விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 3/களப்பணிகள்
தோற்றம்

- நிதிப்பெறல் : முதல்முறையாக தென்கிழக்கு ஆசிய நிதியானது நேரடியாக எனக்குத் தரப்படவில்லை. ஐதராபாத்திலுள்ள w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத் (IIIT) வழியாக வந்துள்ளது. ஏறத்தாழ 60 நாட்களில் 15க்கும் மேற்பட்ட மின்னஞ்சல் உரையாடல்கள், பத்து ஆவணங்கள் என்னால், இத்தொழினுட்ப நிறுவனத்திற்க்கு அளிக்கப்பட்ட. முன்பு போல முழுத்தொகையாக அவர்கள் தரவில்லை. இரு பகுதிகளாகப் பிரித்து அனுப்பினர். மிகச்சுருக்கமாகச் சொல்வதென்றால் கணக்கு வழக்குப்பார்க்க உரூபாய் 5000/-, சேவைக்கட்டணம் உரூபாய் 5000/- மேலும் ஒப்பமிட்ட ஆவணத்தில் இருந்து 2200 குறைவாக அனுப்பியுள்ளனர்.
பதில் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.வருமானவரி 10% (TDS-என்னுடைய ஆண்டு வருமானம் வரி எல்லைக்கும் குறைவான பணம்தான் இருப்பினும் எடுத்துக் கொண்டனர். அப்பல்கலையின் மொத்த வருமானத்தில் இருந்து இப்பணம் தரப்படுவதால் எடுத்துக் கொண்டனரா? ) களப்பணி பணத்தினைப் பயன்படுத்தும் போது, செலவுகளுக்கான இரசீதுகள்(GST bills) தர வேண்டும். இதிலும் எழுந்த செலவினங்கள் குறித்த ஐயங்களைக் கேட்டுள்ளேன். பதில் வந்தவுடன் தெரிவிக்கிறேன். - ஓலைச்சுவடி: சிலையெழுபது/ஓலைச்சுவடி என்பதை முழுமையாக்கலுக்கான, இறுதி களப்பணி தொடங்கப்பட்டுள்ளது. ஓலைச்சுவடியினை தெளிவாக அறியும் பொருட்டு பேராசிரியரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளேன். சென்னையில் இருவரும் சந்தித்தால் களப்பணிக்கும், மேலும் நூல்களை அறியவும் உதவும் என்ற எண்ணங்களோடு இருக்கிறேன். ஓலைச்சுவடிகளில் ஆர்வமுள்ள தன் ஆர்வலர்களையும் இணைத்துக் கொள்ள எண்ணியுள்ளேன்.
- சிலையெழுபது: w:கம்பர் (1180–1250) எழுதிய w:சிலையெழுபது மூல ஆவணம் கிடைக்கவில்லை. ஆனால், மூலப்பாடல்களுடன் எழுதிய தெளிவுரையுடன் 1942, 1969 இரண்டு பொருத்தமான நூல்கள் கிடைத்தன. பதிப்புரிமையைக் கணக்கில் கொண்டு, 175 பக்கங்களுள்ள 1942 ஆண்டு வெளியான சிலை எழுபது என்ற நூலின் மின்னூல் சீராக்கம் செய்த பிறகு, பொதுவகத்தில் ஏற்றப்பட்டு, இங்கு அட்டவணை:சிலை எழுபது, 1947.pdf உருவாக்கப்பட்டுள்ளது.
- மூலநூல், உரையுடன் உருவாக்கம்: பதிப்புரிமை நூல்களில் மூலப் பாடல்கள் தெளிவாக உள்ளன. எனவே, தனிநூலாக அல்லாது அதனுடன் வேறு கம்பரின் நூல்களும் இருந்தன. எனவே, அவற்றில் இருந்து சிலையெழுபது நூலினை மட்டும் தனியே பிரித்தெடுத்து, ஒப்பிட எளிமையாக தனிமின்னூல் ஒன்றை உருவாக்கியுள்ளேன். உருவாக்கப்பட்ட மின்னூலை, மூலநூல் இல்லாத சிலையெழுபது என்ற எழுத்தாவணத்திற்காக மேலும் ஒரு மின்னூலினை உருவாக்குதல் வேண்டும். மூலநூலினைச் சீராகவும், சிறப்பாகவும் உருவாக்க இருக்கும் நூல்களை படித்தலும், விக்கிமூலத்தில் பதிப்புரிமை அற்ற நூலும் ( அட்டவணை:சிலை எழுபது, 1947.pdf) மேம்பாடு முடிந்தது.
- காண்க : சிலை எழுபது, 1947
- மூலப்பாடல்கள் மட்டும் உருவாக்கம்: தஞ்சைப் பல்கலை நூலகம், சென்னையின் கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நூலகங்களிலும் இல்லை. ரோசா முத்தையா ஆய்வு நூலகத்தில் கிடைக்கும் நூல்களும் பார்வைக்கு மட்டுமே இருக்கின்றன. ஆய்க 1, ஆய்க 2
- கட்டற்ற உரிமத்தில் உள்ள மூலப்பாடல்கள் மட்டும் உள்ள மின்னூல் : அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf - இது மறைமலையடிகள் நூலகத்தில் உள்ளது. இங்கு பல தொன்மையான நூலகள் உள்ளன. துப்புரவு/கட்டமைப்புப் பணிகள் தொடர்வதால் படம் எடுக்க இயலவில்லை.
- கட்டற்ற உரிமம் உள்ள மூல ஆவணத்தோடு மட்டுமே, ஓலைச்சுவடிகளுடன் ஒப்பிட வசதியாக இருக்கும். ஏனெனில், மூல ஓலைச்சுவடிகளில் உரை இருப்பதில்லை. ஒப்பிட்டு, நம்பகத்தன்மையை ஓங்கச் செய்ய, இந்த ஒப்பீடு அவசியமாகிறது.
- கட்டற்ற உரிமத்தில் உள்ள மூலப்பாடல்கள் மட்டும் உள்ள மின்னூல் : அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf - இது மறைமலையடிகள் நூலகத்தில் உள்ளது. இங்கு பல தொன்மையான நூலகள் உள்ளன. துப்புரவு/கட்டமைப்புப் பணிகள் தொடர்வதால் படம் எடுக்க இயலவில்லை.
- ஓலைச்சுவடி உதவிப் பேராசிரியருடன் சந்திப்பு: இடம்: அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம். செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் வரச்சொல்லி இருக்கிறார். நாள் இன்னும் முடிவாகவில்லை. ஓரிரு நாட்கள் முன்னதாகக் கூறுவார். நானும் ஆலமரத்தடியிலும், இங்கும் அறிவிக்கிறேன். விருப்பப்பட்டவர் அவரவர் சொந்த செலவில் வரலாம். உணவு வசதி மட்டும் அளிக்கப்படும்.
- அட்டவணை:Wikisource-Tamil-manuscript-Palm leaf book-Alphabets of Tamil language.pdf கோப்பு உருவாக்கப்பட்டு ஏழு பக்கங்கள் தவிர மற்றவை மேம்படுத்தப்பட்டன. அப்பக்கங்கள் பண்டைய கணக்கீடுகள் குறித்தவை என்பதால் அது குறித்த நூல்களைத் தேடிவருகிறேன். படிக்கத் தெரிந்தவர் பணம் கேட்கின்றனர். கேட்கும் தொகை 5000.00 அதிகம் என்பதால் தயங்குகிறேன். நான் விக்கிமீடியா என்ற பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றுவதாக எண்ணுகின்றனர். இந்த அட்டவணை பொதுவாக ஓலைச்சுவடிக்கான அரிச்சுவடியாகக் கொள்ளலாம். சில எழுத்துக்கள் நாம் இப்பொழுது பயன்படுத்துவதில்லை. ஆனால் இத்தகைய நெடில் எழுத்துக்கள் எளிமையானவை. கணினிப் பயன்பாட்டிற்க்கு ஏற்றவையாகவே எனக்குத் தோன்றுகிறது. நுட்பம் சார்ந்தவரிடம் கலந்துரையாட வேண்டும்.
