உள்ளடக்கத்துக்குச் செல்

முன்னும் பின்னும்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.

Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.

***

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

முன்னும் பின்னும்
தொகுப்பாசிரியர்
உவமைக்கவிஞர் சுரதா
சேகர் பதிப்பகம்
66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர்,
சென்னை — 600078

முதற்பதிப்பு:23. 11. 2004
தாள்:18.6 கி.கி., டெம்மி
பக்கங்கள்:208
எழுத்து:10 புள்ளி, 11 புள்ளி
விலை : ரூ. 90.
ஒளியச்சு:குரு கம்ப்யூட்டர்ஸ்
சென்னை – 600 024
அச்சகம்:ஜூபிட்டர் பிரிண்டர்ஸ்
சென்னை – 24

புகுமுன்...

இதுவும் ஒரு கலைக் களஞ்சியம்! கருத்துக்களின் களஞ்சியம்! கற்றோர் சிறப்பும் கல்விச் சிறப்பும், காலக்குறிப்பும் கலையுலகச் சிறப்பும் கூடிக் குவிந்துள்ள நூல் இது. கவிஞர் சுரதாவின் அமைதியான வாழ்வில் அயராமல் சேர்த்துவைத்த புதையல்! அவருக்குத் தமிழுலகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. அவர் பணி அரிய தமிழ்ப் பணி.

எண்ணற்ற பெரியோர்களது எண்ணங்களின் வண்ணங்களை வகைவகையாக வார்த்தளிக்கும் உவமைக் கவிஞரின் ஆர்வமும் ஆற்றலும் ஆய்வு நோக்கும் வேறு எவர்க்கு வரும்? எத்தனை பேர்க்கு வந்திருக்கிறது?

மனித மனத்தின் மட்டற்ற வளர்ச்சிக்கு, காலந்தோறும் கருத்துக்கள் கொண்ட கோலத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது இத்தொகுப்பு.

நூல்கள் பலவற்றையும் எழுத்தாளர் பலரையும் மறைவில் இருந்து வெளிப்படுத்துகிற வரலாற்றுத் தொண்டு.

கடந்த நூற்றாண்டில் கருத்துவளம், சொல்லோட்டம் வளர்ந்துள்ள நிலையை உணர்த்தும் தொகுப்பு இது.

எழுத்தாளர்கட்கும், இளங்கவிஞர்கட்கும் இது ஒரு பாடநூல்; எல்லார்க்கும் இன்பந் தரும் பாடல்நூல்.

மொழி வளர்ச்சி நோக்கில் பயன் கருதி ஆர்வமுடன் தொகுத்தளித்துள்ள உவமைக் கவிஞர் அவர்களைத் தமிழகமே பாராட்டும். கவிஞருக்கு மனமார்ந்த நன்றி.

திரையுலகில் இலக்கியம் எப்படியெல்லாம் வேர்விட்டுச் செழித்திருக்கிறது என்பதை இத்தொகுப்பு கண்ணாடிபோல் காட்டுகிறது, பழைய சாதனைகளைப் பார்த்தாவது புதிய படைப்பில் கலையுலகம் மனம் திருப்பலாம்!

விளம்பர வெளிச்சத்தில் காணப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள் சிலரே ஆவர். வெளியில் பரவலாக அறியப்படாமல் மறைவாய்ப் போனோர், மறைக்கப்படுவோர் எனும் எழுத்தாளர் பலராவர். கால அலைகளில் கரைந்த கவிஞர்களை, கலைஞர்களைத் தேடி நம் கண்ணுக்கும் கருத்துக்கும் காட்சிப்படுத்தும் வரலாற்றுப் பெரும்பணியை உவமைக்கவிஞர் ஆற்றியுள்ளார். இதனை இத்தொகுப்பில் காணலாம்.

அறிவுப் பயிர்களின் வேர்களையும் அதன் வளர்ச்சி விழுதுகளையும் கண்டறிவதும் தொகுத்தளிப்பதும் எளிதான செயலன்று. பல நூல்களைத் தொடர்ந்து படிப்பதும் அதிலிருந்து தகுதியானவற்றைத் தரம் பார்த்துத் தேடித் தொகுப்பதும் அவற்றில் ஒன்றை ஒன்று சார்ந்தனவாய் இருப்பதைக் கண்டறிந்து அதன் தொடர்பை வெளிப்படுத்துவதும் அரிய செயல். இது ஆர்வத்தின் வெள்ளோட்டம்; ஒப்பு நோக்கும் ஒப்பற்ற பணி.

காலந்தோறும் சிந்தனையாளர்கள் தத்தம் வாய்ப்புகளுக்கேற்ற சூழ்நிலையில் வெளிப்படுத்துகின்ற எண்ணத் துளிர்களை, கருத்து மலர்களைத் தேடித் தொகுத்துப் பார்க்கையில் மொழியின் கருத்து வளர்ச்சி விரிவாய்த் தோற்றமளிக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோன்றி வாழ்ந்த எழுத்தாளர் பலரை நாம் அறிகின்றோம். அவர்கள் வாழ்ந்த காலத்தின் சிந்தனை வளத்தை அறிகின்றோம். கலைகள் வளர அவர்கள் அளித்த கருத்து வளம் தெரிகின்றது.

