மானாவாரிப்பூ
மானாவாரிப்பூ
மேலாண்மை பொன்னுச்சாமி
வைகை வெளியீடு
6/16, புறவழிச் சாலை,
மதுரை - 625 018
மானாவாரிப்பூ (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்) ■ ஆசிரியர் : மேலாண்மை பொன்னுச்சாமி ■ முதல் பதிப்பு : செப்டம்பர் - 2001 ■ பதிப்புரிமை : ஆசிரியருக்கே ■ பக்கம் : 384 ■ விலை : ரூ. 100 ■ முகப்பு அட்டை : ஓவியம் - தி.வரதராஜன். வடிவமைப்பு - வே.பாண்டி, போட்டோ - சோழ.நாகராஜன் ■ அச்சிட்டோர் : வைகை பிரிண்டர்ஸ் & பப்ளிசர்ஸ், 6/16, புறவழிச்சாலை, மதுரை - 625 018 போன்: (0452) 667450 ■ வெளியிட்டோர் : வைகை வெளியீடு, 6/16. புறவழிச்சாலை, மதுரை -625 018 போன் : (0452) 669769 பேக்ஸ் : (0452) 667070 இ-மெயில் : theekati@md3.vsnl.net.in ■
Manavarippoo (Collection of selected short stories) by : Melanmai Ponnuchami ■ Language : Tamil. ■ First Edition : September 2001. ■ © to the writer. ■ Pages: 384 ■ Price Rs. 100 ■ Cover : Art - T.Varadharajan, - Design : V.Pandi-Photo : Chola.Nagarajan. ■ Printed by: Vaigai Printers & Publishers, Madurai - 625 018; Ph : (0452) 667450. ■ Published by : Vaigai Veliyeedu, 6/16, Bypass Road, Madurai - 625 018; Ph : (0452) 669769; Fax : (0452) 667070. E-mail : theekati@md3.vsnl.net.in ■
- சமர்ப்பணம்
ஊர் விட்டு
உறவு விட்டு
உள்ளூர் மொழி விட்டு
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
பாலைவன தேசம் சென்று
வேர்வை சிந்தும் - எம்
வாலிபத் தமிழருக்கு ...
பதிப்புரை
தோழர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் சிகரச் சிறுகதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடுவதில் வைகை வெளியீட்டகம் பெருமிதம் கொள்கிறது. இக் கதைகள் அனைத்தும் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்தவை. பல்வேறு பரிசுகளைக் குவித்தவை.
சம காலத் தமிழ்ச் சிறுகதை உலகம் விரிந்து வருகிறது. பண்பட்ட சிறுகதைகள் வெளிவருகின்றன. இவற்றில் முற்போக்கு இடதுசாரி எழுத்தாளர்களே முதலிடம் வகிக்கிறார்கள். அந்த முதல் வரிசையில், முன்னணியில் நிற்பவர் தோழர் மேலாண்மை.
இலக்கியம் என்பது வாழ்விலேயிருந்து பிறப்பது; யதார்த்த வாழ்வில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து யதார்த்த இலக்கியம் படைப்பதுதான் நின்று நிலைக்கும். வாழ்வில் வதைபடும் கிராமப்புற மக்களின் கதைகளை இலக்கியமாக்குதல் எளிதான காரியமல்ல. அதிலும் வானம் பார்த்த பூமியாய்க் கிடக்கும் தமிழகத்து மானாவாரி மனிதர்களைப் படைப்பது எளிதல்ல. வாழ்க்கையை ஊடுருவிப் பார்த்து உள்ளார்ந்த உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிக்கொணரவேண்டும். இதில் வெற்றிபெற்ற படைப்பாளிகள், அதிலும் தொடர்ந்து எழுதுகிறவர்கள் மிகச் சிலரே. மேலாண்மை பொன்னுச்சாமி அத்தகு சமகாலப் படைப்பாளிகளில் தலைசிறந்தவர்.
ஒரு சின்னஞ் சிறுவனாய் செம்மலரில் கால் பதித்து, இன்று வெகுஜனப் பத்திரிகைகளிலும் பவனிவரும் அளவுக்கு உயர்ந்துள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், கட்டுரை நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இத்தொகுப்பிலுள்ள 31 கதைகளும் மானாவாரி மனிதர்களின் மகத்துவத்தை உங்களுக்கு எடுத்துரைக்கும்.
மதுரை.
