ரோமாபுரிப் பாண்டியன்/அ. முன்னுரை
தோற்றம்
மூன்றாம் பதிப்பின்
முன்னுரை
“ரோமாபுரிப் பாண்டியன்” மீண்டும் இப்போது வெளிவருகிறது. தமிழ்க்கனிப் பதிப்பகத்தாரிடம் இந்தப் பதிப்புக்கான உரிமை பெற்று வெளியிடும் பாரதி பதிப்பகத்தாருக்கு என் நன்றி!
1974ல் இந்த நூலை வெளியிட்டபொழுது தலைமையேற்றுப் பேருரையாற்றிய மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களும், நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றிய தலைமை நீதிபதி அனந்த நாராயணன் ஐ.சி.எஸ். அவர்களும் நூலின் முதற்படியினைப் பெற்றுக்கொண்டு அன்புரையாற்றிய கவியரசு கண்ணதாசன் அவர்களும் இன்றில்லை! முதற் பதிப்பில் இடம் பெற்றிருந்த அவர்களின் உரைகள் இந்தப் பதிப்பிலும் இடம் பெற்றுள்ளன. அவர்களும் என் நெஞ்சில் இடம் பெற்றிருக்கிறார்கள். வாழ்க அவர்களின் புகழ்!
அன்புள்ள
சென்னை
மு. கருணாநிதி