மின்சாரப்பூ
மின்சாரப்பூ
(சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற நூல்)
மேலாண்மை பொன்னுச்சாமி
மின்னூல் ஆக்கம்: தமிழ்வாசகன்
கங்கை புத்தக நிலையம்
23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை — 600 017
முதற் பதிப்பு : டிசம்பர் 2004 இரண்டாம் பதிப்பு : ஏப்ரல் 2009 மூன்றாம் பதிப்பு : ஏப்ரல் 2010 நான்காம் பதிப்பு : நவம்பர் 2010 ஐந்தாம் பதிப்பு : மே 2013 ஆறாம் பதிப்பு : ஜூன் 2014
- ©உரிமை : ஆசிரியருக்கு
- கங்கை வெளியீடு
- விலை : ரூ. 70–00
•Title : MINSARAPOO •Author : Melanmai Ponnusamy •Language : Tamil •Subject : Short Stories •Edition : Sixth-Edition : June 2014 •Pages : viii + 208 = 216 •Publication : GANGAI PUTHAKA NILAYAM
23, Deenadayalu Street,
Thyagaraya Nagar, Chennai - 600017.
Ph: 24342810 / 24310769•Price : Rs. 70-00
- Laser typeset at Sri Sai SathyaSai Graphics, Chennai - 17.
Printed at : Sri Saravanan Offset Printers, Chennai - 81.
- Laser typeset at Sri Sai SathyaSai Graphics, Chennai - 17.
சமர்ப்பணம்
அம்மா இல்லை. அப்பா இல்லை. சுற்றம் இல்லை. பொறுப்பேற்று, முன் கையெடுத்து நல்லது செய்கிற உறவில்லை. உறவு வளர்க்கிற அன்பில்லை. அன்பான ஆதரவில்லை.
‘திருமணம் வேண்டாம்’ என்கிற பிடிவாதத்தில் நான். சிறுவனாக தம்பி கரிகாலன். கால் ஊனமான வயோதிக ஆச்சி. கஞ்சி காய்ச்ச ஆளில்லை.
இந்நிலையில்... அக்கறையெடுத்து, முன்வந்து, என்னை எனக்குப் புரிய வைத்து, சம்மதிக்க வைத்து, பெண்பார்த்து, முழுப் பொறுப்பேற்று, எல்லா வேலைகளுக்கும் ஓடி ஓடி உழைத்து, என்னையும் ஒரு குடும்பத் தலைவனாக சுடரேற்றி வைத்த... தூரத்து உறவுப் பெரியப்பா செயலாலும் பாசத்தாலும் சொந்த அப்பா... அமரர் அ. செல்லையா நாடார் அவர்கள் நினைவுகளுக்கு...
முன்னுரை
முன்னுரையாக சொல்வதற்கு எதுவுமில்லை என்பது தான் இந்தத் தொகுப்பின் தனித்துவம்.
பொதுத் தன்மை எதுவுமற்ற தனித்தன்மை கொண்ட படைப்புகளை உள்ளடக்கியது என்பதே இதன் தனிச் சிறப்பு.
தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும், வெவ்வேறு பிரச்சனைகளை வெவ்வேறு கோணத்தில் பேசுகிற கதைகளாகும். இதன் பன்முகத்தன்மையே இதன் தனிச் சிறப்பான ஒரு விஷயம்.
‘மின்சாரப்பூ’ ஒரு சற்றே பெரிய சிறுகதையாகும். ‘அன்பெழுத்து’வில் வருகிற சொர்ணச்சாமி, மேலாண்மை பொன்னுச்சாமி தான். நான் சிகரெட் புகைக்கிற பழக்கத்தை விட்ட அனுபவம் கூட ஒரு சிறுகதைக்குரிய பாடு பொருளாகியிருக்கிறது.
‘நீரில்லாமீன்’ கதை தனித்துவமானது. சில்லறைக் கடைக்காரனாக இருந்து வாழ்கிற என்னால் தான், இந்த உள்ளடக்கத்தை கையாள முடியும். இந்த மாதிரியான அனுபவங்கள், மத்திய தர வர்க்கத்துப் படிப்பாளியாக இருந்து படைப்பாளியானவர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பே இல்லை.இக்கதைகளை பிரசுரித்து அன்பு காட்டிய இதழ்களின் ஆசிரியர்களுக்கும், தொகுப்பாக வெளியிட முன் வந்த புகழ்மிக்க ‘கங்கை புத்தக நிலையம்’ உரிமையாளருக்கும், அட்டை ஓவியம் வழங்கிய ஓவியர் ஷியாம் அவர்களுக்கும்,
தொகுப்புக்கான கதைகளை பாதுகாத்து வைத்து, சேகரித்து, கத்தரித்து ஒழுங்குபடுத்தித் தந்த என் மூத்த மகள் வைகறைச் செல்விக்கும், என் இலக்கிய வாழ்வுக்கு ஆணி வேராகவும், ஆதார பலமாகவும் இருந்து வருகிற என் தம்பி கரிகாலனுக்கும் எனது நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.
வாசித்து முடித்து விட்டு... மௌனத்தில் புதைந்து விட வேண்டாம். வாசித்ததால் நிகழ்ந்த உணர்வுகளை ஓர் அஞ்சலட்டையில் எழுதி, என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பாராட்டுப் பூக்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்தும்; அதே போல் விமர்சனச் சொற்களும் என்னை நெறிப்படுத்தும்.
இரண்டுமே இலக்கியத்துக்கும், தமிழுக்கும் நல்லது.
நன்றி!
மேலாண்மறைநாடு
626127
விருதுநகர் மாவட்டம்
04562/271233
என்றும் உங்கள்
மேலாண்மை பொன்னுச்சாமி.
ஆசிரியரின் பிற நூல்கள்
1. மானுடம் வெல்லும் .. சிறுகதைத் தொகுப்பு 2. சிபிகள் ❠ 3. பூக்காத மாலை
(அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது)❠ 4. மானுடப் பிரவாகம் ❠ 5. பூச்சுமை
(லில்லிதேவசிகாமணி இலக்கிய விருது)❠ 6. கணக்கு ❠ 7. தாய்மதி ❠ 8. உயிர்க்காற்று
(ஸ்டேட் வங்கி இலக்கிய விருது)❠ 9. விரல் ❠ 10. காகிதம் ❠ 11. என்கனா ❠ 12. மனப்பூ
(தமிழக அரசு இலக்கிய விருது)❠
13. ஒரு மாலை பூத்து வரும்
(தமிழக அரசு இலக்கிய விருது)சிறுகதைத் தொகுப்பு 14. ராசாத்தி ❠ 15. மானாவாரிப்பூ
(அமரர் சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருது)❠ 16. வெண் பூ மனம் ❠ 17. அன்பூ வாசம்
(திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது)❠ 18. கோடுகள்... குறுநாவல் தொகுப்பு 19. தழும்பு ❠ 20. ஈஸ்வர... ❠ 21. பாசத்தீ ❠ 22. முற்றுகை நாவல் 23. இனி... ❠ 24. அச்சமே நரகம் ❠ 25. ஊர்மண் ❠ 26. ஆகாயச் சிறகுகள் ❠ 27. முழு நிலா ❠ 28. சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்
(இலக்கியக் கட்டுரை நூல்)
- உள்ளடக்கம்
| 1 |
| 14 |
| 27 |
| 43 |
| 56 |
| 71 |
| 84 |
| 99 |
| 102 |
| 113 |