிஜன் நீக்கம் : ஆக்சிஜனை நீக்கி விடுதல்.
deoxyribonucleic acid : டிஆக்சி ரிபோநீயூக்ளிக் அமிலம்(டி.என்.ஏ) : உயிரணுக் கரு மையத்திலும் நோய்க் கிருமிகளிலும் காணப்படும் இனக்கீற்றுகள் 'குரோமோசோம்' எனப்படும் சிக்கலான மூலக்கூறுகள். இவை மரபுப் பண்புகளை வழிவழியாகக் கொண்டு செல்கின்றன.
deoxyribose : டி ஆக்சிரிபொஅஸ் : டி.என்.ஏ-இன் பகுதியாக இருக்கும் ஒரு பென்டோஸ் சர்க்கரை.
department: துறை;புலம்.
department, casuality : அவசர நோயகம்; விரைவு மருத்துவத் துறை; அவசர மருத்துவப் பிரிவு.
department, orthopaedic : முட நீக்கியல் துறை.
dependence : பழக்க அடிமை : தவறான பொருள்களைப் பயன் படுத்தும் பழக்கத்துக்கு அடிமைப் பட்டிருக்கும் நிலை. போதை மருந்து போன்ற பொருள்களை அடிக்கடிப் பயன்படுத்தும் பழக்கத்துக்கு அடிமைப்பட்டிருத்தல்.
depersonalization : ஆளுமை இழப்பு உணர்வு : ஒருவருக்குத் தன்னுடைய ஆளுமையை இழந்து விட்டதாகத் தோன்றும் அடிமை மனப்பான்மை. முரண் மூளை நோய், மனச் சோர்வு போன்ற நிலைகளில் இந்த உணர்வு ஏற்படும்.
depigmentation : நிறமி நீக்கம் : வெண்குட்டநோயில் போன்று இயல்பான நிறமி இழக்கப்படுதல் அல்லது நிறமி நீக்கப் படுதல்.
depilation : முடி அகற்றல்; முடி நீக்கம்.
depilatories : மயிர் நீக்கம்; மயிர் பிடுங்கல்; முடியகற்றல் : முடி களைதல்.
depiletion : செறிவுக்குறைப்பு; வெறுமையாக்கல் : உடலிலிருந்து இரத்தம், நீர்மங்கள், அயம், கொழுப்பு, புரதம் போன்ற பொருள்களை நீக்குதல்.
depllatories : மயிர் நீக்கும் மருந்துகள்; மயிரழிப்பி : உடலில் அளவுக்கு அதிகமாகவுள்ள மயிரினைத் தற்காலிகமாக நீக்கும் மருந்துகள். பேரியம் சல்ஃபைடு இந்த வகையைச் சேர்ந்தது.
Depixol : டெப்பிக்சால் : ஃபுளுப் பெந்திக்சால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
depolarisation : முனைப்பு நீக்கம் : உயிரணுச் சவ்வினூடே இயல்பான ஆற்றலை எதிமாறாக்குதல். இதனால் சோடியம் உட்செல்ல வழி ஏற்படும்.
deposit : படிவு : 1. ஒரு படிவுப் பொருள் அல்லது வீழ்படிவு. 2. உடலின் ஏதேனும் பகுதியில் திரளும் பொருள்.
depot : சேமிப்பிடம்; சேமமனை.
depot preparation : கசிவு மருந்து : ஊசிக் கருவியிலிருந்து மெல்ல மெல்லக் கசிந்து வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு மருந்து மெத்தில் பிரட்னி சோலோன், மேட்ரோக் சிபிரோ ஜெஸ்டிரோன் என்ற இந்தவகை மருந்துகள்.
depression : மனச்சோர்வு; மீக்கவலை : அளவுக்கு மீறிய மனக் கவலை காரணமாக உண்டாகும் மனக்கோளாறு. இது இரு வகைப்படும்: 1. நரம்பியல் வகை, இது எதிர்வினைகளை உண்டாக்கக்கூடியது. 2. உளவியல் வகை இது உள்ளத்தில் உடனடியாக உண்டாகக் கூடியது. இந்த உணர்வுடையவர்கள், உயிர் வாழ்வது வீண் என்று கருதித் தற்கொலைக்கு முயலக் கூடும்.
deprivation : செயலிழப்பு : தேவை பகுதி அல்லது செயற்பாடு இழக்கப்படுதல் அல்லது இல்லாதிருத்தல்.
DepProvera : டெப்போப்ரோவெரா : மெட்ராக்சிப்ரோ ஜெஸ்டிரோன் அசிட்டோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
deprivation syndrome : கையறு நிலை : பெற்றோர்களால் கை விடப்படும் குழந்தைகளுக்கு இது முக்கியமாக உண்டாகிறது. இதனால், வளர்ச்சிக்குறைவு, ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பானை வயிறு, பெரும் பசி, மயிர் கொட்டுதல், எடை ஏறுதல் ஆகியவை ஏற்படுகின்றன.
deptropin citrate : டெப்டிரோப்பின் சைட்ரேட் : மூச்சுக் குழல் அடைப்பு, மூச்சுக்குழல் ஈளை நோய் (ஆஸ்துமா), மார்புச் சளி நோய் ஆகியவற்றுக்கு மாத்திரையாகவும், ஊசி மருந்தாகவும் கொடுக்கப்படும் மருந்து.
derangement : சீர்குலைவு.
Dercum's disease : டெர்க்கம் நோய் : தோலுக்கடியில் உண்டாகும் கொழுப்புக் கட்டி. இதனால் பலவிதமான வலி உண்டாகும். அமெரிக்க நரம்பியல் ஃபிரான்சிஸ்டெர்க்கம் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. derealization : திரிபுணர்வு; மாயையுணர்வு : மக்கள், நிகழ்ச்சிகள், சூழ்நிலைகள் மாறிவிட்டதாகத் தோன்றும் உணர்வு. இயல்பான மக்களிடமும் கனவுகளின்போது இந்த உணர்வு ஏற்படலாம். சிலசமயம், முரண் மூளை நோய், மனச்சோர்வு நிலைகளிலும் இந்த உணர்வு உண்டாகக்கூடும்.
dereistic : தற்காதல் நோய் : இயல்பு நிலைக்குப் பொருந்தாத சிந்தனை. இதனை தற்காதல் நோய் என்றும் கூறுவர்.
derivative : வருவிப்புப் பொருள்; வருவித்த; பெறப்பட்ட : 1. மூலப் பொருளாக இல்லாத ஒரு பொருள். 2. மற்றொரு பொருளிலிருந்து வருவிக்கப்படும் ஒரு பொருள். 3. முந்தையக் கட்டமைப்பிலிருந்த வளரும் பொருள்.
derm : மெய்த்தோல்.
derma : தோலின் அடிப்பகுதித் தோல்.
dermabra : தோல் மரு நீக்கம் : பட்டைச்சீலை மூலமாக அல்லது எந்திரவியல் முறைகள் மூலமாக தோலின் மேலுள்ள வடுக்கள், பச்சைகுத்தல் போன்றவற்றை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சை முறை.
dermal : தோல்சார்.
dermatic : dermic : தோலாலான.
dermatatrophia : தோல்சுருக்கம் : உடல்நலிந்து தோல் சுருங்குதல்.
dermatitis : தோல் அழற்சி : தோலில் உண்டாகும் வீக்கம்; தோல் தடிப்பு நோய் என்றும் கூறுவர்.
dermatocellulitis : திசு அழற்சி : தோலுக்கடியிலுள்ள இணைப்புத் திசுக்கள் வீக்கமடைதல்.
dermatocoele : தோல் மடிதல் : வீக்கமடைந்த தோலும், தோலடித் திசுவும் தளர்ந்து மடிப்புகளாகி விடும் போக்கு.
dermatoid : தோல் சார்ந்த; தோல் போன்ற; தோலில் உருவான : தோல் போன்ற அல்லது தோல் தொடர்பான.
dermatoglyphics : தோலியல்; தோல் ரேகையியல்; ரேகை ஆய்வு : விரல் நுனிகள், உள்ளங்கைகள், பாதங்கள் ஆகியவற்றின் தோலில் காணப்படும் கோடுகளை ஆராய்ந்து வளர்ச்சி முரண்பாடுகளை அறிதல்.
dematography : தோல் உட்கூற்றியல்.
dermatologist : தோலியல் வல்லுநர்; சருமவியல் மருத்துவர்; தோலியலார் : தோல் நோய்களை ஆராய்ந்து குணப்படுத்தும் வல்லுநர்.
dermatology : தோல் ஆய்வியல்; தோலியல் : தோல், அதன் கட்டமைவு, செயற்பணிகள், தோலில் உண்டாகும் நோய்கள், அவற்றுக்கான சிகிச்சை முறை ஆகியவை குறித்து ஆராயும் அறிவியல்.
dermatome : தோல் வெட்டு கருவி; தோல் செதுக்கி; தோல் வெட்டி : தோல் மாற்றுச் சிகிச்சைக்காகத் தோலைப் பல்வேறு கனஅளவுகளில் துண்டு களாக வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கருவி.
dermatomycosis : தோல் பூசண நோய் : தோலில் ஏற்படும் பூசண நோய்.
dermatomy ositis : தோல் வீக்கம்; தோல் தசையழற்சி : தோலிலும் தசைகளிலும் ஏற்படும் கடுமையான வீக்கம். இதனால், இழைம அழற்சியும், தோல் நலிவும் ஏற்படுகிறது.
dermatophytes : தோல் பூசணம் : மேல் தோலைப் பாதிக்கும் பூசண வகை.
dermatophytosis : தோல் பூசண நோய்; தோல் தாவர நோய் : பூசண வகைகளினால் தோலில் ஏற்படும் நோய்.
dermatoplasty : தோல் மாற்று அறுவைச் சிகிச்சை : காயம், அறுவைச்சிகிச்சை அல்லது நோய் காரணமாக உண்டாகும் சருமக்கோளாறினை மூடுவதற்கு உயிருள்ள தோலினை மாற்றிப் பொருத்துதல்.
dermatosis : தோல் நோய் வகை; வீக்கமிலா தோல் நோய் : தோல் நோய்களைக் குறிக்கும் பொதுவான சொல்.
dermatotherapy : தோல் சிகிச்சை : தோல் நோய்களுக்குச் சிகிச்சை யளித்தல்.
dermatotome : தோல் அறுவைக் கத்தி : 1. தோலை அல்லது சிறிய கட்டிகளை கீறிப் பிளப்பதற்கான ஒரு கத்தி. 2. ஒரு புற நரம்பு வேருக்கு நேரிணையான தோலின் பகுதி.
dermatozoonosis : ஒட்டுண்ணித் தோல் நோய் : விலங்கு ஒட்டுண்ணி மூலம் உண்டாகும் ஒரு தோல் நோய்.
dermis : உண்மைத் தோல்; உட் தோல்; உட்சருமம் : மேல் தோலுக்குக்கீழ் உள்ள தோலின் படுகை.
dermoglyphics : தோல் பிளவு ஆய்வு : விரல்கள், பாதங்கள், உள்ளங்கைகள், குதிங்கால் ஆகியவற்றிலுள் பிளவுள தோல் பிளவுகளின் அமைப்பு முறைகளை ஆராய்தல்.
dermographia : கீறல் தழும்பு; சரும வரைவியல் : மழுங்கல் ஊசி அல்லது நகம் கீறியதால் ஏற்படும் தழும்பு.
dermoid : தோல் நீர்க் கட்டி; தோலிய : பல்வேறு தோல் தொங்கல்களையுடைய தோலினால் பொதியப்பட்டுள்ள நீர்க்கட்டி. இது புருவம், முக்கு, உச்சந்தலை ஆகியவற்றில் காணப்படும். இவை வீக்கமடைந்த நோய் பீடிக்கக் கூடும்.அப்போது இவற்றை கீறி விடவேண்டியிருக்கும்.
Dermojet : டெர்மோஜெட் : தோலுக்குள் அழுத்தம் மூலம் திரவங்களைச் செலுத்துவதற்கான ஒரு கருவியின் வணிகப் பெயர். இது வலியில்லாத ஒரு முறை.
dermomycosis : தோல் காளான் நோய் : தோல் காளான் கிருமிகளால் உண்டாகும் தோல் நோய்.
Dermovate : டெர்மாவேட் : குளோபெட்டாசோல் புரோப்பியோனேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
desaturation : ஆபூரிதமாக்கம் : ஒரு பூரிதமடைந்த கரிமக் கூட்டுப்பொருளை ஒரு பூரிதமடையாத கூட்டுப்பொருளாக மாற்றுவதற்கான ஒரு செயல் முறை.
Descemet's membrane : டெஸ்ஸிமெட் சவ்வு : விழிவெண்படலத்தின் பின்பக்கப் பரப்பிலுள்ள உள்வரித்தாள் சவ்வின் ஆதாரச் சவ்வு. ஃபிரெஞ்சு உடல் உட்கூறியல் அறிஞர் ஜீன் டெஸ்ஸிமெட் என்பவரின் பெயரால் அழைக்கப்பட்டது.
desensitization : கூருணர்வு நீக்கம்; உணர்வழிப்பு; உணர்ச்சி நீக்கம் :கூருணர்வினைக் குறைப் பதற்காக அல்லது நீக்குவதற்காகக் காப்பு மூலங்களை (antigens) ஊசி மூலம் செலுத்துதல்,
Deseril : டெசெரில் : மெத்தி செர்கிடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.
deserpidine : டெசெர்ப்பிடின் : கூருணர்வைக் குறைக்கும் திறனுடைய செர்பின் என்ற மருந்துடன் தொடர்புடைய ஒரு மருந்து.
desferrioxamine : டெஸ்ஃபெரியோக்சாமைன் : ஒர் அயம் நீக்கி மருந்து. இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதற்கு அடிக்கடி இரத்தம் செலுத்துவதால் உண்டாகும் இரும்பு நச்சினை நீக்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.
desiccation : உலர்த்தல் : ஆரோக்கிய முதுகெலும்புத் தகட்டிலுள்ள நீர்த்திண்டு விளைவினைக் குறைத்தல்.
designer antibody : மாதிரித் தற்காப்புமூலம்: ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மரபணு முறைப்படி உருவாக்கப்பட்ட ஒரு நோய்த்தடைக்காப்பு புரதப் பொருள்.
desipramine : டெசிப்பிராமின் : மனச்சோர்வினை நீக்கும் ஒரு மருந்து. deslanosíde : டெஸ்லானோசைட் : இயற்கையான கிளைக் கோசைடு, இது இதய நோயைக் குணப்படுத்தும் மருந்து.
desktop hypoglycaemia : சர்க்கரைத் தாழ்நிலைக் கணிப்புத் தவறு : நோயாளியின் இரத்தத்தைப் பெறும்போதோ, அதைப் பயன்படுத்தும் போதோ நேரும் தவறுகளால் அந்த நோயாளிக்குச் சர்க்கரைத் தாழ்நிலை உள்ளது எனத் தவறாக கணிக்கப்படுதல்.
desloughing : பொருக்கு அகற்றுதல் : காயத்தின் பொருக்கினை அகற்றும் முறை.
desmopressin : டெஸ்மோப்பிரசின் : மிகுதியான சிறுநீர்ப் போக்கினை நிறுத்தும் மருந்து.
desmitis : இணைப்பிழையழற்சி; நாண் அழற்சி; பிணைய அழற்சி : இணைப்பிழையில் அழற்சி ஏற் படும் நிலைமை.
desmocyte : ஏந்தணு; தாங்கணு; தாங்கும் அணு; ஆதரவணு : பலம் தரும் திசுவணு. திசுவுக்கு ஆதாரமாக விளங்கும் அணு.
desmoid : வயிற்றுத்தசை : 1. அடுக்குத் தசையின், குறிப்பாக மலக்குடல் அடிவயிற்றின் தசைநார். 2. தசை நார்க்கட்டி அல்லது இழைநார்த் தசைக் கடடி.
desmolase : டெஸ்மோலேஸ் : ஒரு வகை நொதி. இது, ஒர் அடி மூலக்கூறாக அமைவதற்கு சில வேதியியல் குழுமங்களைச் சேர்ப்பதற்கு வினையூக்கம் செய்கிற ஒரு செரிமானப் பொருள்.
desmosome : டெஸ்மோசோம் : புறத்தோல் உயிரணுக்களுக் கிடையிலான நெருங்கிய தொடர்புடையதும், இணைப் புடையதுமான ஒரு பகுதி.
desmotomy : இணைப்பிழைப் பிளப்பு; நாண் பிளப்பு; பிணையப் பிளப்பு : இணைப்பிழையைப் பிளந்து ஆய்வு செய்தல்.
desmoplasia : ஒற்றை உயிரணு அடுக்கு அழுத்தம் : உயிர்ம உட்பிழம்புக் கட்டமைப்புக் கூறாகிய ஒர் அடர்த்தியான உயிரணுத்தாங்கி வினையூக்கம். இதில் உக்கிரமான புறத்தோல் உயிரணுக்கள், உயிரணுக்கள் ஒற்றை அடுக்காக அழுத்தப்படுகிறது. இது மார்பகத்தின் ஊடுருவும் நாளப்புற்று நோயில் முக்கியமாகக் காணப்படும்.
desoxy corticosterone : டெசோக்சிகார்ட்டிகோஸ் டெரோன் : டியாக்சிகார்ட்டோன் அசிட்டேட் என்னும் மருந்தின் வணிகப் பெயர்.
desquamation : செதிளுதிர்வு; செதிலுறிவு : செதிள் உதிர் வித்தல்.
desynchronosis : நேரத்திரிபு மூளைக் கோளாறு : ஒருவரின் தற்போதைய இடஅமைப்பு நேரத்துக்கும், அவர் பழக்கப்பட்ட நேரத்துக்குமிடையிலான வேறுபாடு காரணமாக ஏற்படும் உள்முக உயிரியல் கடிகார மூளைத் திரிபுக் கோளாறு.
detached retina : பிரிந்த பின் விழித்திரை : கண்விழியின் பின்புறத் திரையில் நிறமி மேல் தோலிழைமத்திலிருந்து நரம்புப் பின்புறத் திரையைப் பிரித்தல்.
detachment : பிரிப்பி.
detachment, Retina : விழித்திரைப் பிரிப்பு.
detergent : சலவைப் பொருள்; தூய்மையாக்கி; மாசுவகற்றி : துப்புரவு செய்யும் பொருள்; மாசு கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள்.
deterioration : நோயாளி மோசமடைதல்; நோய் மிகைத்தல்; நலக் கேடு : நோயாளியின் நிலைமை படிப்படியாக மோசமடைதல்.
determinant : தீர்வுப்பொருள் : ஒரு குறிப்பிட்ட பண்பைத் தீர்மானிக்க உதவும் கூறு.
determination : தீர்மானித்தல்; உறுதி செய்தல் : ஒரு பொருளின் இயல்புத் தன்மையை வரையறை செய்தல்.
detoxication : நஞ்சகற்றுதல்; நச்சு முறித்தல்; நச்சு நீக்கம்; நச்சுமுறி : ஒரு பொருளிலுள்ள நச்சுத் தன்மையை நீக்கும் முறை.
detritus : தேய்மானத் திரள் பொருள்; சிதை பொருள்; கசடு : உராய்வினால் வரும் நாட்படு தேய்வினால் உண்டாகும் பொருள்.
detrusor : சிறுநீர்ப்பைத் தசை : சிறுநீர்ப்பை அமைந்துள்ள தசை.
Detol: டெட்டால் : குளோரோக் சைலினால் வகையைச் சேர்ந்த நோய் நுண்மம் நீக்கும் பொருளின் வணிகப் பெயர்.
detumescence : வீக்கத் தணிவு : வீக்கம் குறைதல். திண்மைத் தணிவு.
deutoscolex : நுண்நீர்க்கட்டி : நாடாப்புழு நீர்க்கட்டியின் உள் சுவரில் உருவாகும் குட்டி நீர்க் கட்டி.
deuteranopsia : பச்சை நிறக்குருடு : நிறக்குருடு வகைகளில் ஒன்று. பச்சை நிறத்தைக் காண இயலாத நிலைமை. சிவப்பு நிறத்தையும் பச்சை நிறத்தையும் பிரித்து இனம் காண இயலாத கண் நோய்.
devascularisation : இரத்த ஊட்டக் குறைவு; குருதி ஒட்டக் குறைவு : உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அல்லது திசுவுக்கு இரத்த ஒட்டம் குறை வாக இருப்பது.
development : வளர்ச்சி. deviation : விலக்கம்; விலகுதல்; மாறுபடுதல்; திறம்புதல்.
deviation, septal : பிரிசுவர் விலக்கம்.
Devic's disease : டேவிக் நோய் : கண் நரம்புத்தசையழற்சி நோய். ஃபிரான்ஸ் நரம்பியல் வல்லுநர் டேவிக் என்பவர் கண்டறிந்த நோய்.
devil's grip : தசைவாத வீக்கம் : கொள்ளை நோய் போல் பரவும் தசைவாத வீக்கம். இதனால் விலா எலும்பில் வலி உண்டாகும். பார்க்க; பார்ன் ஹோல்ம் நோய்.
devitalisation : உயிரறற்தாக்குதல் : உயிரூட்டமளிக்கும் பண்பு அகற்றப்படுதல்.
dew : பனித்திவலை; பனித்துளி.
dewdrop appearance : பனித்துளித் தோற்றம் : இதயச் சுவர்களில் காணப்படும் மிகச் சிறிய உருண்டை முடிச்சுகள்.
deworming : குடற்புழு நீக்கல்; குடற்புழு அகற்றல்; குடற்புழு ஒழித்தல் :குடற்புழு நோயாளியின் உடலிலிருந்த குடற்புழுக்களை நீக்குதல் அல்லது அழித்தல்.
dexamethasone : டெக்சாமேத்தாசோன் : வீக்கத்தைக் குறைக்கும் கார்ட்டிசோன் என்ற பொருளைப் போல் 30 மடங்கு செயல் திறமுடைய மருந்து. சிலசமயம் மூளை இழைம அழற்சியைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது.
dexamphetamine : டெக்சாம்ஃபீட்டாமின் : ஆம்ஃபிட்டாமின் போன்ற ஒரு மையச் செயலூக்க மருந்து. சில சமயம், உடல் பருமன் நிலையில் பசியைக் குறைக்கப் பயன்படுத் தப்படுகிறது.
dexedrine : டெக்செட்ரின் : டெக்சாம்ஃபீட்டாமின் மருந்தின் வணிகப் பெயர்.
dextran : டெக்ஸ்டிரான் : இரத்தத்தில் நுண்ணிழைமங்கள் மிதப்பதற்குரிய அடிப்படை ஊனிராகிய நிணநீருக்குப் பதிலாகப் பயன்படுத்தும் பொருள். சர்க்கரைக் கரைசல்கள் ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியா வினைபுரிவதால் இது கிடைக்கிறது. இரத்தப்போக்கு, அதிர்ச்சி போன்ற நிலைகளில் 6% அல்லது 10% கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது.
dextranase : டெக்ஸ்டிரானேஸ் : சுக்ரோசிலிருந்து (கரும்பு வெல்லம்) டெக்ஸ்டிரான் உருவாவதைக் குறைக்கும் ஒரு வகைச் செரிமானப் பொருள் (என்சைம்). பல்வீக்கத்தைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது.
dextrase : டெக்ஸ்ட்ரேஸ் : டெக்ஸ்ட்ரேஸைப் பிளந்து லேக்டிக் அமிலமாக மாற்றும் குணமுடைய ஒருவகை நொதி,
dextrin : டெக்ஸ்டிரின் : மாவுப் பொருள், நீரிடைச் சேர்மப் பிரிப்பின்போது (ஹைட்ராலிசிஸ்) உண்டாகும் பன்முகச் சர்க்கரைப் பொருள். இது கரையும் தன்மையுடையது.
dextrocardia : இதய இடமாற்றம்; வல இதயம் : இதயம் மார்புக் கூட்டின் வலப்புறமாக இட மாற்றி இயற்கையிலேயே அமைதல்.
dextromethorphan : டெக்ஸ்டிரோமெத்தார்ஃபன் : இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்து. இது, மிட்டாய், பாகு வடிவில் கிடைக்கிறது.
dextroposition : வலமிருத்தல்; வலது பக்கம் அமைதல் : உடலில் இயல்பாக இடது பக்கத்தில் இருக்க வேண்டிய ஒர் உறுப்பு இயல்புத்தன்மை மாறி வலது பக்கத்தில் அமைந்திருத்தல்.
dextrose : பழச் சர்க்கரை : கரையக் கூடிய தனியொரு சர்க்கரைப் பொருள். இது உடலில் நீர் வற்றிப்போதல், அதிர்ச்சி போன்ற நிலைகளில் நரம்பு ஊசிமூலம் செலுத்தப்படுகிறது.
dhobic itch : வண்ணார் சிறங்கு; வண்ணார் படை : அரை, இடுப்பு, வயிறு, தொடை சேரும் இடத்தில் உண்டாகும் படர்தாமரை நோய். இந்நோய் சலவைத் தொழிலாளர் துணிகளை ஒன்றாக வைத்துத் துவைத்து, உலர்த்திப் பிரித்துக் கொடுக்கும் போது படைக்கு காரணியான கிருமி பரவும் என்ற நம்பிக்கையினால் பெயர் ஏற்பட்டது.
Diabenyline : டிபெனிலின் : ஃபினோக்சிபென்சாமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
diabesity : சர்க்கரைக் கொழுமம் : பருவ வயதில் துவங்கும் சர்க்கரை நோய்க்கு உடல் பருமனுக்கும் தொடர்புடைய ஒரு பொதுவான நோய்க்கிருமி.
diabetes : நீரிழிவு நோய்; சர்க்கரை நோய் : இரத்தத்திலும் சிறுநீரிலும் குறைவாகச் சர்க்கரை தோன்றும் நீரிழிவு நோய். இனிப்பு இல்லா நீரிழிவு (diabetes insipidus) எனப்படும். இரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரைச்சத்து மிகுதியாகத் தோன்றுவதால் உண்டாகும். நீரிழிவு நோயை 'சர்க்கரை நீரிழிவு' (diabetes mellitus) எனப்படும்.
diabetes insipidus : சர்க்கரையிலி நீரிழிவு : குருதியிலும் சிறுநீரிலும் சர்க்கரைச் சத்தில்லாமல் தோன்றும் நீரிழிவு நோய்.
diabetes mellitus : சர்க்கரை நீரிழிவு : குருதியிலும் சிறுநீரிலும் சர்க்கரைச் சத்து மிகுதியாகத் தோன்றும் நீரிழிவு நோய்.
diabetic : நீரிழிவு நோயாளி.
diabetologist : சர்க்கரை நோய் வல்லுநர்; நீரிழிவு நோய் வல்லுநர் : சர்க்கரை நோய் பற்றிய கல்வியிலும் சிகிச்சை முறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்.
Diabinese : டயாபினீஸ் : நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தப்படும் குளோரோபுரோப்பாமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.
diadochokinesia : உள்-வெளிப் புரட்டல் : கைகால் தசைகளை உட் புறமாகவும் வெளிப்புறமாகவும் வேகமாக, அடுத்தடுத்துப் புரட்டும் திறன் பெற்றிருத்தல்.
Diaginol : டாயாஜினால் : சோடியம் அரிட்ரிசோயேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
Diagnex blue test : வயிற்று அமிலச்சோதனை : வயிற்றுக்குள் குழாயைச் செலுத்தாமல் வயிற்றில் அமிலம் உற்பத்தியாகிறதா என்பதைக் கண்டறியும் ஒரு சோதனை. இந்தச் சோதனைக்குப் பயன்படும் பொருள் வாய்வழி உட்கொள்ளப்படுகிறது. சிறுநீரைப் பரிசோதனை செய்துமுடிவு அறியப்படுகிறது.
diagnosis : நோய் நாடல்; நோய் அறிதல்; அறிதியிடல் : நோயாளி யின் புறக்குறிகளின் உதவியால் அவர் எந்த நோயினால் அவதியுறுகிறார் என்பதைக் கண்டறிதல்
diagnostic : நோயறி; நோய்க்குறியான அறுதியீட்டு : நோயின் புறக்குறிகள் மூலம் நோயுறுதி செய்தல்.
diagram : வரைபடம்.
dialysis : கலவைப் பிரிவினை; ஊடு பிரித்தல்; சவ்வூடு பிரிப்பு : இடைச் சவ்வூடாகப் பரவச் செய்து சிறுநீர்க் கலவைப் பொருள்களைப் பிரித்தல்.
diameter : விட்டம்.
Diamicron : டையாமிக்ரோன் : கிளிக்கோசைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.
diamino diphenylsulphone : டயாமினோடைஃபினைல்சல்ஃபோன் : முறைக்காய்ச்சல் (மலேரியா), தொழுநோய் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப் படும் ஒரு செயற்கை மருந்து.
diamorphine : டயாமார்ஃபின் : நோவாற்றும் மருந்தாகப் பயன் படுத்தப்படும் அபினிச் சத்திலிருந்து (மார்ஃபின்) கிடைக்கும் வழிப்பொருள். வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தக்கூடியது. எனினும், இது போதைப் பழக்கத்தை உண்டாக்கிவிடக் கூடும்.
Diamox : டயாமோக்ஸ் : அசிட்டா சோலமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.
Diana complex : டயானா மனநிலை : பெண்ணிடத்தில் காணப்படும் ஆண்குணங்கள். diapedesis : நாளவழி குருதிப் போக்கு : இரத்த நாளங்கள் வழியாக இரத்தம் அல்லது அதன் பொருள்கள் வெளியேறுதல்.
diaphoresis : செயற்கை வியர்வை : செயற்கையாகத் தூண்டப்படும் வியர்வை.
diaphoretic : வியர்வை மருந்து : செயற்கையாக வியர்க்கச் செய்கிற மருந்து.
diaphragm : இடைத்திரை; உதர விதானம் (உந்து சவ்வு) பிரிப்புத் தசை கருத்திரை இடைத்திரை : ஈரலுக்கும் குடலுக்கும் நடுவே உள்ள சவ்வு.
diaphragmatitis : ஈரல் தாங்கி அழற்சி.
diaphysis : நடுவெலும்பு.
diarrhoea : பேதி; கழிச்சல் : வயிற்றுப்போக்கு மகப்பேற்று மருத்துவ மனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி கடுமையாகத் தொற்றக்கூடியது இதனால், இரைப்பை-குடல் நோய் உண்டாகக்கூடும்.
diascopy : தோல் கண்ணாடிப் பரிசோதனை : நீரில் காணப்படும் சிதைவுகளைப் பரிசோதிக்கும் முறை. ஒரு கண்ணாடி பட்டைத் தோல் சிதைவின் மீது வைத்து அழுத்தும் போது அந்த இடம் வெண்மையாகும். அப்போது அச்சிதைவுகளைப் பரிசோதிப்பது.
diasone : தொழு நோய் மருந்து : தொழுநோய் தடுக்கப் பயன் படுத்தப்படும் மருந்து.
diastase : செரிமானப் பொருள் : செரிமானத்திற்கு இன்றியமையாது உதவும் முறையில் மாச்சத்தினைச் சர்க்கரையாக்கும் அமிலப் பொருள்.
diastasis : எலும்புப் பிரிவு; எலும்புப் பிரிப்பு; மூட்டு நழுவல் : எலும்புகளை முறிவின்றிப் பிரித்தல்.
diastole : நெஞ்சுப்பை விரிவியக்கம்; இதய விரிநிலை; இதய விரிவு : இரத்த நாளத்தின் விரிவியக்கம்.
diathermy : அகமின் வெப்ப மூட்டுதல்; மின் தீய்ப்பு மருத்துவம்; சுட்டெரித்தல்; ஊடு தீய்ப்பு : உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பமூட்டுதல் மின்னோட்ட இயக்கத்தின் மூலம் பொருள்களின் உட்பகுதிகளுக்கு வெப்பமூட்டுதல் உள்ளுறுப்புகளின் வீக்கத்தைக் குறைக்க இது பயன்படுத்தப்படுகிறது.
diathesis : நோய்த்தன்மை; வற்றுவாய்; நோய்ப் பாங்கு : பரம்பரை நோயை உருவாக்கும் தன்மையுள்ள ஒரு நிலைமை.
diatrozoic acid : டயடிரோஜாக் அமிலம் : சிறுநீரக வரைபடம் மற்றும் தசை வரைபடங்கள். எடுப்பதற்குப் பயன்படும் ஓர் ஊடகம். இதில் சோடியம், மெக்ளுமின் உப்புகள் கலந்துள்ளன. தண்ணிரில் கரையக்கூடிய தன்மையுடையது.
diazemuls : டயாசிமல்ஸ் : குழம்பு வடிவிலுள்ள டயாசிப்பாம் என்ற பொருளின் வணிகப் பெயர்.
diazepam : டயாசிப்பாம் : இயக்கு தசை இறுக்கத்தைத் தளர்த்தக் கூடிய மயக்க மருந்து. காக்காய் வலிப்பு நோயின்போது ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.
diazoxide : டயஜோக்சைடு : உக்கிர இரத்த அழுத்தச்சிக்கலின்போது சிரை வழியாகத் தரப்படும் இரத்த அழுத்தக் குறைப்பி மருந்து. இது இரத்த நாளங்களை நேரடியாக அடைந்து அவற்றை விரிக்கும்.
diconal : டைக்கோனால் : டைபைப் பானேன் ஹைட்ராகுளோரைடு, சைக்ளினின் இரண்டும் கலந்த தயாரிப்புப் பொருளின் வணிகப் பெயர்.
dicophane : டைக்கோஃபேன் : ராடைஃபீனைல்ட்ரை குளோரோஈதேன் (DDT) என்ற புகழ்பெற்ற பூச்சிக்கொல்லி மருந்து. ஒட்டுண்ணிகளை நீக்குவதற்கும் பயன்படுத்தப் படுகிறது.
dicyclomine : டைசைக்ளோமின் : முறுகுதசை வேதனையை நீக்கு வதற்குக் கொடுக்கப்படும் மருந்து.
Dicynene : டைசினீன் : எத்தாம் சிலேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
dientamoeba : இரட்டை அமீபா உயிரி : ஒன்றுபோல் காணப்படும் இரண்டு உயிரணுக்கருக்கள் கொண்ட அமீபா நுண்ணுயிரி.
diet : குறிப்பிடப்பட்ட உணவு; சீருணவு; உணவு : அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ள சீருணவு.
dietary : உணவுப் பட்டியல்.
dietic : உணவு சார்ந்த.
dietical : பத்திய உணவு சார்ந்த.
diet, balanced : தக ணவு; சமவிகித உணவு.
diet mixed : கலப்புணவு.
diet, saltfree : உப்பிலா உணவு. dietary fibre : உணவு இழைமம் : காய்கறி இழைமங்களைக் கொண்ட உணவு. இது முக்கியமாக இழைமங்களைக் கொண்டது. மலச்சிக்கல், உடல் பருமன், நீரிழிவு, இரைப்பைப் புற்று போன்ற நோய்களை இது தடுக்கக்கூடியது.
dietetics : உணவு விதிமுறை; உணவூட்டவியல்; பத்தியநெறி : உடல் நலத்துக்கும் நோய்ச் சிகிச்சைக்கும் ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்துதல்.
diethazin : டையத்தாசின் : பார்க்கின்சன் நோய்க்கு எதிராக கொடுக்கப்படும் செயற்கை மருந்து.
diethylcarbamazine : டையெத்தில்கார்பாமாசின் : யானைக்கால் நோய்க்கு எதிராக வாய்வழி உட் கொள்ளப்படும் மருந்து.
diethylpropion hydrochoride : டையெத்தில்புரோப்பியான் ஹைட்ரோகுளோரைடு : மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டக் கூடிய ஒருவகை மருந்து. இது பசியையும் குறைக்கக்கூடியது.
diethyl stilboestrol : டையெத்தில் ஸ்டில்போயஸ்டிரால் : இறுதி மாதவிடாய். மாதவிடாய்க் கோளாறு, பெண் இனப்பெருக்க உறுப்புகளில் வீக்கம், மார்பகப்புற்று, பெருஞ்சுரப்பிப்புற்று ஆகியவற்றைக் குணப்படுத்தக் கூடிய மருந்து.
dietitian : உணவு முறை வல்லுநர்; பத்திய நெறியாளர் : பள்ளிகள், மருத்துவமனைகள், உணவகங்கள், உணவுப்பொருள் தொழிற் சாலைகள் ஆகியவற்றில் உடல் நலத்தைச் சீராக வைத்துக் கொள்வதற்கான உணவுமுறைகள் குறித்து ஆலோசனை கூறுவதற்கு உள்ள வல்லுநர்.
Dieti's crisis : டியட்டில் கோளாறு : அடிக்கடி சிறுநீர்ப்போக்கு ஏற்படும்போது உண்டாகும் வலி, அதிக அளவில் நீர் அருந்துவதால் குறைதல். போலந்து மருத்துவ அறிஞர் ஜோசப் டியட்டில் பெயரால் அழைக்கப் படுகிறது.
difficulty : இன்னல்; இடர்.
diffusion : விரவிப் பரவுதல்; செரித்தல்; விரவுதல் : வெவ்வேறு செறிவுகளுள்ள வாயுக்களையும், திரவங்களையும் ஒன்றாகக் கலக்கும்போது, அவை சம அளவுக்கு வரும் வரை தானாக விரலில் பரவும் முறை.
diflunisal : டிஃப்ளுனிசால் : வீக்கத்தைக் குறைக்கும் மருந்து. சாலிசிக் அமில (டோலோபிடி) லிருந்து எடுக்கப்படுகிறது. digastric : கீழ்த்தாடைத் தசைப் பற்று.
digest : செரிமானம்; செரிப்பித்தல் : உணவின் காரத்தை வயிற்றினுள் ஈர வெப்ப நிலைகளில், தக்கவாறு பக்குவம் செய்து செரி மானம் செய்தல்.
digester : செரிமானிப்பவர்.
digestible : செரிக்கக்கூடிய.
digestion : செரிமானம்; செரித்தல் : சத்துப்பொருள்களை உடல் ஈர்த்துக்கொள்ளும் வகையில் உணவு செரிமானம் ஏற்படும் உடலின் இயக்கமுறை.
digestive : செரிமானம் தரும் பொருள் : சத்துப் பொருட்களை உடல் ஈர்த்துக் கொள்ளும் வகையில் உணவு செரிமானம் ஏற்படும் உடலின் இயக்கமுறை.
digit : இலக்கம்; எண்; விரல்.
digital compression : விரல் அழுத்தம் : இரத்தம் வெளியேறுவதைத் தடுப்பதற்காகத் தமனியில் விரல்களால் கொடுக்கப்படும் அழுத்தம்.
