உள்ளடக்கத்துக்குச் செல்

மானுடப் பிரவாகம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




மானுடப் பிரவாகம்

மேலாண்மை பொன்னுச்சாமி

கங்கை புத்தகநிலையம்

23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை – 600 017.

முதற் பதிப்பு : டிசம்பர், 1990
இரண்டாம் பதிப்பு (கங்கை) : டிசம்பர், 2004
விலை: ரூ.50.00

▸ Title Manuda piravagam
▸ Author Melanmai Ponnusamy
▸ Subject Short Stories.
▸ Language Tamil
▸ Edition Second Edition(Gangai), December, 2004
▸ Pages 160
▸ Publication : GANGAI PUTHAKA NILAYAM,
23, Deenadayalu Street,
Thyagaraya Nagar, Chennai-600 017.
Price : Rs. 50.00

Typesetting : GoodWill Computers,
T.Nagar, Chennai-17.
Printed by Malar Printers 044-8224803

சமர்ப்பணம்விழிப்படையாமல்,
இன்னும் அமைப்பாகச் சங்கமித்துச்
சக்திபெறாமல்
ஆடிக்காற்றில் சிக்கிய சருகுகளாக
துன்ப சாகரத்தில் புலம்பிக் கொண்டே
வாழ்க்கையில் அலைகிற
என் சக
மானாவாரிச் சம்சாரிகளுக்கு...

மானுடப்
பிரவாகம்

பதிப்புரை

ன்றைய நாள் நாடறிந்த நல்ல தமிழ் எழுத்தாளர் திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் சிறந்த கதைகள் சிலவற்றை இங்கே நூலாகத் தருவதில் பெருமையடைக்கிறோம்.

மண்ணின் மணம் கமழும் இக்கதைகளில் சமுதாயத்தின் அடிமட்ட மக்களின் அவலங்கள் நம் உள்ளத்தை நெகிழச் செய்யும் வண்ணம் சித்திரிக்கப் பெற்றுள்ளன. கதைகள் இயல்பான வட்டார வழக்கிலேயே அமைந்துள்ளமை யதார்த்தப் படப்பிடிப்பை இலகுவாக்கியிருக்கின்றது. கதைகளின் கூடுதல் சிறப்பிற்குக் காரணமும் இந்த வழக்குச் சொற்களே.

ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதியுள்ள இக்கதைகளை வெளியிட உதவிய ஆசிரியருக்கு வாழ்த்தும் நன்றியும் உரித்தாகுக.

—கங்கை புத்தக நிலையத்தார்

என்னுரை

மீபகாலமாக தமிழில் படைப்பிலக்கியம் ஓரளவு வீரியம் பெற்றிருக்கிறது. அதிலும் நவீனப் படைப்பிலக்கியம் செழிப்பாகவே வளர்ச்சி பெற்றிருக்கின்றது.

கவிதைத் துறையில் ஒரு தேக்கம் இருந்தாலும், சிறுகதை இலக்கியம் அசுர பலத்துடன் வளர்ந்திருக்கிறது.

மண்ணையும், மனிதனையும் நேசிக்கிற யதார்த்தமான சிறுகதைகள் ஏராளமாய் வருகிற இச்சமயத்தில். திறனாய்வு இலக்கியம் வளர்ச்சியேயடையாமல் rணித்து வருகிறது.

மேலை நாட்டில் ஒரு படைப்பிலக்கிய நூல் வெளிவந்த ஆறுமாதத்திற்குள் அந்நூல் பற்றிய நூற்றுக்கணக்கான விமர்சன நூல்கள் வெளிவந்துவிடும் என்கிறார்கள்.

தமிழில் அந்த நிலை தூரத்துக் கனவாகக் கூடத்தெரியவில்லை. பல நூல்கள் பத்திரிகை விமர்சனத்தைக்கூடப் பெற முடியாமல், கிணற்றில் போட்ட கல்லாக அடையாள மற்றுப் போய் விடுகின்றன.

