விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 6
தோற்றம்
இங்குள்ள செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...
திட்டகாலம்
[தொகு]

- தொடக்கம் : 1 செப்டம்பர் 2026
- முடிவு : 30 ஏப்ரல் 2027
- மொத்த காலம் : 8 மாதங்கள் (242 நாட்கள்)
- திட்ட இலக்கு : தேவநேயப் பாவாணரின் தமிழ்க் களஞ்சியம் (தொகுதிகள் 17, 18, 19, 20) ஆகிய 4 முக்கியமான அகராதி/வேர்ச்சொல் தொகுதிகளைத் தமிழ் விக்கிமூலத்தில் முழுமையாக மெய்ப்புப் பார்த்து, பக்க நிலைகளைச் சரிபார்த்து பூட்டுதல் (Index Validation). மேலும், இதன் மூலம் உருவாக்கப்படும் தரவுத்தொகுப்புகள் எதிர்காலத் தமிழ் செயற்கை நுண்ணறிவு (Tamil AI / LLM) மாதிரிகளுக்குத் திறந்தநிலைத் தரவுத் தளமாகப் பயன்படும் என்ற விழிப்புணர்வை உயர்கல்வி மாணவர்களிடம் ஏற்படுத்துதல்.
விண்ணப்ப விவரங்கள்
[தொகு]- விண்ணப்பித்தவர் : முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
- விண்ணப்பம் : Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Tamil Wikisource Enhancement and AI Integration
- அங்கீகரிக்கப்பட்ட நிதி : ₹2,05,000 INR ($2,400 USD + ₹5,000 CA Fee)
- நிறுவனக் கூட்டாளி : பலார்க் அறக்கட்டளை (Balarc Foundation)
பின்புலம் & நோக்கம்
[தொகு]- நிதிநல்கை : South Asia Regional Grants / India Rapid Project
- முக்கியப் சவால்கள் :
- உயர்கல்வி விழிப்புணர்வு இன்மை : கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்களும் மாணவர்களும் திறந்தவெளி எண்ணிமத் தளங்கள் குறித்த முறையான விழிப்புணர்வு இன்றி இருப்பது.
- தகுதியான மெய்ப்புப் பார்ப்போரின் பற்றாக்குறை : பாவாணரின் அகராதித் தொகுதிகளை மெய்ப்புப் பார்க்க ஆழமான தமிழ் இலக்கணப் புலமை வாய்ந்த பங்களிப்பாளர்கள் தேவைப்படுவது.
- முழுமையடையாத எண்ணிம ஆவணங்கள் : பாவாணர் களஞ்சியத்தின் 17, 18, 19, 20 தொகுதிகள் விக்கிமூலத்தில் அரைகுறையாக இருப்பது.
திட்டச் செயல்பாடுகள் (8 மாதக் காலக்கோடு)
[தொகு]நிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி (செப்டம்பர் 2026)
[தொகு]- கோவை, கோபிசெட்டிபாளையம், திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த 20 கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு இணையவழி, நேரிடை முகாம் வாயிலாக விக்கிமூல மெய்ப்புப் பயிற்சி அளித்தல்.
- இவர்களிலிருந்து 5 முதன்மை வழிகாட்டிப் பேராசிரியர்களைத் (Master Mentors) தேர்வு செய்தல்.
நிலை 2: மாணவர்களுக்கான இணையவழிப் பயிற்சி (அக்டோபர் 2026)
[தொகு]- 5 வழிகாட்டி பேராசிரியர்கள் மூலம் அவரவர் கல்லூரி மாணவர்களுக்கு இணையவழிப் பயிற்சி அளித்து, புதிய விக்கிமீடியா பயனர் கணக்குகளை உருவாக்குதல்.
நிலை 3: நேரிடை முகாம் & ஊக்கப் பரிசு வழங்கல் (நவம்பர் - டிசம்பர் 2026)
[தொகு]- 5 கல்லூரிகளிலும் நேரிடை பயிலரங்குகளை நடத்தி, சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகளும் (Incentive Prizes), சான்றிதழ்களும் வழங்குதல்.
- ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் 1 தீவிர மாணவர் ஒருங்கிணைப்பாளரைத் தேர்வு செய்தல்.
நிலை 4: பாவாணர் களஞ்சியம் மெய்ப்பு இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027)
[தொகு]- பாவாணர் தமிழ்க் களஞ்சியம் தொகுதி 17, தொகுதி 18 ஆகியவற்றை முழுமையாக மெய்ப்புப் பார்த்தல்.
நிலை 5: பாவாணர் களஞ்சியம் மெய்ப்பு இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027)
[தொகு]- பாவாணர் தமிழ்க் களஞ்சியம் தொகுதி 19, தொகுதி 20 ஆகியவற்றை முழுமையாக மெய்ப்புப் பார்த்து உரைச் சீரமைப்பு செய்தல்.