Digitaline : டிஜிட்டாலின் : டிஜிட்டாக்சின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
digitalis : செடி மருந்து : டிஜிட்டாலிஸ் செடி வகைகளிலிருந்து எடுக்கப்படும் மருந்து. நெஞ்சுப்பையைப் பலப்படத்துவதற்குச் சிறந்தது.
digitalisation : டிஜிட்டாலின் மருத்துவச் சிகிச்சை : நெஞ்சுப் பையைப் பலப்படுத்துவதற்காக, டிஜிட்டாலிஸ் என்ற செடி வகைகளிலிருந்து எடுக்கப்படும் டி.ஜோக்சின் என்ற கிளைக்கோசைட் மருந்தினைப் போதிய அளவில் கொடுத்தல். இதனை சிரைவழியாகவும் செலுத்தலாம்.
digital radiography : இலக்க முறை ஊடுகதிர் படம் : கணினி மயமாக்கிய உருக்காட்சியைப் பயன்படுத்தி ஊடுகதிர்ப்பட மெடுத்தல். -
digital subtraction angiography : இலக்கமுறைக் குறைப்பு : இதய அழுத்தப்பதிவு : கணினியைப் பயன்படுத்தித் தமனி இரத்த ஒட்டத்தினை ஆராய்ந்தறிதல். சுற்றியுள்ள திசுக்கள் மூலம் உண்டாகும் உருக்காட்சியைக் கணினி நீக்கிக்காட்டுகிறது.
digitoxin : டிஜிடாக்சின் : செடி மருந்தின் ஒரு கிளைக்கோசைட் (டிஜிட்டாலின்) வேதியற் பொருள்.
digoxin : டிஜோக்சின் : டிஜிடாலிஸ் செடி மருந்தின் லெனோக்சின் என்ற கிளைக்கோசைட்.
diguanil : டிகுவானில் : மெட்ஃபார்மின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
dihydrallazine : டைஹைட்ராலாசின் : மட்டுமீறிய இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு கொடுக்கப்படும் மருந்து.
dihydrocodeine tartrate : டைஹட்ரோகோடைன் டார்ட்ரேட் : இருமல், சுவாசக்கோளாறுகள், வேதனைதரும் காயங்கள் ஆகியவற்றைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மருந்து.
dihydroergotamine : டைஹட்ரோஎர்கோட்டமின் : கடுமையான ஒற்றைத் தலைவலிக்குப் பயன் படுத்தப்படும் எர்கோட்டமின் என்ற மருந்திலிருந்து கிடைக்கும் மருந்து.
dihydroemetine : டைஹடிரோ எமட்டின் : இதய நச்சுத்தன்மை குறைவாகவுள்ள எமட்டின் தயாரிப்புப்பொருள். பெருங் குடல்சீழ் புண்ணைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
dihydromorphinone : டைஹட்ரோமர்ஃபினோன் : உயர்ந்த அளவு ஆற்றலுடைய ஒரு வகை நோவகற்றும் மருந்து. அபினிச்சத்து போன்றது; குறைந்த காலம் வினைபுரியக் கூடியது. கடுமையான இருமலைத் தணிக்க அரிதாகப் பயன்படுத் தப்படுகிறது.
dihydrostreptomycin : டைஹைட் ரோஹ்டிரப்டோமைசின் : நுண்மங்களிலிருந்து கிடைக்கும் ஸ்டிரப்டோமைசின் என்ற நுண்ம எதிர்ப்புப் பொருளிலிருந்து எடுக்கப்படும் வழிப் பொருள். அதே நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
dihydrotachysterol : டைஹைட்ரோடாகிஸ்டெரால் : எண்ணெயி லிருந்து தயாரிக்கப்படும் மருந்து. இரத்தத்தில் கால்சியத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
diiodohydroxyquinoline : டை அயோபோஹைட்ராக்குவினோலின் : வயிற்றுப்போக்கின் போது எமிட்டின் டயோடோக்கின் என்ற மருந்துடன் சேர்த்துக் கொடுக்கப்படும் மருந்து.
diiodotyrosine : டைஅயோடோ டைரோசின் : தைராக்சின் அடங்கி யுள்ள ஒரு கரிம அயோடின். dilatation : விரிவடையச் செய்தல்; விரித்தல்; அகவிப்பு : கழுத்துத் தசையினையும், கருப்பைச் சவ்வினையும் விரிவடையச் செய்தல்.
dilator : விரிவாக்கி : தசைகளை விரிவாக்குவதற்கு, அல்லத உட்குழிவுகளை அல்லது புண் வாய்களை அகலப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு கருவி.
Dilaudid : டிலாடிட் : டைஹைட் ரோமார்ஃபினான் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
diloxanide furoate : டைலோக்சானைட் ஃபூரோயேட் : வயிற்றுப் போக்கை நிறுத்தக் கொடுக்கப்படும் மருந்து.
diluent : நீர்ப்புப் பொருள் : கலவையின் செறிவினைத் தளர்த்துவதற்கான ஒரு நீர்ப்புப் பொருள்.
dilution : நீராளம்.
Dimelor : டைம்லோர் : அசிட்டேஹெக்சாமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.
dimenhydrinate : டைமென்ஹெடிரினேட் : பயணநோய், மசக்கை வாந்தி, தலைசுற்றல் போன்றவற்றைத் தடுக்கப் பயன்படும் சக்கி வாய்ந்த மருந்து.
dimercaprol (BAL) : டைமர்காப்ரால் : ஆர்செனிக், தங்கம் ஆகியவற்றினால் ஏற்படும் நச்சுத் தன்மையைப் போக்குவதற்குப் பயன்படும் ஒரு கரிமக் கூட்டுப்பொருள். இதனை பாதரச நச்சுக்கு எதிராகவும் பயன்படுத்தலாம். ஆனால் ஈய நச்சுக்கு இதனைப் பயன்படுத்தலாகாது.
dimethicone : டைமெத்திக் கோன் : ஒரு சிலிக்கோன் எண்ணெய். நீரில் கரையும் எரிச்சலூட்டும் பொருள்களுக்கு எதிரான தோல்காப்பு மருந்தாகப் பயன் படுத்தப்படுகிறது.
dimorphic anaemia : திரிபுக் குருதிச் சேர்க்கை : புறக்குருதிப் பிசுக்களில் நுண்நிறமி மற்றும் இயல்புப் பெருஞ்சிவப்பு உயிரணுக்கள் இரண்டும் இருத்தல்.
dimorphous : இருதிரிபுப் படிவமைப்பு : நொதி, பூஞ்சண வலை போன்ற இருவேறுபட்ட படிவங்ளை உண்டாக்கும் பூஞ்சணத்தின் ஒரு குண இயல்பு.
dimple : கன்னக்குழி : கன்னத்தில் விழும் சிறுகுழி.
Dindevan : டிண்டிவான் : ஃபெனின்டியோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
Dint : தழும்பு; வடு.
Dioctyl : டையாக்டில் : டையாக்டில் சோடியம் சல்ஃபோசக் கினேட்.
dioctylsodium sulphosuccinate : டையாக்டில்சோடியம் சல்ஃபோ சக்கினேட் : மலச்சிக்கலைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்து. இதனை ஒழுங்காகப் பயன்படுத்தி வரவேண்டும்.
diodone : டையோடோன் : ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒப்பீட்டுப் பொருளாகப் பயன்படுத்தப்படும் கரிம அயோடின் கூட்டுப் பொருள்.
Diodoquin : டையோடோக்கின் : டை அயோடோ ஹைட்ராக்சி குவினோலோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
diomosil : டயோனோசில் : மூச்சுக் குழாய் வரை படம் எடுக்கும் போது அல்லது சீழ்த்தேக்கக் குழியின் கீழ் வரம்பினை நிருணயிப்பதற்குப் பயன்படுத்தப் படும் ஒர் ஒப்பீட்டு ஊடகம்.
diopter : டயோப்டெர் : கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவுக்கேற்ற கோட்ட அளவின் அலகு (d).
dioptometer : டயோப்டோமானி : கண்ணின் கதிர்க்கோட்டத்தையும், கண் சீரமைவுத் திறனையும் அளவிடுவதற்கான ஒரு கருவி.
dioptre : ஒளிக்கோட்ட அலகு : கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவுக் கோட்ட அளவுக் கூறு. ஒரு ஒளிக்கோட்ட அலகு கொண்ட ஒரு கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவு 1 மீட்டர்.
dioptrics : ஒளிக்கோட்டவியல் : ஒளிக்கோட்டம் பற்றிய ஆய்வியல்.
diovulator : இரட்டைச்சூல் முட்டை உருவாக்கம் : ஒரே கரு உயிரணுச்சுழற்சியில் இரண்டு கரு உயிரணுக்களை உருவாக்குதல்.
dioxide : டயாக்சைடு : ஒவ்வொரு மூலக்கூற்றிலும் இரண்டு ஆக்சிஜன் அணுக்களைக்கொண்ட ஆக்சைடு.
Diparcol : டைப்பார்க்கோல் : டையெத்தாசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
dipeptide : டைபெப்டைடு : புரதத்தை நீரால் பகுப்பதால் கிடைக்கும் ஒரு புரதம்.
dipeptidase : டைபெப்டிடேஸ் : டைபெப்டைடுகளை நீரால் பகுப்பதை வினையூக்கம் செய்து அமினோ அமிலங்களாக மாற்றும் ஒரு செரிமானப் பொருள்.
diphenhydramine : டைஃபென்ஹைட்ராமின் : ஹிஸ்டாமின் எதிர்ப்பு மருந்துகளில் ஒன்று. ஒவ்வாமை, பயண நோய் போன்ற நிலைமைகளில் பயன் படுத்தப்படுகிறது. இஃது உறக்க முட்டும், வாந்தியைக் கட்டுப் படுத்தும்.
diphenoxylate : டைஃபெனாக்சிலேட் : கடுமையான வயிற்றுப் போக்கை நிறுத்தக் கொடுக்கப் படும் மருந்து. இது அபினிச் சத்து போன்று வினை புரியக் கூடியது. இது சுவாச மையத்தைச் சமனப்படுத்துகிறது. வாய் உலர்ந்து போவதைத் தடுக்கிறது.
diphosphanates : டைஃபாஸ்ஃபானேட்ஸ் : எலும்பு திருகு நோயில் எலும்பு திருகுவதைக் குறைக்கப்பயன்படுத்தப்படும் மருந்து. இதனை வாய் வழியாகவும் கொடுக்கலாம்.
diphtheria (diphtharitis) : தொண்டை அழற்சி நோய் (டிஃப் தீரியா தொண்டை அடைப்பான்; தொண்டையடைப்பான் நோய் : காற்றுகுழல் தோல் போன்ற சவ்வினால் அடைக்கப்படுவதால் உண்டாகும் தொண்டைத் தொற்றுநோய்.
diphtheroid : டிப்தெராய்ட் : 1. தொண்டை அழற்சி நோய் (டிஃப்தீரியா) போன்ற ஒரு நோய். 2. தொண்டை அழற்சி நோய்க் கிருமியினால் உண்டாகாத ஒரு போலிச் சவ்வு.
diphlline : டைஃபைலின் : இது ஒரு தியோஃபைலின் தயாரிப்பு, இது அமில ஊடகத்தில் நிலைப்பாட்டுடன் இருக்கும். குடல் மென்சவ்வில் எரிச்சலைக் குறைக்கும்.
dipipanone : டிப்பிப்பானோன் : செயற்கை அபினிச் சத்துப் பொருள். தூக்க மருந்தாகவும், நோவகற்றும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
diplegia : கால் முடக்குவாதம்; இணை அங்கவாதம்; ஈரங்க வாதம்; முழுவாதம் : இரு கால்களிலும் ஒரே மாதிரியாக முடக்குவாதம் ஏற்படுதல். இது பெரும்பாலும் பெருமூளையில் ஏற்படும் சேதம் காரணமாக உண்டாகிறது.
diploe : பஞ்சுத் திசு : மண்டையோட்டு எலும்புகளின் இரு தளப் பரப்புகளிடையிலான ஒரு குறிப்பிட்ட அளவு மச்சைக் குழிவுடைய பஞ்சுபோன்ற எலும்பு.
diploid : முழு இனக்கீற்றுகள் : உடல் உயிரணுக்களில் இரு இனக்கீற்றுத் தொகுதிகளையுடைய முழு இனக்கீற்றுகள்.
diplopia : இரட்டைப் பார்வைக் கோளாறு; இரட்டைத்தோற்றம்; இரு காட்சி : ஒரே பொருள் இருக்கும்போது அது இரண்டாகத் தோன்றும் பார்வைக் கோளாறு.
dipping : விரல் சோதனை : 1. அகட்டு நீர்க்கோவை எனப்படும் மகோதர நோயின்போது உறுப்புகளையும் கட்டிகளையும் தொட்டுணர்ந்து ஆய்வு செய்யும் ஒரு தனிவகை கைச்சோதனை முறை. இதில் விரல்களை அடி வயிற்றில் வைத்த அடிவயிற்றுச் சுவர் அழுத்தப்படுகிறது. 2. ஒரு கரைசலில் ஒரு பொருள் அமிழ்தல்.
Diprivan : டிப்ரிவான் : டிசோப்ரோஃபோல் என்னும் மருந்தின் வணிகப் பெயர்.
diprophylline : டிப்ரோஃபைலின் : மூச்சுக் குழாய்த் தசையினைத் தளர்த்தும் மருந்து. அதேசமயம் இது நெஞ்சுப்பைத் தசையினை தூண்டிவிடுகிறது. எனவே, இது ஈளை நோய் (ஆஸ்துமா) நெஞ்சடைப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
dipsomania : குடிவெறி : போதை தரும் மதுபானங்களைக் குடிக்க வேண்டும் என்று ஏற்படும் பெரு வேட்கை.
dipsomania : தணியா மது வேட்கை : ஆல்கஹால் கலந்த மதுபானங் களை அருந்த வேண்டும் என்ற கட்டுக்கடங்காத தணியாத வேட்கை.
diptera : சிறகுப்பூச்சிகள் : வாய்ப் பகுதிகளில் ஊடுருவும் அல்லது உறிஞ்சும் தன்மையுடைய இரு இறகுகள் கொண்ட பூச்சிகள். ஈ, கொசு போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.
dircission : ஆடிக்கூண்டு பிளவுறுத்தல்; கண்வில்லை உறைத் துளைப்பு; கிழித்தல் : கண்புரை நோயின்போது ஆடிப் பொருளை ஈர்த்துக் கொள்வதற்கு ஆடிக் கூண்டினைப் பிளவுறுத்தல்.
direct : நேர்.
directly observed therapy : நேரடி நுண்ணாய்வுச் சிகிச்சை (DOT) : ஒரு நோயாளிக்கு மருந்தினை வாய்வழியாகக் கொடுத்து, அவர் அதனை உட்கொள்வதை நேரில் பார்த்தல். இது காசநோய்ச் சிகிச்சையில் மிக முக்கியமானது. ஏனென்றால், இதில் மருந்து முறையாக உட்கொள்ளப்படாவிட்டால் மருந்து எதிர்ப்பு உயிரிகள் தோன்றக்கூடும்.