மிக நவீனமான அச்சுயந்திரங்களும் அச்சுமுறைகளும் வந்துவிட்ட இக்காலம், இலக்கியம் என்பதை ராஜசபை எல்லைக்குள் குறுகிப் போகவிடாமல், விரிந்து பரந்த ஜனப் பகுதிகளை நோக்கி ஆயிரமாயிரம் சிறகுகளோடு பறந்து போய்க்கொண்டிருக்கிற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இலக்கியம் ஜனநாயகப் படுகிற இக்காலத்தில் அதற்கு உதவியாகவும், சாதனமாகவும் இருக்கவேண்டிய திறனாய்வு இலக்கியம் வளராமல் கிடப்பது ஒரு வரலாற்று முரண்.

வார, மாத இதழ்கள் மூலமாகவும், நூல் வடிவிலும் ஆயிரமாயிரம் கால்களோடு மக்களை நோக்கிப் பாய்ந்து வருகிற படைப்பிலக்கியங்களைப் பற்றிய ஓர் ஆரோக்கியமான பார்வையும், உயர்ந்த ரசனையும் உருவாக்க வேண்டிய சமூகக் கடமையைத் தோளில் சுமந்திருக்கிற திறனாய்வு இலக்கியம், பிரக்ஞையற்றுக் குழம்பிக் கிடக்கிறது.

இருக்கிற கொஞ்ச நஞ்சம் திறனாய்வு இலக்கியமும் நோய் பிடித்துக்கிடக்கிறது. ஓரவஞ்சனைகளும், பாரபட்சங்களும் முகம் பார்த்து முகாம் பார்த்து அதற்கேற்பத் தீர்ப்புச் சொல்கிற அநீதிகளும் மலிந்து கிடக்கின்றன

நேர்மை மிகுந்த ஒன்றிரண்டு திறனாய்வாளர்கள் இருப்பது உண்மைதான். ஆனால் பெரும்பாலான திறனாய்வாளர்கள், மக்கள் விரும்பிப் போற்றுகிற முற்போக்குப் படைப்புகளை அகந்தையுடன் ‘குப்பை’ என்றும், ‘வெறும் பிரச்சாரம்’ என்றும் அழுக்கான மனக் குரோதங்களுடன் அலட்சியப் படுத்துகின்றனர். விளைவு? நிஜத்துக்கு நெருங்கியே வராத இந்தத் திறனாய்வுகளே அலட்சியப் படுத்தப்படுகின்றன. வலிமையற்ற விரைய எழுத்துகளாகின்றன.

செம்மலர், தாமரை போன்ற இதழ்களில் பல சிறு கதைகள் கௌரவம் மிகுந்த ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெறுகின்றன. முற்போக்குப் படைப்புகளான ‘சங்கம்’ ‘மானாவாரி மனிதர்கள்’ போன்ற நாவல்கள் இலக்கியச் சிந்தனைப் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. சங்கம் இரண்டாம் பதிப்புப் பெறுகிறது. இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்படுகிறது.

இப்பேற்பட்ட புகழ் மிகுந்த நாவலைக்கூட ‘வெறும் பிரச்சாரம்’ என்று முகம் சுளித்து அலட்சியம் செய்கிற இந்தத் திறனாய்வாளர்கள் மோசமான மன நோயாளிகள் என்பதில் சந்தேகமேயில்லை.

இவர்கள்தான், முற்போக்குச் சிறுகதைகள் உள்ளடக்க ஆழத்திலும் உருவச் சிறப்பின் சிகரத்திலும் உன்னதம் பெறுகிற நிகழ் நிஜத்தை மௌனத்தின் மூலமாகவும், அலட்சியம் மூலமாகவும் மறைத்துவிட ஆசைப்படுகிறார்கள்.

நடக்கக் கூடிய ஆசையா? வரலாறு இவர்களுக்கு எதிர்த்திசையிலேயே சுழல்கிறது.

திறனாய்வுச் சிந்தனைகளும், தமிழ்ப் பற்றும், சமுதாய அக்கறையும், மானுட நேயமும் நிறைந்த பேராசிரியர்கள் சமூகப்பணிக்குக் களத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேனாவைக் கையிலெடுத்து விட்டால்...

கல்லாய்க் கிடக்கும் திறனாய்வு இலக்கியம், அகலிகையாய் உயிர் பெறும்; கடமையாற்றும்; கௌரவம் பெறும்.