கவிதைகள், நாடகங்கள், பலதுறை நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றின் தொடர்ச்சியாகவும் காலவளர்ச்சிக் கேற்பவும் எழுத்தாளர் தம் படைப்புகள் மலர்ந்துள்ளதை நிரல்படத் தொகுத்தளிக்கும் கடுமையான பெரும்பணியில் ஈடுபட்ட கவிஞரின் ஆய்வுத் தொண்டு மொழி வளர்ச்சிக்குதவும் முதிர்ந்த பணியாகும்.

இந்நூலின் பயன்கள் பலப்பலவாகும்.

எழுத்தாளர்களையும் அவர்களின் நூல்களையும் தெரிந்து கொள்கிறோம். தமிழ் திரையுலகில் தொடக்கத்திலிருந்து வந்திருக்கிற படங்களைத் தெரிந்துகொள்கிறோம்.

பாடலாசிரியர்கள் பலரைப்பற்றிப் படித்தறிகிறோம். இசை அமைப்பாளர்களையும், பாடல்களைப் பாடியோரையும் தெரிந்து கொள்கிறோம். நூறாண்டுகளுக்கு மேற்பட்ட கால அளவில் எழுத்து நடைப் பாங்கு, மொழியை ஆளும் முறைமை, சொல் வழக்கு முதலியவற்றின் அவ்வக் காலப் பதிவுகளை உள்ளவாறே பார்த்து அறியலாம். மொழியை வளர்க்கும் சிந்தனையாளர்களும், படைப்பாளர்களும் மக்களிடம் கலையுலக வழியில் கருத்துகளைப் பரப்பி வந்துள்ள வரலாற்றை அறிகிறோம். இலக்கிய வரலாற்றுக்குரிய இப்பகுதியைக் கருத்தோடு கண்டளித்த கவிஞருக்குத் தமிழுலகில் நிலையான இடம் உண்டு.

சொல்லுருவம் பெற்ற கருத்துகள் நூல்களாகவும் இசைப் பாடல்களாகவும் திரையுலகம் வழியாக வளர்ந்து செம்மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் வரலாற்றைத் தரும் வாய்ப்பைப் பெற்றமைக்கு மகிழ்கின்றோம்.

வரலாற்றுணர்வுடைய கவிஞர் சுரதா அவர்களின் எண்பத்துநான்காம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் (23.11.2004 செவ்வாய்க்கிழமை) அவரது அயரா உழைப்பின் அறுவடையாக இந்நூலைப் பதிப்பித்து வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்.

அறிவுலக முன்னோடிகளை நினைவு கொள்ளும் நாளே அரிய நாளாம்! வளர்க அறிவுலகம்!

அன்பன்,
வெள்ளையாம்பட்டு சுந்தரம்


உள்ளடக்கம்

  1. முன்னும் பின்னும்/001
  2. முன்னும் பின்னும்/002
  3. முன்னும் பின்னும்/003
  4. முன்னும் பின்னும்/004
  5. முன்னும் பின்னும்/005
  6. முன்னும் பின்னும்/006
  7. முன்னும் பின்னும்/007
  8. முன்னும் பின்னும்/008
  9. முன்னும் பின்னும்/009
  10. முன்னும் பின்னும்/010
  11. முன்னும் பின்னும்/011
  12. முன்னும் பின்னும்/012
  13. முன்னும் பின்னும்/013
  14. முன்னும் பின்னும்/014
  15. முன்னும் பின்னும்/015
  16. முன்னும் பின்னும்/016
  17. முன்னும் பின்னும்/017
  18. முன்னும் பின்னும்/018
  19. முன்னும் பின்னும்/019
  20. முன்னும் பின்னும்/020
  21. முன்னும் பின்னும்/021
  22. முன்னும் பின்னும்/022
  23. முன்னும் பின்னும்/023
  24. முன்னும் பின்னும்/024
  25. முன்னும் பின்னும்/025
  26. முன்னும் பின்னும்/026
  27. முன்னும் பின்னும்/027
  28. முன்னும் பின்னும்/028
  29. முன்னும் பின்னும்/029
  30. முன்னும் பின்னும்/030
  31. முன்னும் பின்னும்/031
  32. முன்னும் பின்னும்/032
  33. முன்னும் பின்னும்/033
  34. முன்னும் பின்னும்/034
  35. முன்னும் பின்னும்/035
  36. முன்னும் பின்னும்/036
  37. முன்னும் பின்னும்/037
  38. முன்னும் பின்னும்/038
  39. முன்னும் பின்னும்/039
  40. முன்னும் பின்னும்/040
"https://ta.wikisource.org/w/index.php?title=முன்னும்_பின்னும்&oldid=1871423" இலிருந்து மீள்விக்கப்பட்டது