- இதனை திறந்து மெய்ப்புப் பார்க்கும் போது, தட்டச்சும் பகுதியை தெளிவாகக் காண இயலவில்லை. இது குறித்து பஞ்சாபி மொழி விக்கிமூலப் பங்களிப்பாளரிடம் இணைந்து முயற்சித்தோம். இறுதியாக இந்த மாற்றம் தற்காலிக தீர்வு தந்தது. ஏனெனில், அது மற்ற அட்டவணைகளின் தட்டச்சும் பகுதியையும் விரிவு படுத்தியது. அதனால் இது குறித்து வேறு வழிமுறைகளை எண்ண வேண்டும்.
- அட்டவணை:சிலையெழுபது கட்டுகள்-சுவடியெண்கள்158-159-2025-October-09.pdf என்ற சோதனை அட்டவணை உருவாக்கப்பட்டு, தொகுத்தல் பகுதி சரியாக அமைவதை உறுதி செய்து கொண்டேன். அடுத்து அட்டவணை:சிலையெழுபது, ஓலைச்சுவடி.pdf மேற்கண்ட தொகுப்பு இடர் வராமல் உருவாக்க உள்ளேன். இதற்கு பின்புலமாக அனைத்து ஓலைச்சுவடி படக்கோப்புக்கும் பின்புலமாக File:Background-grey.png என்பது அமைக்கப்பட உள்ளது.
- அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1896.pdf, அட்டவணை:சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015.pdf என்ற இரு மின்னூல்களின் அட்டவணைகளை உருவாக்க, அவற்றை துப்புரவு செய்து பொதுவகத்தில் ஏற்றினேன். மேலும் சில ஊடகங்களை ஏற்றியுள்ளேன்
- ஓலைச்சுவடி அறிஞர்களுள் ஒருவரான முனைவர் சரவணன் அவர் பயணத்தின் வழியே என் ஊரில் என்னை விட்டுச் சென்றார். பயணத்தின் போது, பல்வேறு இலக்கிய ஓலைச்சுவடிகைள தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் கையாளும் முறைகளையும், விக்கிமீடியத் திட்டங்களின் எதிர்காலம் கணினிச்செயற்கையறிவு தொழினுட்பத்தால் எவ்வாறு மாறுகிறது என்பது குறித்தும், விக்கியர்கள் செய்ய வேண்டியவைகளையும் விவரித்தார். தற்போது ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ், மருத்துவ ஓலைச்சுவடிகள் சிலவற்றினை ஆவணப்படுத்தி வருகிறார். அரசின் சில கட்டுப்பாடுகளால் நிழற்படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். விக்கிமூல பயிலரங்கு நடக்கும் போது அவரை சிறப்பு அழைப்பாளராக அழைக்கும் போது அவரது பேச்சை ஆவணப்படு எண்ணியுள்ளேன். இலினக்சு நுட்பங்களைக் குறித்தும் உரையாடினோம்.
- /சிலையெழுபதும்விக்கித்தரவும்
காட்சியகம்
[தொகு]-
ஒரு நிமிடம் - சுவடி நூலகம் வழி
-
13 நிமிடங்கள்- ஓலைச்சுவடி நூல் உருவாக்க முறை
-
Img2pdf வழு
-
Img2pdf வழு நீக்கல்
-
மின்னூலை துப்புரவு செய்தல்
-
முனையத்தின் வழியே மின்னூலாக்கல்
-
மின்வருடல் பக்கத்தின் நிறத்தினை அமைத்தல்
-
படப்பதிவின் ஒலியளவை அதிகரித்தல்