இந்நூலை வெளியிட முன்வந்து அழகிய முறையில் அதை புத்தகமாக வெளியிட்டுள்ள புகழ்பெற்ற கங்கை புத்தக நிலையத்தார்க்கும்,

என் கதைகளைப் பிரசுரித்து, நூலாகவும் வெளியிடச் சம்மதம் தந்த கல்கி, செம்மலர் ஆசிரியர் குழுவுக்கும்,–

என் கதைகளைத் தேடுவதில் ஒத்துழைப்பு நல்கிய சக எழுத்தாளர்கள் அழகர்சாமி, இராகுலதாசன் அவர்களுக்கும்,–

72லிருந்து என்னையும் சிறுகதை எழுத்தாளனாக அங்கீகரித்துத் தாயின் பாசத்துடனும், ஒரு தந்தையின் கண்டிப்புடனும் என்னை வழிநடத்திய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் கே. முத்தையா அவர்கட்கும்,–

என்னை விடவும் என் கதைகள் பற்றிய ஞாபகமுள்ள அன்புக்குரிய தோழர் தி. வரதராசன் அவர்களுக்கும்,–

என் படைப்புகளை விமர்சித்தும், பராட்டியும், தோளில் சுமந்து விற்றும் எனக்கு உறுதுணையாக இருந்த இயக்கத் தோழர்கள் அனைவருக்கும்

எனது இதய பூர்வமான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

இதோ... எனது கதைகளின் தொகுப்பு, படித்து விட்டு மெளனமாயிருப்பதைக் காட்டிலும் விமர்சித்தால் என்னைக் கூர்மைப்படுத்தும்; பாராட்டினால் என்னை உற்சாகப்படுத்தும்.

நன்றி!


மேலாண்மறை நாடு
626127
காமராசர் மாவட்டம்

என்றும் உங்கள்,
மேலாண்மை பொன்னுசாமி.


கண்டிப்புடனும் என்னை வழிநடத்திய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் கே. முத்தையா அவர்கட்கும்,–

என்னை விடவும் என் கதைகள் பற்றிய ஞாபகமுள்ள அன்புக்குரிய தோழர் தி. வரதராசன் அவர்களுக்கும்,–

என் படைப்புகளை விமர்சித்தும், பராட்டியும், தோளில் சுமந்து விற்றும் எனக்கு உறுதுணையாக இருந்த இயக்கத் தோழர்கள் அனைவருக்கும்

எனது இதய பூர்வமான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

இதோ... எனது கதைகளின் தொகுப்பு, படித்து விட்டு மெளனமாயிருப்பதைக் காட்டிலும் விமர்சித்தால் என்னைக் கூர்மைப்படுத்தும்; பாராட்டினால் என்னை உற்சாகப்படுத்தும்.

நன்றி!


மேலாண்மறை நாடு
626127
காமராசர் மாவட்டம்

என்றும் உங்கள்,
மேலாண்மை பொன்னுசாமி.


ஆசிரியரின் பிற நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
மானுடம் வெல்லும்
சிபிகள்
பூக்காத மாலை
(அனந்தாச்சாரியார் அறக்கட்டளை விருது)
பூச்சுமை
(லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது)
கணக்கு
தாய்மதி
உயிர் காற்று...
(பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது)
விரல்
காகிதம்
என் கனா
ராசாத்தி
மனப் பூ
(தமிழக அரசின் மாநில விருது)

ஒரு மாலை பூத்து வரும்
(தமிழக அரசின் மாநில விருது)
மானாவாரிப் பூ
(அமரர் சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது)
வெண்பூ மனம்
குறுநாவல் தொகுப்புகள்
கோடுகள்
தழும்பு
ஈஸ்வர...
பாசத் தீ
நாவல்கள்
முற்றுகை
இனி
அச்சமே நரகம்
ஊர்மன்
ஆகாயச் சிறகுகள்
முழுநிலா
கட்டுரை
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்

உள்ளே...

"https://ta.wikisource.org/w/index.php?title=மானுடப்_பிரவாகம்&oldid=1836888" இலிருந்து மீள்விக்கப்பட்டது