உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/மலர்

விக்கிமூலம் இலிருந்து

இன்முகம் காட்டிடுமே—அதனால்
இன்பமும் ஊட்டிடுமே.
நன்மணம் வீசிடுமே—சுற்றி
நான்கு திசைகளுமே.

வண்டுகள் தேன்விரும்பி—நாடி
வந்திடும் மொய்த்திடவே.
கண்டவர் யாவரையும்—இதனது
காட்சி மயக்கிடுமே

ஈசன் திருவடியில்—இதுவே
என்றென்றும் நின்றிடுமே.
பாசமாய் மக்களுமே—இதனைப்
பறித்துச் சூடுவரே.

மணம் நடக்கையிலே—அங்கே
மணத்தை வீசிடுமே.
குணம் பெரிதாகும்—ஆனால்
குற்றம் எதுவுமில்லை.

மலர் எனஉள்ளம்—நமக்கு
மலர வேண்டுமடி.
பலரும் போற்றிடவே—உலகில்
பண்புடன் வாழ்வோமடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/மலர்&oldid=1724744" இலிருந்து மீள்விக்கப்பட்டது