1.9.2001
வைகை வெளியீட்டகம்,
நன்றியுரையே முன்னுரையாய் ...
இந்த நூலுக்கு முன்னுரை என்று தனியாகத் தேவையில்லை. இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் சிறுகதைகள் யாவும் என் மொத்தச் சிறுகதைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட மணிக் கதைகள்.
துபாயில் பணியாற்றுகிற சின்னவன் பாரதி என்ற கவிஞர் பி.எஸ்.அழகேசன்தான் ஆனந்த விகடனில் என் சிறுகதையைப் படித்துவிட்டு முதலில் கடிதம் எழுதினார். பாராட்டுக் கடிதமாகவும் இருந்தது. பரிவுக் கடிதமாகவும் இருந்தது.
என் மீது ஆழ்ந்த அன்பும், தூய்மையான பாசமும் கொண்டிருந்தார். பதில் கடிதம் நானும் எழுதினேன். அவருடன் கைகோர்த்தனர் அவரையொத்த நண்பர்கள்.
திரைகடல் ஓடி திரவியம் தேடுகிறவர்கள். யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்ற அன்பு நம்பிக்கையில் வியர்வை விதைக்கிறவர்கள். சுற்றம் சொந்தம் விட்டுப்பிரிந்துபோய் அயல்நாட்டில் பணி செய்கிறவர்கள்.
தமிழின் மீதும் நல்லிலக்கியங்களின் மீதும் காதல் கொண்டவர்கள். எனக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவி செய்ய விரும்பினர். வற்புறுத்தினர். அவர்கள் மனதில் உதயமானதுதான் இம்மாதிரியான நூல் வெளியிடும் முயற்சி. துபாயில் வாழ்கிற தமிழர்களின் இலக்கியப்பற்றையும், தமிழ் நேயத்தையும் நம்பி துபாயிலும் நூல் விற்கிற திட்டம். கடல்தாண்டிய மணல் தேசங்களில் நமது தமிழ்ச் சிறுகதைகள்.
கவிஞர் அழகேசன் திட்டம் நிறைவேற்ற களம் இறங்கினார்.
அவருடன் தமிழ் நேயத்தோடும், நல்லிலக்கியப் பாசத்தோடும் பரிவுணர்வோடும் தோள் தந்த துபாய்வாழ் நண்பர்கள் மதுரை சக்தி கணேஷ், மதுரை சங்கர், பெரம்பலூர் ரத்தின குமார், இராமநாதபுரம் மாதவன், மதுக்கூர் இமாம் முகமது, சென்னை லட்சுமிபதி, சந்திரசேகரன், தஞ்சை அன்பழகன், மதுக்கூர் ஜமால் முகமது, பெரம்பலூர் வைத்தி ஆகியோர் தோள் தந்தனர்.
இவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல? உற்றார் உறவினரைப் பிரிந்து அயல்நாட்டில் பாடுபடுகிற இந்த நல்நெஞ்சங்களின் நல்லுணர்வில் இரு பலன்கள் விளைகின்றன.
ஒன்று, ஏழை, எளிய கிராமத்துத் தமிழ் எழுத்தாளனுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது.
இரண்டு, கடல்கள் தாண்டிய அந்த மணல் தேசங்களில் தமிழ் நூல்கள் பரவுகின்றன. உள்ளுரைப் பற்றிய தமிழ்ச் சிறுகதைகள், உலகமெல்லாம் பரவுகின்றன. இது பாராட்டத்தக்க தமிழ்ப்பணி; இலக்கியப்பணி; முற்போக்குச் சிந்தனைப் பரவல் பணி.
இவர்கள் எல்லாம் என் பிள்ளைகள். இவர்கள் அன்பிலும், பாசத்திலும் நன்றி சொல்லக்கூட நா எழாமல் பரவசத்தில் நனைகிறேன்.
தமிழ் இவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது.
இப்படியொரு நூல் வெளியிடவேண்டும் என்றவுடன், ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் முன்வந்த வைகை வெளியீட்டகம், அதன் பொறுப்பாளர் சி.செல்லச்சாமி அவர்கள், என் ஆசான் திரு. எஸ்.ஏ.பெருமாள் அவர்கள்,
நல்லவிதமாக அட்டை வடிவமைப்பு செய்த ஓவியர் தி.வரதராசன், வே.பாண்டி ஆகியோர், கதைச்சேகரிப்பில் கை தந்த ஸ்ரீரசா,
அச்சு சரிபார்ப்பதிலிருந்து பக்க எண் பட்டியலிடுகிற வரை என் பிரதிநிதியாகவே நின்று ஓடி ஓடி உழைத்த என் இனிய தோழனும், கவிஞரும், புகைப்படக் கலைஞரும், செம்மலர் உதவி ஆசிரியருமான சோழ.நாகராசன்,
மற்றும் வைகை அச்சக ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் வணக்கமும் என்றென்றும் உரித்தாகும்.