Direma : டைரெமா : ஹைட்ரோ குளோரோத்தியாசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
disability : ஊனம்; இயலாமை : ஒருவர் இயல்பான முறையில் தனது காரியங்களைச் செய்ய முடியாத அளவுக்கு அவருடைய உடம்பில் பழுது ஏற்பட்டிருத்தல்.
Disalcid : டைசால்சிட் : சால்சாலேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
disarticulation : மூட்டு அறுவை; மூட்டுப்பிரிப்பு : ஒரு மூட்டில் ஒரிரு உறுப்பினை அறுத்து எடுத்தல் முட்டில் அழுகிய எலும்பைப் பிரித்தல்.
disassimilation : செரியுணவு மாற்றம் : செரிமானம் செய்யப்பட்ட பொருள் சிறுகூறுகளாகப் பிரிதல்.
disaster : பேரிடர்/உற்பாதம் : நில நடுக்கம், வெள்ளப்பெருக்கு, தீவிபத்து, வெடிவிபத்து, குண்டு வீச்சு, நச்சுவாயுக் கசிவு, நச்சுப் பொருள் கசிவு போன்ற அவசர நடவடிக்கைகள் தேவைப்படும் எதிர்பாராத, வழக்கத்துக்கு மாறான திடீர் பேரிடர்கள்.
disc : வட்டம்; வட்டத்தகடு.
disc,optic : கண் நரம்பு வட்டம்.
discectomy : எலும்புத் தகடு அறுவைச் சிகிச்சை : தண்டெலும்புத் தகடு ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.
disharge : வெளிப்போக்கு; வெளியனுப்பு.
discharge, menstrual : மாத விடாய்ப் போக்கு.
discography : முள்ளெலும்புத் தகட்டு ஊடுகதிர்ப் படம் : மிக நுண்ணிய ஊசி மூலமாகக் கீழ் முதுகுப்பகுதித் தகட்டில் நீரில் கரையும் சாயப்பொருளைச் செலுத்திய பிறகு எடுக்கப்படும் ஊடுகதிர் (எக்ஸ்-ரே) படம். இது வெளித்தள்ளிய முள்ளெலும்புத் தகட்டில் இயல்பான மைலோ கிராமுடன் எடுக்கப்படுகிறது.
discolouration : நிறம் பிரிதல்.
discomfort : நலக்குறைவு : மன உலைவு.
discompose : சீர்குலைவு; குழப்பு; மன அமைதி குலை.
discomposure : மன அமைதிக் கேடு.
discrimation : வேறுபாடு உணர்தல் : வேறுபடுத்தி அல்லது மாறு பாடு உணர்த்திக் காட்டும் செய்முறை.
discussion : உறையாடல்; விவாதம்; கலந்துரையாடல்.
disease : நோய்; பிணி; நலக்கேடு : உடலின் எந்தப்பகுதியின் கட்டமைப்பும், செயற்பணியும் இயல்பான நிலையிலிருந்து பிறழ்வதால் ஏற்படும் கோளாறு. இது சில நோய்க் குறிகள் மூலம் புலப்படும்.
diseas, bono : எலும்பு நோய்.
diseas, coeliac : வயிற்று நோய்.
diseas, deficiency : குறைபாட்டு நோய்.
diseased : நோய்ப்பட்ட.
diseas, endemic : நிலைத்த; நோய்.
diseas, epidemic : மிகைத்த நோய்; கொள்ளை நோய்.
diseas-filarial : யானைக்கால் நோய். diseas-heart : இதய நோய்.
diseas, ischoemic heart : இதயக் குருதித் தடை நோய்; இதயக் குருதியிலா நோய்.
diseas, mental : மன நோய்.
diseas, skin : தோல் நோய்.
diseas, specific : தனி நோய்; குறித்த நோய்.
disengagement : விடுவிப்பு : தாயின் இடுப்பு வளையத்தினுள்ளிருந்து கருவுயிரியின் தலை விடுபட்டு வெளிப்படுதல். 2. உணர்ச்சித் தொடர்பு எதுவுமின்றி உளவியல் தானியக்கத்துடன் செயற்படுதல்.
disentaglement : மீட்பு உத்தி : இடிபாட்டில் சிக்கிய ஒருவரை அதிலிருந்து மீட்பதற்கான ஒர் உத்தி.
disequilibrium : நிலையிலாச் சமநிலை : சமமற்ற மற்றும் உறுதி யற்ற சமநிலை.
disgorge : கக்கு : வாந்தியெடு.
disimpaction : எலும்பு பிரிப்பு : மோதல் காரணமாக எலும்புகள் முறிந்து ஒன்றினுள் ஒன்று நுழைந்திருக்குமானால், அந்த எலும்புகளின் முறிந்த முனைகளைத் தனியாகப் பிரித்தெடுத்தல். பிறகு, எலும்புகளை சீரான நிலையில் பொருத்துவதற்குக் கட்டுப் போடப்படுகிறது.
disinfect : தொற்றுத் தடை காப்பு செய்.
disinfectant : தொற்றுத் தடை மருந்து; நுண்ணுயிர் எதிர்ப்பி; தொற்றுநீக்கி ; கிருமி நீக்கி : நச்சுத் தடைக்காப்புப் பொருள்.
disinfection : தொற்றுத்தடைக் காப்புச்செய்தல் ; நுண்ணுயிர் நீக்கம்; தொற்று நீக்கல்; கிருமி நீக்கம் : நச்சுத்தடைக் காப்புப் பொருள்களைப் பயன்படுத்தி ஆடை இடங்கள் முதலியவற்றிலிருந்து தொற்றுக் கிருமிகளை நீக்கித் துப்பரவு செய்தல்.
disinfestation : புழு நீக்கம்.
disinhibition : தடையுணர்வு நீக்கம் : 1. தடையுணர்வை ஒழித்தல். 2. சமூக அல்லது பண்பாட்டுத் தடைக்கட்டுகள் எதுவுமில்லாமல் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான உளவியல் சுதந்திர உணர்வு.
disintegration : நிலை குலைதல்.
Disipal : டிசிப்பால் : ஆர்ஃபினாப்ரின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
disipidin : டிசிப்பிடின் : பின்புற மூளையடிச் சுரப்பித் தூள் சிறுநீர்க்கழிவு, சர்க்கரையின்மை நீரிழிவு, இரவில் சிறுநீர்க்கழிவு போன்ற கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
dislocation : நழுவிய மூட்டு; இடப்பிறழ்வு; நிலைமாறுதல்; பிசகுதல் : உறுப்புகள் இடம் பெயர்ந்திருத்தல்.இதுபிறவியிலேயே ஏற்பட்டிருக்கலாம் அல்லது அடிக்கடி உண்டாகலாம்.
disoblitersation : தமனி அடைப்பு நீக்கம்; அடைப்பெடுத்தல் : இதயத்திலிருந்து இரத்தம் கொண்டு செல்லும் நாளமாகிய தமனியில் ஏற்படும் அடைப்புகளை நீக்குதல்.
disodium cromoglycate : டை சோடியம் குரோமோகிளைகேட் : ஒவ்வாமையினால் உண்டாகும் விமானப் பயணநோய்க்குப் பயன் படுத்தப்படும் மருந்து.
disoprofol : டைசோப்ரோஃபோல் : மயக்க மருந்தாக நரம்புவழி செலுத்தப்படும் மருந்து. இது குறுகிய காலம் செயற்படக் கூடியது.
disorder : உடல்நிலைக்கோளாறு; சீர்குலைவு : உடல் அல்லது மன நிலைக் குழப்பம் காரணமாக ஏற்படும் குழப்பமான நிலை.
disorganisation : உறுப்பு திரிபு : ஒர் உறுப்பின் தனித்தன்மைகளை இழக்கும்படி செய்யும் வகையில் அதில் மாற்றம் செய்தல்.
disorientation : மனத்தடுமாற்றம்; நிலைக்குழப்பம் : நேரம், இடம் அல்லது ஆள் தொடர்பாக மனத்தில் ஒருவகைத் தடுமாற்றமான குழப்பநிலை உண்டாதல்.
dispensary : மருந்தகம் : மருத்துவமனையில் தங்காத நோயா களுக்கு மருந்துகள், மாத்திரைகள் கொடுக்கப்படும் ஓர் இடம்.
dispenser : மருந்து கூட்டுநர் : மருந்து சேர்த்தளிப்பவர்.
dispensatory : மருந்து விளக்க நூல் : மருந்துத் தயாரிப்புகளையும் அதன் பயன்பாடுகளையும் விவரித்துக்கூறும் ஒரு நூல்.
displaced : இடம் பெயர்; இடம் மாறி.
disposal : நீங்குதல்; போக்குதல்.
disposition : நிலையமைப்பு.
disproportion : பொருத்தமில்லாமை, வீதமாற்றம்.
dissection : பகுத்தாய்வு; பிளப்பாய்வு; கூறிடல் : புற்றுநோய்ச் சிகிச்சையின்போது திசுக்களைத் தனியாகப் பிரித்தெடுத்து ஆராய்தல்.
disseminated Sclerosis : நடு நரம்புத் தடிப்பு நோய் : நடு நரம்பு மண்டலம் முழுவதும் திட்டுத் திட்டாகத் தடிப்புக் காணும் நோய். dissimilation : ஊன்ம சிதைவு : உயிர்ச்சத்து அழிந்து போதல்.
dissipation of energy : ஆற்றல் அழிவு; சிதறுகை : சக்தியைப் படிப்படியாக இழத்தல்.
dissociated : பிரிந்த.
dissocation : கருத்துத் தொடர்பு நீக்கம்; பிரிப்பு; பிரிகை; பிரிவு : குறிப்பிட்ட கருத்துக்களோ அவற்றுடன் தொடர்பு கொண்ட உணர்ச்சிகளோ தன்னறிவின்றி துண்டிக்கப்படுதல். அகநிலையில் ஒருவர் மனதில் இரண்டு உணர்வுகள் உண்டாகும்படி செய்தல்.
dissolution : சிதைவு; கரைவு; கலைப்பு : 1. மரணம், 2. உறுப்புக் கூறுபாடு, 3. உடல் உட்கூற்றுக் கட்டமைப்பினை கூறுபடுத்துதல்.
dissolve : கலைத்த; கரைத்த : ஒரு திடப்பொருளை ஒரு திரவத்தில் கரையும்படி செய்தல்.
distal : முனைகோடி; தொலைவில்; தூர; அப்பால்; கடைநிலை : மையத்திலிருந்து அல்லது ஆதாரத்திலிருந்து மிகவும் விலகியிருத்தல்.
distension : வீங்குமை, உப்புகை.
distichiasis : ஈரடிக்கண்ணிமை மயிர் : கூடுதல் இமை மயிர் வரிசை இரட்டை வரி: இமையின் உட்புறம், கண்விழியை உறுத்தும் வகையில் கூடுதலாக அமைந்திருக்கும் கண்ணிமை மயிர் வரிசை.
distillation : வாலை வடித்தல் : ஒரு திரவத்தை ஆவியாகும் நிலைவரையில் சூடாக்கி பெறப்படும் ஒர் ஆவியை செறிவாக்கித் திண்மைப்படுத்துதல்.
distilled : வடி; காய்ச்சி வடித்த.
distortion: உருச்சிதைவு; திரிபு : 1. ஓர் ஒழுங்கான வடிவத்தை திருகியோஅல்லது வளைத்தோ உருச்சிதைவு செய்தல். 2. ஒர் உறுப்பின் பகுதியை அல்லது கட்டமைப்பினை மாற்றுகிற உருச்சிதைவு.
distractibility : கவன மாற்றம்; நோக்கத் திருப்பம் : வெவ்வேறு திசையில் எண்ணத்தை மாற்றி மனக்கலக்கத்தை உண்டாக்கும் ஒருவகை உளவியல் நோய்.
distraction : கவன மாற்றம்/ மூளைக் குழப்பம்/மன உலைவு : 1. ஒருவகை மனக்குழப்ப நிலை. 2. கூட்டு மேற்பரப்புகளை விரிவாக்கம் மூலம் கூறுபடுத்துதல்.
distress : இன்னல்/இடுக்கண்/கடுந்துன்பம் : கடுமையான உடல் அல்லது மனவேதனை.
distribution : பங்கீடு; பகிர்வு : 1. எந்த ஒரு பொருளையும் பகுத்து பரப்பீடு செய்தல். 2. உள் பொருள்கள் பல்வேறு இடங்களில் பரவலாக இருத்தல். 3.நோயுற்ற குறிப்பிட்ட நோயாளிகள் பரவலாக இருக்கும் இடங்கள்.
disturbance : நிலை குலைவு; கலக்கம் : 1. இயல்பான நிலை குலைந்து போதல். 2. சராசரி நிலையிலிருந்து பிறழ்தல்.
