உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/இரகசியம்

விக்கிமூலம் இலிருந்து

நெல்லுக்குள்ளே அரிசி இருக்கு, சொல்லாதே!
நெருப்புக்குள்ளே சூடு இருக்கு, சொல்லாதே!
சொல்லுக்குள்ளே பொருள் இருக்கு, சொல்லாதே!
சோற்றுக்குள்ளே சத்து இருக்கு, சொல்லாதே!

பாட்டுக்குள்ளே இசை இருக்கு, சொல்லாதே!
பழத்துக்குள்ளே ருசி இருக்கு, சொல்லாதே!
காட்டுக்குள்ளே மரம் இருக்கு, சொல்லாதே!
கடலுக்குள்ளே உப்பு இருக்கு, சொல்லாதே!

பூமிக்குள்ளே நீர் இருக்கு, சொல்லாதே!
பூவுக்குள்ளே தேன் இருக்கு, சொல்லாதே!
நாமிப்போது பேசியதை யெல்லாம்நீ,
நாலுபேர்கள் காதுகேட்கச் சொல்லாதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/இரகசியம்&oldid=1724539" இலிருந்து மீள்விக்கப்பட்டது