தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.
தொடக்கம்: 31 ஆகத்து 2026
முடிவு: 30 செபடம்பர் 2026
மொத்த காலம்: 31 நாட்கள்/ ஒரு மாதம்
திட்ட இலக்கு: தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்; 14 ஆகத்து 2026 (காண்க.)
திட்டப்பணம் கிடைத்த நாள்:
திட்டப்போக்குகள் என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
உரிமப் பின்னணி: நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல், ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம், படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, மேம்படுத்தவே முடியவில்லை.
மூல இதழ்களை முடிந்தவரை.. அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. w:ஆனந்த விகடன், w:குடிஅரசு, w:திராவிடநாடு (இதழ்), w:காஞ்சி (இதழ்) ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, திராவிட நாடு (இதழ்) முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் தனியே பிரித்தெடுத்து, துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, கிடைக்கும் இதழ்களின் கதைகளை, பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு நூல்களில் உள்ள சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.