மூட்டம்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
மூட்டம்
சு. சமுத்திரம்
9, இரண்டாவது குறுக்குத் தெரு
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
சென்னை - 600 041.
தொலைபேசி : 4917594
☐ மூட்டம்
சு.சமுத்திரம்
☐ முதல்பதிப்பு - அன்னம், 1994 ஜூன்
இரண்டாம் பதிப்பு - ஏகலைவன், 1996 ஜூலை
☐ கணிப்பொறி அச்சு
தாமரை
பாலன் இல்லம்,
சென்னை-17.
☐ அச்சிட்டோர்:
பாரி ஆப்செட் அச்சகம்,
சென்னை- 13.
☐ விலை ரூ. 30
நூல் கிடைக்கும் இடங்கள்
☐ மணிவாசகர் பதிப்பகம்
8/7, சிங்கர் தெரு, பாரிமுனை
சென்னை- 108.
☐ கிறித்துவ இலக்கியச் சங்கம்
CLS பார்க் டவுன், சென்னை- 3.
மற்றும் மதுரை, கொடைக்கானல், கோவை,
திருவனந்தபுரம், பெங்களுர் கிளைகள்.
☐ ஏகலைவன் பதிப்பகம்
அணிந்துரை
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. சு.சமுத்திரத்தின் படைப்புகளுக்கு முன்னுரை-அணிந்துரை எல்லாம் தேவையில்லை. அவருக்கென்று ஒரு வாசகர் வட்டம் ஏற்கனவே உள்ளது. அந்த எளிமையான நடை, அதற்குள் உள்ளாடிக்கிடக்கும் ஒருவகை சமூக நையாண்டி அவரின் படைப்புகளுக்கு தனிக் கவர்ச்சியைத் தந்து கொண்டிருக்கின்றன. த.மு.வ.ச. மீதுள்ள மதிப்பின் காரணமாகவே இந்த அணிந்துரையைக் கேட்டிருக்கிறார் என நினைக்கிறேன்.
“செம்மலர்” ஏட்டில் தொடராக வெளிவந்த இந்த நவீனத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. பாபர் மசூதியை இடித்து இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றினார்களே, அந்தக் கொடுமையை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் தமிழ் நவீனம் இதுவாகத்தான் இருக்கும். தன் காலத்தில், தன் கண் முன்னால் நடக்கிற அவலங்களை, அநீதிகளைக் கருப்பொருள் ஆக்குவதுதான் ஒரு சமூகப் பொறுப்புள்ள படைப்பாளியின் கடமையாக இருக்கும். பாரதியின் கவிதைகளில் மட்டுமல்ல, அவரின் கதைகளிலும் கூட அந்தக்காலத்தின் ஆகப்பெரும்பிரச்சினையான அடிமை விலங்கு அடிச்சரடாய் வந்துள்ளது.இன்று நம் கண்முன்னால் ஒரு மாபெரும் அக்கிரமம் நடந்துள்ளது. 450 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஒரு சின்னம்-இந்தியப் பழமையின் பாரம்பரியத்தின் ஒரு சின்னம்- தகர்த்துத் தரைமட்டமாக்க்ப்பட்டது. தேச ஒருமைப்பாட்டு உண்ர்வின் மீது பேரிடி வீழ்ந்தது. மூவாயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்கள் பிடுங்கப்பட்டன. அவர்களில் பெரும்பாலோர் சிறுபான்மை சமூகத்தினர். இவ்வளவு பெரிய கொடுமை எத்தனை எழுத்தாளர்களின் நெஞ்சைக் குலுக்கியது? எழுத்தாளப் பிரபலங்களில் சு.ச.வைத்தவிர வேறு யாரும் இதை வைத்து நவீனம் படைத்ததாய்த் தெரியவில்லையே!
சமகால வாழ்வைக் கலையழகோடு பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக இலக்கியங்கள் திகழ வேண்டும். இங்கோ பல கண்ணாடிகள் ரசம் பூசப்படாதவையாக உள்ளன. அவற்றின் வழியாகப் பார்த்தால் எழுத்தாளர்களின் சுய வக்கிரங்களே, சுய குழப்பங்களே தெரிகின்றன. இவர்களிலிருந்து சு.ச. மாறுபட்டவர் என்பது திண்ணம். இவரது படைப்புகள் வாழ்வின் படப்பிடிப்புகள். அவ்வாறே இந்த “மூட்டமும்” உள்ளது.
இந்த நவீனத்தின் பெயரே ஆயிரம் அர்த்தங்களைச் சுமந்து வருகிறது. இன்று இந்திய வாழ்வை ஒரு “மூட்டம்” சூழ்ந்து வருகிறது. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மத்தியில் பிளவுகள், பிரிவுகள் திட்டமிட்டு மூட்டப்படுகின்றன. அதிலும் படித்தவர்கள் நெஞ்சில் புதுப்புதுக் குழப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த நவீனத்தில் வரும் இரண்டு ஆசிரியர்கள் அந்நியோந்நியமாக இருந்த அழகு என்ன; பின்னர் அது சிதைவு பட்ட கோரம் என்ன!
மதம் மனிதனை உருவாக்கவில்லை; மனிதன்தான் மதத்தை உருவாக்கினான். இந்த மெய்யைப் பொய்யாக்கிக் காட்டத்தான் ஒரு சுயநலக் கூட்டம் விடாது வேலை செய்து வருகிறது. ஆனாலும் மனம் சோரத் தேவையில்லை. அமுக்கப்படும் இயல்பான மனிதநேய உணர்வுகள் விடுபட்டுக் கிளம்பவே செய்யும் பல நூறு ஆண்டுக்கால வரலாற்றில் தமிழசம் எத்தனையோ மதமோதல்களைக் கண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் மீறித்தான் அது நிலைபெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் சகிப்புத் தன்மையையும். நல்லிணக்கமும் எவ்வளவோ சிறப்பாக உள்ளது என்று தான் கூற வேண்டும். இதற்காக எத்தனையோ பெரியவர்கள் பாடுபட்டிருக்கிறார்கள், எத்தனையோ முற்போக்கு இயக்கங்கள் பணிபுரிந்திருக்கின்றன. அவர்கள் விதைத்தவிதை என்றும் வீணாய்ப்போய் விடவில்லை. மதப் பெரியார்களின் சதித்திட்டங்களையெல்லாம் மீறி இங்கே இந்து-முஸ்லிம்-கிறிஸ்துவ ஒற்றுமை நிலவி வருவது அதற்குச் சாட்சி. இந்த நவீனமும் நம்பிக்கை மிகுந்த இந்த அடிப்படை யதார்த்தத்தோடு நிறைவு பெற்றிருக்கிறது.
இந்த நவீனத்தின் கதாபாத்திரங்கள் நம் மத்தியில் உலவி வருபவர்கள்தாம். ஓர் ஊரே முற்றுகையிடப்படுவதும், போலீஸ் அட்டூழியமும் கூட புதிது அல்ல தான். பத்திரிகைகளில் வந்த செய்திகள்-நமக்கு அவை செய்திகள்; சு.ச.விற்கோ அவற்றில் இலக்கியம் தட்டுப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மனித குலத்தின் மீது பாசமிக்க ஓர் உள்ளத்தை வாசகர்கள் கண்டுகொள்வார்கள்.
சமகால வாழ்வு பற்றிய படைப்புகளில் செய்தி அதிகமாகவும், இலக்கியம் குறைவாகவும் இருப்பதாக சில நவீன பண்டிதர்கள் முகஞ்சுளிக்கிறார்கள். அப்படியா? அது உண்மையெனில் ஏன் இந்த மோதாவிகள் இலக்கியம் குறைவு படாமல் சமகால வாழ்வைப் பிரதிபலிக்கக் கூடாது? ஏன் மனக்குகை மர்மங்களை, அதுவும் மர்மமான மொழியில் எழுதிப் பயமுறுத்த வேண்டும்? அழகியல் ஊனப்பட்டு விடக்கூடாது என்பதில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் முழு உடன்பாடு தான். ஆனால் அதை ஒரு சாக்காகக் கூறிக்கொண்டு நமது வாழ்வை நேரடியாகப் பாதித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளைத் தொடாமல் தப்பித்து ஓடுவதை நாம் அங்கீகரிக்க முடியாது.
இந்த நவீனத்தில் ஒரு முக்கியமான பிரச்சினை தைரியமாகவும் இலக்கிய சீதனத்தோடும் எதிர் கொள்ளப்பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களின் வாழ்வை, உணர்வுகளை பெரும்பான்மை வகுப்பைச் சார்ந்த ஒருவர் சித்தரிப்பது ஆரோக்கியமான முன்னுதாரணமாக உள்ளது.
சு.ச.விற்கு நமது வாழ்த்து உரித்தாகிறது.
இரா.கதிரேசன்
பொதுச் செயலாளர்
தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
அயோத்தி மசூதி தகர்ப்பிற்குப் பிறகு பத்திரிகைகளில் தலையங்கங்களும், வார இதழ்களில் சிறுகதைகளும், சினிமா உலகில் திரைப்படங்களும் வந்துள்ளன. ஆனால் எங்களுக்குத் தெரிந்து இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை எந்த படைப்போ அல்லது திரைப்படமோ சுட்டிக்காட்டவில்லை.
எலியும் பூனையும் மாதிரி சண்டை போடாதீர்கள் என்று பிடித்துத் தின்னும் பூனையையும், பிடிபடும் எலியையும் ஒரே தட்டில் வைத்துத்தான் சித்தரித்தன. ஆனால் சு. சமுத்திரம் இந்த நாவலில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். வகுப்புக் கலவரம் என்று வரும்போது அதை சுயநல சக்திகள் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் சித்தரித்திருக்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் என்ற கிராமத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் மக்கள் சுற்றிவளைக்கப்பட்ட கொடுமையை மையமாக வைத்து இந்த மூட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
இந்த நாவல் பற்றி வாசகத் தோழர்கள் ஒரு வரி எழுதிப்போட்டால் நன்றியுடையோம்.
-ஏகலைவன் பதிப்பகம்
மூட்டம்