பொறுக்கியெடுத்து தொகுக்கப்பட்ட சிறுகதைகள் என்ற முறையில் இந்த நூலுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்கிறது.
நூல் உங்கள் கையில். வாசியுங்கள். உங்கள் பாராட்டுப் பூக்களையும் வீசுங்கள் கடிதமாக. உற்சாகமூட்டும்; விமர்சனம் இருந்தாலும் எழுதுங்கள், என்னை நெறிப்படுத்தும். நன்றி!
மேலாண்மை மறைநாடு — 626127
இராஜபாளையம் வழி,
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு.
என்றும் உங்கள்,
மேலாண்மை பொன்னுச்சாமி
அயல்தேசமிருந்தாலும் தமிழ் மறக்காமல்
இந்த நூல் மலர நல்மனதும் தோளும்
வழங்கிய துபாய்வாழ்
தமிழ்ச்சங்க நண்பர்கள் குழு:
சின்னவன் பாரதி என்ற
திரு. பி.எஸ்.அழகேசன், பெரம்பலூர்.
”சக்திகணேஷ், மதுரை.
”சங்கர், மதுரை.
”ரத்தினகுமார், பெரம்பலூர்.
”மாதவன், இராமநாதபுரம்.
”இமாம் முகமது, மதுக்கூர்.
”லட்சுமிபதி, சென்னை.
”சந்திரசேகரன், சென்னை.
”அன்பழகன், தஞ்சை.
”ஜமால் முகமது, மதுக்கூர்.
”வைத்தி, பெரம்பலூர்.
தமிழுக்கும் அமுதென்று பேர் — அந்தத் தமிழ்
இன்பதமிழ் எங்கள் உயிருக்கு நேர்...
பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிட்டதுபோல்.... தமிழ்மொழி ஒப்பிலாதது... இந்த நூல் வெளியிடுவதில் பெரும்பங்காற்றிய இளவல் அழகேசன் அவர்கள், இளவல் சத்யா அவர்களும் நன்றிகூறத்தக்கவர்கள். துபாயிலிருந்து நூல் வெளியீடு என்றபோது சற்று கடினமாக இருந்தது. அதை எளிமைப்படுத்தி அழகுற வெளியிட்ட இவர்களுக்கு எனது பாராட்டுக்கள் பல.
பெற்ற தாயின் மடியில் தவழ்ந்து உணவருந்தி அன்போடு வாழ்ந்தபோது தாயின் அருமை தெரிவதில்லை. தாயினை இழந்து மாற்றாந் தாயிடம் மாட்டி அவதிப்படும்போதுதான் தாயின் அருமை புரிகின்றது. அதுபோல் தமிழ்நாட்டில் இருந்தவரை தமிழின் அருமை தெரியவில்லை. தமிழ்நாட்டை விட்டு வெளிவந்து மாற்று நாடுகளில் அவதிப்படும் போதுதான் தமிழ்நாட்டின் பெருமை, தமிழ் மொழியின் சிறப்பு புரிகின்றது.
‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே...’ என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப அயல் நாட்டில் மாற்று மொழிகளைக் கேட்டுப் புளித்துப்போன காதுகளுக்கு இடையே தமிழ்மொழி கேட்கின்றபோது, படிக்கின்ற போது இன்பத்தேன் வந்து பாய்ந்தது போன்றே உள்ளது. இங்கே அன்புச்கோதரர்களின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. அயல் நாட்டில் குளிர்சாதன அறைகளில் மெத்தையில் அமர்ந்துகொண்டு குளிர்சாதன காற்றை அனுபவிக்கின்ற இன்பத்தைவிட சொந்த கிராமத்தில் மணல் வெளியில் அமர்ந்து கொண்டு தென்றல் காற்றை சுவாசித்துப் பெறுகின்ற சுவை மிகமிக இனிது...
அதுபோல் இங்கு இடம் பெற்றுள்ள திரு.மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் சிறுகதைகள் கிராமத்து வாசனைகளை அள்ளிவருகின்றன. பாத்திரங்களின் யதார்த்தங்கள், எழுத்தின் நடை, கதையின் கரு யாவும் உண்மையின் எதிரொலிகள்.
இந்த நூல் வெளியிட உதவி செய்த அனைத்து அன்பு தமிழ் சகோதரர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க தமிழ்ǃ
துபை.
10.12.2000
அன்புடன்,
சந்திரசேகர்.
இலக்கிய விரும்பிகளுக்கு வணக்கம்.
சிறுகதைச் செம்மல் மேலாண்மையாரது சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இலக்கிய உலகம் புரியாத மொழிகளில் தேவையில்லாத சுவையோடு செல்கிறது. அவர்களுக்கு மத்தியில் மேலாண்மையாரின் படைப்புகள் எங்களுக்கு இயல்பு வாழ்க்கையை... அவற்றில் நடைபெறுகிற மௌனக் குற்றங்களை படம் பிடித்துக்காட்டுகின்றன. துபையில்... பணிக்குச் சென்று அறைக்குத் திரும்பியவுடன் நம்மை நம் ஊருக்கே அழைத்துச் சென்று அவரது படைப்புப் பாத்திரங்களோடு ஒன்றி உலாவச் செய்துவிடுவார் மேலாண்மை அவர்கள். ஓய்வு நேரங்களில், அநேக நாட்கள் இவரது படைப்புகளைப் பற்றிய பேச்சுக்களே நண்பர்கள் மத்தியில் இருக்கும். மேலாண்மையாருடைய கதைகளுக்காவே ஆனந்த விகடன் பத்திரிகை எங்கள் சத்வா பகுதியில் விற்றுத் தீர்ந்துவிடும். அவருடைய படைப்புகளில் வருகிற யதார்த்தமான... எளிய பாத்திரங்கள் பலமுறை இங்குள்ள துபை தமிழ் நண்பர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.
2000ஆம் ஆண்டை முன்னிட்டுச் ஏதேனும் சிறப்பாக செய்யலாமென நண்பர்கள் கூடி விவாதித்தபோது எல்லோரது ஒருமித்த கருத்தாய் முன்வைக்கப்பட்ட விசயம்தான் மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகள் தொகுப்பு. மெல்லிய கிராமத்தில் பிறந்து சராசரி விவசாயிக்கே உரிய கடன் சுமைகளோடு இவ்வளவு சிறப்பாகப் படைப்புகளை நம் தமிழ் உலகத்திற்கு வாரிவாரி வழங்குகிறார் என்பது ரொம்பவும் வியத்தகு விஷயம்தான். இன்றைய படைப்பாளிகள் எல்லோரும் பொருளாதாரச் சக்தியின்மையால் துவண்டு போயிருப்பது நன்றாக தெரிகிறது. அரசாங்கம் அவர்களுக்காக ஏதேனும் செய்ய முன்வரவேண்டும். மேலாண்மையாரின் படைப்புகள் மூலம் நாங்கள் புதுமைப் பித்தனையும், சமுத்திரத்தையும் காண முடிகிறது. ‘தமுஎச’வின் முக்கியப் பொறுப்பில் உள்ள மேலாண்மையார் மென்மேலும் படைப்புகளை வழங்கி இலக்கிய உலகில் உயர்ந்து நிற்க வேண்டும். துபாய் தமிழ் நண்பர்கள் யாவரும் இந்த நூலை வாங்கி இலக்கிய பயனுறுமாறு வேண்டுகிறோம். நூல் வெளியிட உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியினை உரித்தாக்குகிறோம்.
வெல்க தமிழ்ǃ
அமீரகம். துபை.
04.12.2000
அன்புடன்,
சின்னவன் பாரதி (எ) பி.எஸ். அழகேசன்
உள்ளே ...
| 11 |
| 20 |
| 29 |
| 42 |
| 53 |
| 64 |
| 75 |
| 86 |
| 98 |
| 108 |
| 119 |
| 131 |
| 140 |
| 147 |
| 157 |
| 165 |
| 174 |
| 186 |
| 198 |
| 210 |
| 222 |
| 234 |
| 245 |
| 258 |
| 270 |
| 281 |
| 290 |
| 305 |
| 318 |
| 330 |
| 339 |
| 354 |
| 366 |