உள்ளடக்கத்துக்குச் செல்

வழித்தடங்கள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




​


வழித்தடங்கள்

தொ. பரமசிவன்

யாதுமாகி பதிப்பகம்

பாளையங்கோட்டை

2008

​

நூல்:வழித்தடங்கள்
ஆசிரியர்:தொ. பரமசிவன்
முதற்பதிப்பு:சனவரி 2008
வெளியீடு:யாதுமாகி பதிப்பகம்,
2, முதல் தெரு,

வேலவர் காலனி,
மகாராஜாநகர்,
திருநெல்வேலி - 627 011.
கைபேசி 09443486285

ஒளியச்சு:டெய்சிஜோசப், பாளை
அச்சு:மீராஃபைன் ஆர்ட்ஸ், சிவகாசி
அட்டை வடிவமைப்பு:பாபு, சென்னை
விலை:ரூ.70/-

Vazhithadangal, T. Paramasivan ★©T. Paramasivan First Edition: January 2008 ★Size: Demy 1 × 8 ★Paper: 18.6 kg NS Maplitho ★Pages: 128 ★Published by Yadhumahi Pathippagam, 2, First Street, Velavar Colony, Maharajanagar, Tirunelveli - 627011 ★Typeset: Mrs. Daisy Joseph, Palay ★Cover Design: Babu, Chennai ★Printed at: Meera Fine Arts, Sivakasi ★Price: Rs.70/-

​

என்னுரை

இந்த நூலில் இடம்பெற்றுள்ள 16 கட்டுரைகளும் பத்தாண்டுக் காலத்தில் வெவ்வேறு சூழலில் எழுதப்பட்டவை. எனவே தனியொரு நூலுக்கான திட்டமிடலுடன் இக்கட்டுரைகள் தொகுக்கப் பெறவில்லை.

‘சங்க காலம் மறு மதிப்பீடு’ கட்டுரை ‘மேலும்’ முதல் இதழில் வெளிவந்தது. ‘சங்க இலக்கியத்தில் சமூகவியல் ஆய்வுகள்’ கேரளப் பல்கலைக்கழகத்தில் வாசிக்கப் பெற்றது. ‘சாதிகளின் மூலப்படிவங்கள்’ கட்டுரை கோவையில் தோழர் பொன்னீலன் நடத்திய ‘சாதி மதங்களைப் பாரோம்’ கருத்தரங்கிற்காக எழுதப்பட்டது. ‘பண்பாட்டு மானிடவியல்’ குறித்த கட்டுரை அண்மையில் (2007) புதுவைப் பல்கலைக்கழக மானிடவியல் துறை நடத்திய கருத்தரங்கில் பேசப்பெற்று, ‘அம்ருதா’ இதழில் வெளிவந்தது. திருக்குறள், பாரதி, பாரதிதாசன் பற்றிய மூன்று கட்டுரைகளும் மதுரை காமரசர் பல்கலைக்கழகத்தில் வாசிக்கப் பெற்றவை. ‘தெ. பொ. மீ. யின் காப்பிய ஆய்வுகள்’ சென்னைப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப் பெற்றது. கவிஞர் சிற்பியின் கவிதைகள் பற்றிய கட்டுரை அவரது மணிவிழா மலரிலும், வைரமுத்து கவிதைகள் குறித்த கட்டுரை ‘வைரமுத்து இலக்கியத்தடம்’ நூலிலும் வெளிவந்தவை. ‘காசு. பிள்ளை’ மதிதா. இந்துக் கல்லூரி 125-வது ஆண்டு விழா மலரில் வெளிவந்தது. ‘புதுமைப்பித்தனின் திருநெல்வேலி’ சுந்தரனார் பல்கலையில் அளிக்கப் பெற்றது. ‘ஆறாட்டும் நீராட்டும்’ கட்டுரை குங்குமம் இதழில் வெளிவந்தது. மேற்குறித்த நிறுவனங்களுக்கும் இதழ்களுக்கும் நான் நன்றியுடையவன்.

இக்கட்டுரைகள் குறித்துச் சொல்ல என்னிடம் ஒன்றிரண்டு செய்திகள் உண்டு. ‘கவிஞர் சிற்பியின் மரபும் புதுமையும்’ அவரது ​ஆளுமை மீதான தாக்குதலாக இருந்தபோதும் அவர் பெருந்தன்மையுடன் 'சிற்பியின் படைப்புக்கலை' நூலில் அதனை வெளியிட்டார். அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து கவிஞரிடமும் என்னிடமும் காலம் சில பார்வை மாற்றங்களை உருவாக்கியுள்ளது. இருந்த போதும் ஆய்வு அறம் கருதி அக்கட்டுரை 'பிறந்த வண்ணமே' இந்நூலில் இடம்பெற்றுள்ளது. மற்றொன்று, புதுமைப்பித்தன் பற்றியது. நான் பிறந்து வளர்ந்து வாசித்த களங்களெல்லாம் அவரது கதைக்களன்களாகவே அமைந்தன. அவருடைய 'கம்பவுண்டர் பிள்ளை' புதுப்பேட்டைத் தெருக்காரர் என்பதும் உள்ளூரில் நான் அறிந்த செய்தியே. 'புதுமைப்பித்தனின் திருநெல்வேலி' கட்டுரை ஒருவித லயிப்புடன் கூடிய ஆய்வு என்று வாசகர்களுக்குத் தோன்றும். அக்கட்டுரையின் மொழிநடை அந்த லயிப்பில் பிறந்தது உண்மைதான்.

சங்க இலக்கியம் தொடர்பாக மூன்று கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் சுஜாதாவின் பிழை மலிந்த உரையுடன் புறநானூற்றின் முதல் 200 பாடல்களை உயிர்மை பதிப்பகம் 2003-இல் வெளியிட்டது. அது குறித்த என் மதிப்புரை 'இந்தியா டுடே' இதழில் வெளிவந்தது. சுஜாதா ஆற்றிய எதிர்வினைக்கான என் மறுப்பு ச. நவநீத கிருஷ்ணன் நேர்காணல் வழியாகக் 'காலச்சுவடு' இதழில் வெளிவந்தது. வாசகர்களின் கூடுதல் புரிதலுக்காக அக்கட்டுரைகள் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.

தமிழிலக்கிய ஆய்வு ஒரு நெடுஞ்சாலையாகும். அதன் சில புள்ளிகளை நோக்கி நகரும் வழித்தடங்களாக வாசிப்போர் இக்கட்டுரைகளைக் கொள்ள வேண்டும். காலப் பெருவெள்ளத்தில் வலிமையானவை மட்டுமே எஞ்சும். அது நியாயம் தானே!

அக்கறையுடன் இக்கட்டுரைகளைத் தட்டச்சு செய்த திருமதி டெய்சி ஜோசப், அழகாக வெளியிட ஆர்வம் காட்டிய ஓவிய நண்பர் பாபு, 'யாதுமாகி' லெனா குமார் ஆகியோரும் என் நன்றிக்குரியோர்.

தொ.பரமசிவன்

​

பொருளடக்கம்

9
16
22
31
39
47
55
62
68
74
80
89
95
101
108
113
117
122

  1. ​

    மற்றுப் பற்றில்லாத

    மக்கட் பற்றாளர்

    முதுபெரும் தோழர்

    ஆர்.நல்லகண்ணு

    அவர்கட்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=வழித்தடங்கள்&oldid=1798829" இலிருந்து மீள்விக்கப்பட்டது