disulfiram : டைசல்ஃபிராம் : இம் மருந்து உட்கொண்டவர் பின்னர் ஆல்கஹால் போன்ற வெறியப் பொருளை உட்கொண்டால் குமட்டலும் வாந்தியும் உண்டாக்கக் கூடிய ஒரு கந்தகக்கூட்டுப் பொருள் ஆகும். எனவே, இது குடிபோதைக்கு அடிமையான வர்களுக்கு, அதை முறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
disulphate : டைசல்ஃப்பேட் : இரண்டு சல்ஃபேட் மூல அணுக்களைக் கொண்டுள்ள ஒரு கூட்டுப் பொருள்.
diuresis : சிறுநீர்ப்போக்கு; சிறு நீர் மிகைப்பு; நீர்ப்போக்கு : அளவுக்கு மீறி சிறுநீர் கழிதல்.
diuretics : சிறுநீர்ப்போக்கு மருந்துகள்; சிறுநீர் இறக்கிகள்; சிறுநீர் இறக்க ஊக்கிகள்; நீர் போக்கி; நீரகற்றி : சிறுநீர்க்கழிவினைத் தூண்டக்கூடிய மருந்துகள்.
diurmal : பகவிய.
divergence : விழி திறம்புதல் : ஒரு பொதுவான நிலையிலிருந்து விலகிச் செல்லுதல் அல்லது திறம்புதல்.
divers' paralysis : காற்றழுத்த நோய் : அழுத்தம் மிகுந்த காற்றின் ஊடாக உழைப்பவர்களுக்கு வரும் நோய்.
diverticulosis : குடல் அழற்சி : குடல்களில் பல சிறுபைகள் அமைந்திருத்தல். நீண்டகாலச் சீருணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆட்களின் பெருங்குடலில் இத்தகைய சிறுபைகள் உண்டாகின்றன. இது இழைமக் குறைபாட்டினால் ஏற்படுகிறது. மலச்சிக்கல், இசிவு போன்றவை இந்த நோயின் அறிகுறிகள்.
diverticulum : பக்கப் பை.
division : பகுப்பு; பிரிவு.
Dixarit : டிக்சாரிட் : குளோனிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
dizziness : தலைச்சுற்றல்; மயக்கம்; கிறுகிறுப்பு : கிறுகிறுப்பு: மயக்கம். பெரும்பாலும் மனக் கவலையினால் உண்டாகிறது.
dizy : குழப்பமான; மயக்கமான; தலை சுற்றுகிற.
DNA : டி.என்.ஏ : டி ஆக்சிரிபே நியூக்ளிக் அமிலம். இனக்கீற்று அமிலம்.
dobitamine : டோபிட்டாமின் : இதயத் தசையினை நேரடியாக துண்டிவிடக்கூடிய மருந்து.
Dobutrex : டோபுட்ரெக்ஸ் : டோபுட்டாமின் என்ற மருந்தின் வணிகப்பெயர்.
doctor : மருத்துவர்.
doctylography : கைரேகை ஆராய்ச்சி : கைரேகைகளின் அமைப்பு, வடிவம், எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்வது doctylognyposis : விரல் முடக்கம்; விரல் வளைவு : கை அல்லது கால் விரல்கள் நிரந்தரமாக வளைந்துவிடுவது; தொழு நோய் பாதிப்பால் விரல்கள் வளைவது.
doctylology : விரல் சைகை மொழி; விரல்மொழி : ஊமைகள், செவிடர்களுடன் பேசுவதற்குப் பயன்படும் விரல் சைகை மொழி.
doctylolysis : விரல் இழப்பு; விரல் நீக்கம்; விரல் அகற்றுதல் : விரலை நீக்குதல், விரலை வெட்டி விடுதல்; அறுவை மருத்துவம் மூலம் விரலை சரி செய்தல்.
dog-sick : முழு நோயாளி.
dolmane : டால்மேன் : ஃபுளூராஸ்பாம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
doll's eye sign : பொம்மைக் கண் நோய் : தலையின் திடீர் அசைவு காரணமாகக் கண்களின் அசைவு எதிர்த்திசையில் செல்லுதல். தன்னியலான கண் அசைவுக் கான மைய அமைப்பு முறையில் நைவுப் புண் உண்டாவதால் இது உண்டாகிறது.
Dolobid: டோலோபிட் : டிஃப்ளு னிசால் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.
dolor : வேதனை வலி : துன்பம், துயரம், கடுந்துயர்.
Doloxene : டோலோக்சென் : டெக்ஸ்டரோப்போக்சிஃபென் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
dome : முகடு.
domestic : அகம்சார்ந்த.
domiciliary : மனைசார்ந்த.
dormancy : செயலொழுக்கம் : 1. வளர்சிதை மாற்ற நடவடிக்கை வெகுவாகக் குறைந்துள்ள நிலை. 2. நோய் வளர்ச்சி துரிதமாக இல்லாத ஒரு நிலை.
dominant : ஆதிக்க பண்பு; ஓங்கிய; ஆதிக்க மிகைப்பு; விஞ்சுகை : உயிரியஇணைக்கலப்பில் முதல் தலை முறையில் மேம்பட்டு நிற்கும் ஒரு வழிப் பெற்றோர் பண்புக்கூறு.
dominant hemisphere : மூளை ஆதிக்கப் பகுதி : இடக்கைப் பழக்கம், வலக்கைப் பழக்கம் உடையவர்களுக்கு மூளையின் எதிர்ப்பக்கத்தில் உள்ள பகுதி. வலக்கை பழக்கமடையவர்களில் 90% பேருக்கும் இடக்கை பழக்கமுடையவர்களில் 30% பேருக்கும் மூளை ஆதிக்கப் பகுதி வலப்புறம் அமைந்திருக்கும்.
domiphen bromide : டோமிஃபென் புரோமைடு : வாயிலும், தொண்டையிலும் கிருமிகளினால் உண்டாகும் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து.
donor : கொடையாளர்; வழங்கி; கொடுப்பான் : இரத்தம் செலுத் துவதற்கு இரத்தம், அல்லது உறுபபு மாறறு அறுவை சிகிச்சைக்கு உறுப்பு நன்கொடையாக அளிக்கும் ஆள். Donovan body : டோனோவன் திரட்சி : திசுக்கட்டியை உண்டாக்கும் பொருள். இந்தியாவில் பணிபுரிந்த அயர்லாந்து மருத்துவர் சார்லஸ் டோனோவான் பெயரால் அழைக்கப்படுகிறது.
Doppler ultrasound technique : டோப்லர் கடுமுனைப்பு ஒலி நுட்பம் : நெஞ்சுப்பைக்குள் இரத்தத்தைக் கொண்டு செல்லும் குருதி நாளமாகிய சிரையின் வழியாகப் பாயும் இரத்தத்தின் வேக வீதத்தை அளவிடுவதற்கு கடுமுனைப்பு ஒலியை அனுப்பும் ஒர் எந்திரம். சிரை முழுவதுமாகத் தடைப்பட்டிருக்குமானால், இரத்தம் பாய்தல் இராது; எனவே ஒலி வராது.
Dopram : டோப்ராம் : டோகாப்ராம் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.
Doptone : டோப்டோன் : கருவிலிருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பினை எதிரொலித் தத்துவத்தின் மூலம் கண்டறிய உதவும் ஒரு கருவியின் வணிகப்பெயர்.
Dorbanex : டோர்பானெக்ஸ் : டாந்திரோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
dormant : ஒடுக்க நிலை.
Dornier litho tryptor : டோர்னியர் லித்தோ கருவி : சிறுநீரகத் திலுள்ள சிலவகைக் கற்களை அதிர்ச்சியலைகள் மூலம் அழிக்கக் கூடிய ஒரு கருவி.
dorsal : முதுகுப்புறம்; பின்புறம்; முதுகிய; புற; முதுகு : முதுகுப் பகுதி சார்ந்த அல்லது ஒர் உறுப்பின் முதுகுப்புறம். தலையணையை ஆதாரமாக வைத்து மல்லாந்து படுப்பது முதுகுப்புற நிலையாகும்.
dorsiflexion : முதுகுப்புற வளைவு : ஒரு மூட்டுப்பகுதியில் ஒர் உறுப்பு முதுகுப்புறமாக வளைந்திருத்தல்.
dorsocentral : முதுகு மையம் : முதுகின் மையப் பகுதியை அடுத்துள்ள பகுதி.
dorsolumbar : பின்புற இடிப்புப் பகுதி; பின் இடை : முதுகுப்புறமுள்ள இடுப்புப்பகுதி சார்ந்த.
dosage : மருந்தளவு : ஒரு மருந்தினை எந்தெந்த வேளைகளில் எந்தெந்த அளவுகளில் நோயாளிக்குக் கொடுக்க வேண்டும் என்ற அளவு.
dose : வேளை மருந்து.
dorsum : புறம்; முதுகு.
dosimeter,dose meter : ஊடு கதிர்மானி : ஊடுகதிர்களை (எக்ஸ்ரே) அல்லது காமாக் கதிர்களை அளவிடக்கூடிய ஒரு கருவி.
doubling time : இரட்டிப்பாக்கும் நேரம் : 1. ஒரு நைவுப்புண் விட்டத்தில் 1.25 மடங்கு அதிகரிப்பதற்கான கால அளவு. அதாவது, 2 செ.மீ விட்ட முள்ள புண் 2.5 செ.மீ யாக அதிகரிப்பதற்கான கால அளவு. கட்டிகளின் உக்கிர வேகத்தை அளவிடுவதற்கு முக்கியமான வழி.
douche : பீற்றுக்குழல் தாரை; உடற்குழி கழுவல்; தாரை; உட்கழுவு : உட்கழுவு முறையாகப் பயன்படுத்தப்படும் பீற்றுக் குழலின் தாரை.
Douglas bag : டக்ளஸ் பை : வெளியேற்றப்பட்ட காற்றைச் சேகரிப்பதற்கான, இடம்விட்டு இடம் கொண்டு செல்லக்கூடிய ஒரு பெரிய பை. இது உள்ளிழுக்கப்பட்ட கார்பன்டையாக்சைடு அளவை அளவிடுவதற்குப் பயன்படுகிறது. பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் கிளாட்டக்ளஸ் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
Douglas pouch : டக்ளஸ் பொதியுறை : மலக்குடல்-சிறுநீர்ப்பை சார்ந்த பொதியுறை. ஸ்காட்லாந்து மருத்துவர் ஜேம்ஸ் டக்ளஸ் பெயரால் அழைக்கப் படுகிறது.
down syndrome : மனநலிவு நோய் : பிறவியிலேயே உண்டாகும் கடுமையான மனநோய் வகை. இந்த நோய் கண்டவர்களுக்கு மங்கோலிய இனத்தவரைப் போன்ற முகபாவங்கள் உண்டாகும். மட்டைபோல் திருகிய கண்கள், மாறுகண், தட்டையான பின்தலை ஆகிய கோளாறுகள் ஏற்படும். டெளனால் விளக்கியது.
doxapram : டோக்சாப்ராம் : இன்றியமையாத பின்மூளை மையங்களைத் துண்டிவிடும் ஒரு மருந்து. இது பார்பிட்டு ரேட்டினால் ஏற்படும் நச்சுத் தன்மையைப் போக்கப் பயன் படுத்தப்படுகிறது.
doxepin : டோக்செப்பின் : மனச் சோர்வகற்றும் மருந்துகளில் ஒன்று. 3-15 நாட்கள் உட்கொண்டபின் செயற்படத் தொடங்கும்.
doxorubicin : டோக்சோரூபிசின் : உயிர்ம நச்சு நீக்கும் மருந்து. குழந்தைகளுக்கு ஏற்படும் வெறுப்பு நோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படுகிறது.
doxycycline : டோக்சிசைக்ளின் : இது ஒரு டெட்ராசைக்ளின். இது விரைவாக ஈர்த்துக் கொள்ளப்பட்டு, மெதுவாக வெளியேற்றப்படுகிறது நுண்ணுயிரெதிர் மருந்து.
DPT vaccine : முத்தடுப்பு ஊசி : தொண்டை அழற்சி, கக்குவான், நசிப்பிசிவு ஆகிய மூன்று நோய்களுக்கும் எதிரான தடுப்பு ஊசி மருந்து.
drain : வடிகுழல்; வடிகால்; வடிப்பு : அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ், அழுக்கு நீர் வடிப்பதற்கான குழல்.
drainage : வடிமானம்.
drainage-tube : சீழ் குழல்.
Dramamine : டிராமமின் : டை மென்ஹைட்ரினேட் என்ற மருந்தின் வணிகப் பெயர். drastic : முனைப்பு தீவிகம்; பெரு மாற்றம்; கடும் பேதி மருந்து.
drawght : வீச்சு; வளிவேகம்.
dream : கனவு : உறங்கும்போது எண்ணங்களும், உணர்வுகளும் தோன்றுதல். துரிதமான கண் அசைவு உறக்கத்தின்போது கனவுக் காட்சிகள் தோன்றுகின்றன.
dresser : அறுவைத் துணைவர் : அறுவை மருத்துவத்தின்போது மருத்துவருக்கு உதவும் துணைவர்; காயங்களுக்குக் கட்டுப்போட உதவும் மருத்துவ மாணவர்.
dressing : காயக்கட்டு; கட்டு : வெளிநோய் தொற்றாமல் காயங்களுக்கு அல்லது புண்களுக்குக் கட்டுப்போடுதல்.
Dressler's syndrome : டிரஸ்லர் நோய் : நெஞ்சுத்தசையழிவுக்கு பிந்திய நோய். இதனால், இடைவிடாத காய்ச்சல், குலையுறை அழற்சி, நுரையீரல் உறையழற்சி ஆகியவை உண்டாகும். இவை, தன்னியல்பான நோய்த் தடுப்பினால் உண்டாகலாம். இது, அமெரிக்க மருத்துவ அறிஞர் வில்லியம் டிரஸ்லர் பெயரால் அழைக்கப்படுகிறது.
drill : துளையிடுதல்.
drip : சொட்டு : சொட்டு சொட்டாக விழுதல்.
Droleptan : டிரோலெப்டான் : டிரோம்பெரிடால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
dromoran : டிரோமோரான் : லெவோர்ஃபானால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
drop : துளி; திவளை : 1. ஒரு திரவத்தின் கோள வடிவ நுண்துளி. 2. ஒர் உறுப்பு தனது இயல்பான இயக்கத்திலிருந்து வீழ்ச்சியடைதல்.
drop attacks : நிலைதடுமாற்றம் : உடலின் கீழ்ப்பகுதி உறுப்புகள் திடீரென நிலையிழப்பதால் அவ்வப்போது நிலை தடுமாறி விழுதல்.
droperidol : டிராப்பெரிடால் : நரம்புத் தளர்ச்சியைப்போக்கும் மருந்து. அறுவைச் சிகிச்சைக்கு முந்திக் கொடுக்கப்படும் மருந்தாகப் பயன்படுகிறது. சுவாச மண்டலத்தைப் பாதிக்காமல், நினைவிழப்பு ஏற்படாமல், ஒரு பற்றற்ற மனநிலையை இது உண்டாக்குகிறது.
droplet : சிறுதுளி; துளிச்சொட்டு: 1. மிகச்சிறிய துளி. 2. ஒரு நுண் ணுயிரி மீது படையெடுத்துத் தாக்கும் நோய். இது துகள்களினால் பரவுகிறது.
dropper : துளி முனைக்குழாய்; சொட்டுவான் : திரவத்துளிகளை வெளியேற்றுவதற்குப் பயன்படும் ஒரு பக்கம் குறுகிய முனையுடைய ஒரு குழாய்.
drops : சொட்டு மருந்து : துளி மருந்து. dropsy : நீர்க்கோவை மகோதரம்; பெருவீக்கம்; மீவீக்கம் : உடலின் புழையிடங்கள் தோறும் நீர் திரண்டு தேங்குவிக்கும் நோய்.
drostanolone : டிராஸ்டானாலோன் : உயிர்ப்பொருள் ஆக்கு வதற்குரிய ஒரு பொருள். மார்பு புற்றுச் சிகிச்சையில் பயன்படுத் தப்படுகிறது.
drug : மருந்து : கண்டறியப்பட்ட நோயைத் தடுப்பதற்கும், அந்த நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கும், நோயின் அறிகுறிகள் குறைப்பதற்கும் பொருள் எதனையும் குறிக்கும் பொதுச் சொல். நோயைக் குணப்படுத்தும் மருந்துகளை நோய்ச் சிகிச்சை மருந்துகள் என்றும், சட்ட விரோதமாக உட்கொண்டு அடிமையாகிவிடும் மருந்துகளை போதை மருந்துகள் என்றும் கூறுவர்.
druggist : மருந்து வணிகர்.
drum-ear : செவிப்பறை.
drunkeness : மது மயக்கம்; மதுமை.
drying : உலர்தல்.
Dubin-Johnson syndrome : ரூபின்-ஜான்சன் நோய் : ஈரல் உயிரணுக்களில் இடப்பெயர்வு கோளாறு காரணமாக இரத்தத்தில் பிலிரூபின் மிகுதியாகவுள்ள குடும்ப வழி நோய். அமெரிக்க நோயியல் அறிஞர்கள் இசாடோர் ரூபின், ஃபிராங்க் ஜான்சன் ஆகியோரின் பெயரால் அழைக்கப் படுகிறது.
Dubowitzscore : தசைநலிவு நோய் : பொதுவாக 3-5 வயதுடைய சிறுவர்களுக்கு ஏற்படும் கோளாறு. இந்த நோய் கண்டவர்களுக்குப் படிப்படியாகத் தசை நலிவடையும் இயக்கத் திறன் இழப்பு ஏற்படும். குமர பருவத்தில் அல்லது 20 வயதுகளில் சுவாசத்தடை அல்லது மார் அடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படலாம்.
Duchenne's muscular dystrophy : டஷேன் தசை வளர்ச்சிக் குறைபாடு : பாலியல் தொடர்புடைய மரபியல் மங்கல் நோய். தசை வளர்ச்சிக் குறைபாடுகளில் பொதுவாக காணப்படுகிறது. இது இரண்டு வயதுக்குப்பின் தோன்றி, உடலின் மையம் நோக்கிய உறுப்புத் தசைகளை பாதிக்கிறது. இதனால் பெரும்பாலும் போலி உறுப்புப் பெருக்கம், நெஞ்சுப்பைச் சுருக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. ஃபிரெஞ்சு நரம்பியலறிஞர் கில்லோம் டஷேன் பெயரால் அழைக்கப்படுகிறது.
duct : நாளம்.
ductless : நாளமில்லா.
ductless glands : நாளமற்ற சுரப்பிகள்; நாளமில் சுரப்பு; நாளமில்லா : இழை நாளமில்லாமலே நேரடியாகக் குருதிக்குள் கசிவு நீர் பரப்பும் சுரப்பிகள்.
Duffy system : டஃபி குருதிக் குழுமம் : இரண்டு காப்பு மூலங்கள் அடங்கிய ஒரு இரத்தக்குழுமம். இது இணை இனக்கீற்று மரபணுக்கள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
Dugas test : டுகாஸ் சோதனை : பொதுவாக உடம்பின் நடுப்பகுதிப் பக்கமாகவுள்ள முழங்கையினால் எதிர்ப்பக்கமுள்ள தோளைக் கையினால் தொட முடியும். தோல் பிறழ்ந்த ஒரு நோயாளி, இவ்விதம் எதிர்ப்புறத் தோளைத் தொட இயலாது. இதைக் கண்டறிவதற்கான சோதனை இது. அமெரிக்க மருத்துவ அறிஞர் லூயி டுகாஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.
duke's test : டியூக் சோதனை : இச்சோதனையில் தோலில் குத்தி, உறிஞ்சு காகிதத்தினால், இரத்தம் பாய்வது நிற்கும் வரையில் இரத்தம் தொடர்ச்சியாக எடுக்கப்படுகிறது. இரத்தம் கசிவதற்கான இயல்பான நேரம் 3-5 நிமிடம்.
Dulcolax : டல்கோலாக்ஸ் : பிஸ்கோடில் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
dul : மந்த.
dullard : மூடன்; மந்தன்.
dulness; மந்தம்; குறையொலி : சீதசன்னி, கழலைக்கட்டி, நுரை யீரல் கசிவு, நுரையீரல் கெட்டியாதல், திசு விரிவாக்கம் உண்டாக்கும் நோய்.
dumping : திணிப்பு; பொதித்தல்.
Duncan mechanism : டங்கன் செயல்முறை : பனிக்குடம் உடையும் போது குழந்தை வயிற்றிலிருந்து பிரிந்து வருவது கீழ் முனையிலிருந்து தொடங்குகிறது. உறுப்பு முழுவதுமே கருப்பை வாய்க்குள் திணிக்கப் படுகிறது. கடைசியாக மேல்முனை கருப்பைக் குழியிலிருந்து வெளிவருகிறது. இந்தச் செயல் முறையை பிரிட்டிஷ் பெண் பாலுறுப்பியலறிஞர் ஜேம்ஸ் டங்கள் விவரித்தார். அவர் பெயரால் இந்தச் செயல்முறை அழைக்கப்படுகிறது.
duodenal : முன்சிறுகுடல் சார்ந்த : முன்சிறுகுடல் தொடர்புடைய.
duodemum : முன்குடல்.
duodenai ulcer : முன்சிறுகுடல் புண் : அமிலம், பெப்சின் ஆகிய வற்றின் வினை காரணமாக முன் சிறுகுடல் கவரில் ஏற்படும் சீழ்ப்புண். இதனால், உணவு உண்டபின் கடுமையான வலி ஏற்படுகிறது. இந்த வலி பல மணி நேரம் நீடிக்கும். எனவே இதனைப் பசிவலி என்றும் கூறுவர். வலி ஏற்படும்போது உணவு உண்டால் வலி குறைகிறது. இந்தப்புண் காரணமாக இரத்தக்கசிவு உண்டாகி, மலத்துடன் இரத்தம் போகும். duodenectomy : முன்சிறுகுடல் அறுவைச் சிகிச்சை : முன்சிறு குடலின் பகுதியை அல்லது அதனை முழுவதும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.
duodenitis : முன்சிறுகுடல் அழற்சி; சிறுகுடல் : முன்சிறு குடலில் ஏற்படும் வீக்கம்.
duodenoenterostomy : முன்சிறுகுடல் இடைவழி : முன்சிறுகுட லுக்கும் குடலுக்குமிடையில் அறுவைச்சிகிச்சை மூலம் ஒர் இடைவழி உண்டாக்குதல்.
duodenography : முன்சிறுகுடல் ஊடுகதிர் ஆய்வு : முன் சிறு குடலை ஊடுகதிர் படம் எடுப்பதன் மூலம் ஆய்வு செய்தல்.
duodenopancreatectomy : முன் சிறுகுடல் அறுவை மருத்துவம் : கணையத்தின் தலைப்பகுதியில் புற்று நோய் ஏற்படும்போது முன் சிறுகுடலிலும், கணையத்தின் பகுதியிலும் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை.
duodenoscopy : முன்சிறுகுடல் உள் முக ஆய்வு : முன்சிறு குடலை உள் நோக்குக் கருவி மூலம் ஆய்வு செய்தல்.
duodenostomy : முன்சிறுகுடல் திறப்பு : முன்சிறுகுடலினுள் அடிவயிற்றின் சுவர் வழியாக ஒரு நிரந்தரத் திறப்பினை அறுவைச் சிகிச்சை மூலம் உண்டாக்குதல்.
duodenum : முன்சிறுகுடல்; முன் குடல் : மேலேயுள்ள இரைப்பையை கீழேயுள்ள மலக்குடலுடன் இணைக்கும் சிறுகுடலின் முற்பகுதி.
Duogastrone : டுவோகாஸ்டிரோன் : கார்பனாக்சோலோன் என்ற தயாரிப்பின் வணிகப் பெயர். இது பொதியுறை மாத்திரையாகக் கிடைக்கிறது. இது இரைப்பைக்குள் சென்றதும் இரு மடங்கு விரிவடைந்து இதனுள்ளிருக்கும் மருந்தினை வெளியேற்றுகிறது.
Duphalac : டுஃபாலாக் : லாக்டுலோஸ் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
dupp : இரண்டாம் இதய ஒலி : இதயத்துடிப்புமானி மூலமாக கேட்கப்படும் இரண்டாவது இதய ஒலி. இது முதலாவது இதய ஒலியை விடக் குறுகிய தாகவும், அதிக ஒலியுடையதாகவும் இருக்கும்.
Dupuytren's contracture : விரல் குறுக்கம் : கையிலுள்ள விரல்கள்,
முக்கியமாக மூன்றாவது, நான்காவது விரல்கள், வலியின்றி உள்ளங்கைைய நோக்கிக் குறுகுதல். டுப்பூட்ரின் விளக்கியது.Durabolin : டுராபோலின் : நாண்ட்ரோலோன் ஃபினைல் புரோப்பியோனேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
duramater : மூளை மேல் சவ்வு; முருட்டுச் சவ்வு : மூளையையும் முதுகுத் தண்டையும் சூழ்ந்துக் கொண்டிருக்கும் மூன்று பொதியுறைகளில் வெளிப்புறத்திலிருந்து மேல் சவ்வு.
duration : காலநீட்சி; காலவரை : 1. ஒரு கோளாறு இருந்துவரும் சராசரிக் கால அளவு. 2. ஒரு கருப்பைச்சுருக்கத்தின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையிலான கால இடைவெளி.
Duromine : டுரோமைன் : ஃபெண்டர்மைன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
Durophet : டுரோஃபெட் : ஆஃபிட்டாமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
dust : தூசு;மாசு.