நிலை 6: கல்விசார் மறுஆய்வு & பக்கங்களைச் சரிபார்த்தல் (மார்ச் 2027)
[தொகு]- பேராசிரியர்களின் மேலாய்வுப் பார்வையில் (Peer-Review) அச்சுப் பிரதிகளோடு ஒப்பிட்டு, 4 தொகுதிகளின் பக்கங்களையும் 'சரிபார்க்கப்பட்டது' (Index Validated - Purple Status) நிலைக்கு உயர்த்திக் பூட்டுதல்.
நிலை 7: திட்ட நிறைவு & அறிக்கை சமர்ப்பித்தல் (ஏப்ரல் 2027)
[தொகு]- பங்கேற்பாளர்களுக்குக் கணியம் அறக்கட்டளை வாயிலாகத் தொழில்பயிற்சிச் சான்றிதழ் (Internship Certificate) வழங்குதல், WMF-க்கு இறுதி நிதி/செயல்பாட்டு அறிக்கையைச் சமர்ப்பித்தல்.
திட்டக் குழுவினர்
[தொகு]- முனைவர் சத்தியராசு தங்கச்சாமி - திட்டத் தலைவர் & நிதி நிர்வாகி (தன்னார்வலர்)
- முனைவர் இரா. குணசீலன் - திட்ட இணை ஒருங்கிணைப்பாளர் (தன்னார்வலர்), பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்
- முனைவர் இரா. நித்யா - நிதி மேலாண்மையர் (தன்னார்வலர்), கௌரவ விரிவுரையாளர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி
திட்ட இணை ஒருங்கிணைப்புக் குழுவினர்
[தொகு]- முனைவர் இரா. நித்யா, கௌரவ விரிவுரையாளர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி - நிதி மேலாண்மையர் (தன்னார்வலர்)
- பேரா. இரா. அரிகரசுதன், கல்லூரி முதல்வர், கிளஸ்டர் மீடியா கல்லூரி, கோயமுத்தூர் & தலைவர், அனலி கலை இலக்கியப் பள்ளி, கோயமுத்தூர்
- முனைவர் அ.இராஜலட்சுமி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - 641 029
- முனைவர் முனைவர் ச. சந்திரகலா, பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்
- முனைவர் க. பாலாஜி, பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்
- வீ. கலைவாணி, உதவிப்பேராசிரியர், வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல், ஈரோடு
திட்டத்தில் இடம்பெறும் கல்லூரிகள்
[தொகு]- ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்
கூட்டாளர் அமைப்புகள்
[தொகு]- அனலி கலை இலக்கியப் பள்ளி, கோயமுத்தூர்
- 'இனம்' - பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (ISSN: 2455-0531), தமிழ்நாடு, இந்தியா
- கணியம் அறக்கட்டளை, கனடா
திட்டத்தின் இலக்குகள் (Metrics)
[தொகு]- பங்கேற்பாளர்கள் : 30 நபர்கள் (20 பேராசிரியர்கள், 5 மாணவர் தலைவர்கள், 5 ஒருங்கிணைப்பாளர்கள்/ஆலோசகர்கள்)
- மெய்ப்புப் பார்ப்போர் (Editors) : 10 நபர்கள் (5 புதிய மாணவர் தொகுப்பாளர்கள் + 5 வழிகாட்டி பேராசிரியர்கள்)
- ஒருங்கிணைப்பாளர்கள் : 3 நபர்கள்
- மேம்படுத்தப்படும் விக்கிமூல நூல்கள் : 4 தொகுதிகள் (தேவநேயப் பாவாணரின் தமிழ்க் களஞ்சியம் 17, 18, 19, 20)
ஆவணங்கள் & வெளியீடுகள்
[தொகு]இத்திட்டத்தில் இணைந்துள்ள கல்லூரிகளின் திட்டப் பக்கங்கள்
[தொகு]- கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), துடியலூர், கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவிநாசி, திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா.
- பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சரவணம்பட்டி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா.
- பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சித்ரா, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா.
- ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மலுமிச்சம்பட்டி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா.
- டாக்டர் எஸ் என் எஸ் இராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), சரவணம்பட்டி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா.
- இரத்தினம் வேலுசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சூலூர், கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா.
- ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவைப்புதூர், கோயமுத்தூர் – 641042, தமிழ்நாடு, இந்தியா.
- வேளாளர் மகளிர் கல்லூரி], திண்டல், ஈரோடு, தமிழ்நாடு - 638012, இந்தியா.
- விக்கிமூலம்:தன்னார்வலர்களுக்கான தொடர் பயிற்சி
- விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் நேரடிப் பயிற்சி
- விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி
