உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/இ. பதிப்புரை

விக்கிமூலம் இலிருந்து

பதிப்புரை

“ரோமாபுரிப் பாண்டியன்” என்ற இவ்வரிய வரலாற்று நவீனத்தைக் கலைஞர் சிறப்பாகப் படைத்து அளித்துள்ளார்கள். இதன்கண் தமிழ்நாட்டுக்கும், ரோமாபுரிக்கும் இருந்த வணிகத் தொடர்பையும் தமிழர்தம் பண்டை நாகரிகத்தையும் வீரத்தையும் பற்றி தனக்கேயுரிய அழகு தமிழ் நடையிலே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். சுவை குன்றாது படிப்போர்க்கு விறுவிறுப்பை ஊட்டும் வகையில் இப்புதினம் உருவாகி யிருப்பதை நாம் உணரலாம்.

இப்பெரிய நவீனத்தை வெளியிட எங்கட்கு அனுமதி அளித்த தமிழ்க்கனிப் பதிப்பகத்தார்க்கும், கலைஞர் அவர்கட்கும் நன்றி!

இந்நூலினை ஏற்று எங்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் தமிழ்ப் பெருமக்களுக்கும், ஆர்வத்துடன் அச்சிட்ட அச்சகத்தாருக்கும் எங்கள் உளம் நிறைந்த நன்றி!

பழ.சிதம்பரம்

பாரதி பதிப்பகம்