Duvadilan : டுவாடிலான் : ஐசோக் சுப்ரின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
dwarf : குள்ளன் : வளர்ச்சி இயக்கு நீர் (ஹார்மோன்) குறைபாடு காரணமாக வளர்ச்சிக்குத் தடைப்பட்டுக் கூழையாக உள்ள ஆள்.
dwarfism : குள்ளத்தன்மை; கூளை; குறுமை : கேடயச்சுரப்பி சுரப்பாற்றல் இழந்து போவதன் காரணமாக அங்கக் கோணல் அல்லது தடையற்ற வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலையிலும், குடல் ஈர்ப்புச் சக்திக்குறைபாடு, சிறுநீரகம் செயலிழத்தல், குழந்தைக் கணை (ரிக்கெட்ஸ்) போன்ற கடுமையான நோய்களின்போதும் உடல்வளர்ச்சி தடைபடுதல்.
dye : சாயப்பொருள்; சாயம் : தானே வண்ணம் பெற்றுள்ள அல்லது வண்ணமூட்டப்பட்டுள்ள அல்லது வேறொரு பொருளுக்கு வண்ண மூட்டப் பயன்படுத்தப்படுகிற ஒரு பொருள்.
dyflos (DFP) : டிஃப்லோஸ் : இது ஒரு ஃபுளோரின் வழிப்பொருள். எசரின், நியோஸ்டிக்மின் போன்று செயல்படக்கூடியது. எண்ணெயில் இதன் 0.1% கரைசல் கருவிழிப்பாவை விறைப்பு. நோய்க்குப் பயன்படுத்தப்படும். இது ஆர்கனோ பாஸ்பரஸ் கூட்டுப் பொருளாக, வேளாண்மையில் பூச்சிக்கொல்லி மருந்தாகப் பயன்படுகிறது. கூட்டுப்பொருள் மனிதருக்குத் தீங்கு விளைக்கக் கூடியது.
dying : இறத்தல்; சாவு; மரணம்.
dynamic psychology : செயல்திற உளவியல்; வல்லாற்றல் உளவியல் : ஃபிராய்டிய அல்லது உளவியல் பகுப்பாய்வுக் கோட்பாட்டில் காணப்படுவது போன்ற தன்னறிவில்லாத ஆற்றலின் அல்லது செயலூக்கங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உளவியல்.
dynamometer : திறன்மானி; வலிமை அளவு : உடல் உறுப்புகளின் வலிமையை அளந்து கணிக்கும் கருவி.
Dyne : நொடி விசையழுத்தம் (டைன்) : ஒரு கிராம் எடை மானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் அளவு செலுத்தவல்ல அளவு டைய விசையாற்றல் அலகு.
dysaesthesia : தொடுவுணர்வு இன்மை; தொடுவுணர்வுச் சீரின்மை; தொடுவுணர்வுக் கேடு : தொடு உணர்வு இழக்கும்நோய்.
dysarthria : வாய் குளறல் நொய்; பேச்சுக்குளறல்; நாக்குழறல்; குழறுதல் : நரம்பு மற்றும் தசைக் கோளாறு காரணமாகச் சொற்களைச் சரிவர உச்சரிக்க முடியாமல், சொற்களைக் குளறிப் பேசுதல். இந்நோய் கண்டவர்கள் பொதுவாக மிகவும் மெதுவாகப் பேசுவார்கள், உயிர்மெய் எழுத்துக்களின் உச்சரிப்புத் தெளிவாக இரா; சொற்களிடையே இடைவெளி அதிகமிருக்கும்.
dysbasia : நடைமுடக்க நோய் : மைய நரம்புமண்டல நோய்கள் காரணமாக நடப்பதற்குச் சிரமம் ஏற்படுத்தும் நோய்.
dyscalculia : கணிப்புத் திறனின்மை : எண்களைக் கணித்தறியும் திறன் குன்றியிருத்தல்.
dyschezia : மலக்கழிப்புச் சிக்கல்; உருத்திரி; கடுமலர்ச் சிக்கல் : வேதனைதரும் உருவழிப்பு.
dyschondroplasia : எலும்பு வளர்ச்சித்தடை : எலும்பு வளர்ச்சித் தடையினால் ஏற்படும் கோளாறு. இதனால், உடம்பின் நடுப்பகுதி இயல்பாக இருந்தும், கை கால்கள் குட்டையாக இருக்கும்.
dyschromia : தோல்நிறமாற்ற நோய் : தோலின் அல்லது முடியின் நிறமியாக்கத்தில் ஏற்படும் கோளாறு.
dyscoria : கண்மணிப் பிறழ்ச்சி : கண்மணி இயல்பு நிலையிலிருந்து பிறழ்ந்திருத்தல்.
dyscrasia : குருதி நச்சு; தாதுசீர் கேடு; செல்திரிபு : இரத்தத்தில் நச்சுப்பொருள்கள் இருப்பதால் உண்டாகும் நோய்.
dysdiadochokinesia : மாற்று அசைவு முடக்கநோய் : அடுத்தடுத்து விரைவாக மாற்று அசைவுகளைச் செய்ய இயலாதிருத்தல்.
dysentery : வயிற்றளைச்சல்; சீதபேதி; வயிற்றுக்கடுப்பு; இரத்த பேதி : வயிற்றிலிருந்து இரத்தமும், சீழும் கலந்து வெளியேறுவதால் வயிற்றில் ஏற்படும் அழற்சி. இது ஒரு வகைப் பாக்டீரியாவினால் உண்டாகிறது. துப்புரவின்மை, வீட்டு ஈக்கள் ஆகியவற்றினால் இது பரவுகிறது.
dysethesia : அதீத உணர்வு : தோலில் ஏற்படும் சிறு சிறு பொக்குளம், மரமரப்பு, காந்தல், வெட்டுணர்வு, குத்துணர்வு போன்ற இயல்கடந்த உணர்வுகள்.
dysfunction : இயல்பு கடந்த இயக்கம்; செயல் பிறழ்ச்சி; கெடு வினை; திரிபியக்கம்; செயற்கேடு : உடலில் உறப்பு அல்லது பகுதி எதுவும் இயல்புமீறி இயங்குதல்.
dysgenesis : உருவக்கேட்டு வளர்ச்சி; செனிப்புக்கேடு : கரு வளர்ச்சியின் போது ஏற்படும் பொருத்தமில்லா உருவக்கேடு.
dysgerminoma : கருப்பைக் கட்டி : கருப்பையில் குறைந்த அளவு உக்கிரமுடைய கட்டி ஆண் அல்லது பெண் பண்புகள் உயிரணுக்களில் உருவாவதற்கு முன்பே இது உண்டாவதால், இதில் இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பதில்லை.
dysgonesis : பிறப்புறுப்பு நோய் : 1. ஒழுங்கற்ற பாக்டீரியா வளர்ச்சி. 2. பிறப்புறுப்புகளில் ஏற்படும் செயல்முறைக் கோளாறு.
dyshidrosis : கொப்புளம்; வியர்வைக் கட்டி : வியர்வை நாளங்கள் அடைபடுவதால் தோலில் உண்டாகும் கொப்புளம்.
dyskaryosis : மையக் கருவீக்கம் : ஒர் உயிரணுவின் மையக் கருவின் இயல்புகடந்த நிலை.
dyskeratosis : மேல்தோல் திசுக்கொம்புப் பொருள் மாற்றம் : மேல் தோலின் புறத்திக உயிரணுக்களின் கொம்புப் பொருள் மாற்றம் மாறுதலடைதல்.
dyskinesia : அசைவியக்க இழப்பு; அசைவிழப்பு: இயக்கக் கேடு : உளவியல் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளின் பக்க விளைவாக முகத்தையும், வாயையும் தானாக அசைக்க முடியாமல் போதல்.
dyskinesis : தன்னிச்சை அசைவு; முடக்கம் : தன்னிச்சையான அசைவுகளைச் செய்வதில் ஏற்படும் சிரமம்.
dyslalia : பேசும் திறனிழப்பு; சொற் கேடு : பேச்சு உறுப்புகளில் ஏற்படும் கோளாறு காரணமாக பேசுவது கடினமாக இருத்தல்.
dyslexia : பேசும் ஆற்றலின்மை; சொல்யெழுத்துக்கேடு : எழுதவும் படிக்கவும், உச்சரிக்கவும் இயல்பாகத் திறனுடைய ஒருவர் அந்த ஆற்றல்களை இழந்து விடும் நிலை. இது மூளையில் காயம் அல்லது புலனுணர்வு நரம்புகளில் ஏற்படும் கோளாறு காரணமாக ஏற்படும்.
dyslipidaemia : அதீத நிணநீர்க் கொழுப்பு நோய் : நிணநீர்க் கொழுப்புகளிலும் கொழுப்புப் புரதச் செறிவுப் பொருள்களிலும் ஏற்படும் அதீதநிலைகள்.
dysmaturity : பிறவி வளர்ச்சிக் குறைபாடு; முதிர்வுக்கேடு : பிறவி யிலேயே வளர்ச்சிக் குறைபாட்டுக்கான அறிகுறிகள். குழந்தை பிறக்கும்போது எடை மிகவும் குறைந்திருத்தல் இந்த அறிகுறிகளில் ஒன்று.
dysmelia : உறுப்புக் குறைபாடு; பிறவி ஊனம்; அங்கக்கேடு : உடல் உறுப்புகள் குறைபாடுகளுடன் இருத்தல்.
dysmenorrhoea : நோவு மாத விடாய்; வலிமிகு மாத விடாய்; சூதக வலி; சூதக வாய்வு; வலிப் போக்க : பெண்களுக்கு கடும் வலியுடன் மாதவிடாய் தோன்றுதல்.
dysorexia : கடும் பசி; இயல்பற்ற பசி; பசிக்கேடு : இயல்புக்கு மீறிய கடும்பசி.
dyspareunia : நோவு கலவி; வலிமிகுப் புணர்ச்சி; புணர்ச்சிச் சிக்கல்; புணர்வலி; புணர்நோவு; இடர்புணர்வு : சில பெண்களுக்கு உடலுறவின்போது நோவு உண்டாதல்.
dyspepsia (dyspepsy) : வயிற்று மந்தம்; செரிமானக் கோளாறு; பசி யின்மை; அசீரணம்; செரிமானக் கேடு; செரியாமை : உணவு செரியாமல் இருத்தல்.
dyspeptic : வயிற்று மந்த நோயாளி : வயிற்று மந்த செரிமானக் கேடு தொடர்பான.
dysphagia : தொண்டைகுழி அடைப்பு; விழுங்க இயலாமை; விழுங்கற்கேடு : தொண்டை உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு உணவை விழுங்குவது கடினமாக இருத்தல்.
dysphasia : மொழித்திறன் கோளாறு; பேச்சுச் சீரின்மை; பேச்சுக்கேடு; உரையிலி : மொழியை உருவாக்கிக் கொள்ளவும், புரிந்துகொள்ளவும் அனுமதிக்கும் மூளை நடவடிக்கை பாதிக்கப்பட்ட நிலை. இதில் பேச்சு உறுப்புகள் பாதிக்கப்படுவதில்லை.
dysplasia : மட்டுமீறிய வளர்ச்சி; இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி; வளர்ச்சிக்கேடு : திசுக்கள் இயல்புக்கு மீறுதலாக மிகுதியாக வளர்தல்.
dysplastic naevus : தோல் மறு : ஒருவகை தோல் புண். இதில் ஒழுங்கற்ற மறுக்கள் தோன்றும். இந்த மறுவின் மையத்தில் கரு நிறக் கொப்புளம் உண்டாகும் விதைவடிவ மாறுதல்கள் ஏற்படும். இது பொதுவாக உக்கிரமாவதற்கு முந்திய நிலை எனக் கருதப்படுகிறது.
dyspnoea : மூச்சுத்திணறல்; மூச்சிளைப்பு; மூச்சுத் திகைப்பு : மூச்சு விடுவதில் இடர்பாடு; மிகவும் சங்கடப்பட்டு மூச்சு விடுதல். dyspraxia : தசைக்கட்டுபாடிழப்பு : தசைகளின் மீது தானியக்கக் கட்டுப்பாடு இல்லாதிருத்தல்.
dysraphism : நரம்புகுழாய் செயலிழப்பு : முதிர் கரு நரம்பு குழாயில் இயல்பான இணைப்பு ஏற்படாமல் போதல்.
dysrhythmia : ஒழுங்கற்ற இதயத் துடிப்பு; லயக்கேடு :இதயத் துடிப்பு ஒரு சீராக இல்லாதிருத்தல்.
dyssomnia : உறக்கமிழப்பு நோய் : உறக்கம் வராமலிருக்கும் கோளாறு. இதில் உறங்குமளவு, உறக்கத்தரம், உறங்கும் கால அளவு ஆகியவை சீர் குலைந்து போகின்றன.
dystaxia : தானியக்கமின்மை; சீர் இயக்கக்கேடு : தானியக்க அசைவுக் கட்டுப்பாடு இல்லாதிருத்தல்.
dystocia : கடினப்பிள்ளைப்பேறு; பேற்றுக்கேடு : பிள்ளைப்பேறு நடைபெறுதல். கருப்பை வாய் விரிவடைவதில் தாமதம் காரணமாகக் கடினப்பேறு.
dysthymia : மனக்கோளாறு : மனச்சோர்வு உண்டாக்கும் நரம்புத்தளர்ச்சியுடன் கூடிய ஒரு வகை மனக்கோளாறு.
dystonia : தசை விறைப்பு நோய்; இறுக்கத்திரிபு மனக்கோளாறு: தசைகள் விறைத்துப் போகும் நோய். இதில் தசைகளை அசைக்கும்போது கடுமையான வலி உண்டாகும்.
dystrophy : தவறான ஊட்டச் சத்து; உணவுக் குறை; உடற் கோளாறு; வளப்பக் கேடு; வளர்ச்சிக் கேடு : ஒர் உறுப்புக்கு அல்லது தசைத் திசுக்களுக்கு தவறான ஊட்டச்சத்து செல்லுதல்.
dysuria : சூடுபிடிப்பு; சிறுநீரின்மை; கெடு நீரிழிவு; நீர்க்கடுப்பு : சிறுநீர்க் கழிக்கும்போது வலி உண்டாகும் கோளாறு.
dyszoospermia : விந்து உயிரணு குறைபாட்டு நோய் :விந்து உயிரணு ஒழுங்கற்ற முறையில் உண்டாதல்.