உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:நுட்பத் தேவைகள்

விக்கிமூலம் இலிருந்து

விக்கிமூலம் என்ற இத்திட்டத்தில் பட வடிவில் இருக்கும் நூல்களின் பக்கங்களை, எழுத்து வடிவில் மாற்றுகிறோம். இம்முதன்மை நோக்கத்தினை தெளிவாகவும், பிழைகள் இன்றியும், விரைவாகவும் செய்ய நுட்பங்கள் தேவைப்படுகின்றன. அவைகள் குறித்த செய்திகள் இங்கே ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஏதேனும் தேவைகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள். உங்களின் அனுபவம்/முன்மொழிவு/திறன் பிறருக்கு பேருதவியாக இருக்கும்.

தேவைகள்

[தொகு]

மின்னூலை மேம்படுத்தி பொதுவகத்தில் ஏற்றுதல்

[தொகு]
  1. ஒரு மின்னூலின் பக்க ஓரங்கள் அச்சு நூல்களுக்காக அமைக்கப் பட்டன. அவற்றை நாம் மின்வருடிய பின்பு பக்க ஓரங்களை 70% குறைக்க வேண்டும். இதனால் எழுத்துணரியாக்கமும் நன்கு வருகிறது. மெய்ப்பு காணும் பக்கத்திலும் மின்வருட பக்கத்தின் எழுத்துகள் பெரிதாகத் தெரிகின்றன. காண்க: விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள் என்பதன் நூற்படியல் சென்று உரிய அட்டவணைகளைக் காணவும்.
  2. Bulk downloader - தமிழ் எண்ணிம நூலகத்தில் இருந்து ஒரு ஆசிரியருக்கான நூல்கள் அனைத்தையும் காண இயலுகிறது. அவற்றை ஒட்டு மொத்தமாக பதிவிறக்கக் கருவி அமைத்தல் வேண்டும். பிறகே பக்கங்களை மேம்பாடு செய்து, சரி பார்த்து ஏற்ற வேண்டும்.
  3. பைத்தான்3 mass uploader - pdf folder2 commons
  4. category:Transclusion completed என்ற பகுப்பிலுள்ள, 591 முடிக்கப்பட்ட நூல்களை எளிமையாக டெலிகிராம் போன்ற கட்டற்ற சமூக ஊடகங்களில் பகிர நுட்பம் அமைக்க வேண்டும்.
  5. downloaded Statistics tool தனியாக தமிழ் விக்கிமூலத்திற்கு வேண்டும். எடுத்துக்காட்டு: விக்கிமூலம்:கணியம் திட்டம்/பணிகள்/முடிந்தவை
  6. ஒரு பங்களிப்பாளர் எத்தரத்துடன் பங்களிப்பு செய்து உள்ளார் என்பதை அறிய contributors metric tool வேண்டும்.

ஒரு பக்கத்தினை திறக்காமல் மாற்றம் செய்ய, கீழ்காணும் பொத்தான்கள் அமைத்தல் வேண்டும்

[தொகு]
  1. nop இடாமல், அதற்கு மாற்றாக, ஒரு பக்கமானது சென்ற பக்கத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தால், அதாவது ஒரு பக்கத்தின் முதல் அதே பத்தியில் தொடங்குமாயின், இரண்டு வெற்று வரிகள் இட்டால் போதும். அது nop இடும் தேவையை நிறைவேற்றும். குறைவான குறியீடுகளை மெய்ப்புப் பார்க்கும் போது பயன்படுத்துதல் நன்று.
    • ஏற்கனவே ஒரு வெற்று வரியோ அல்லது ஒன்றிற்க்கும் மேற்பட்ட வெற்று வரிகள் இருப்பின் அவற்றை நீக்கி, இரண்டு வெற்று வரிகளை மட்டும் இட வேண்டும். அப்பொழுது ஏற்கனவே சரியாக இரண்டு வெற்று வரிகள் இருப்பின் எம்மாற்றமும் செய்யாமல் அடுத்த பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  2. பொதுவாக உலாவியல் F 11 அழுத்தினால், நூலின் அச்சுப்பக்கம் மேலும் நான்கு வரிகள் தெரியும். அதுபோல, ஒரு பொத்தானை அழுத்தினால், பக்கம் - உரையாடல் - படம் என்ற தத்தல் இருக்கும் வரியானது, பக்கத்தினை திறக்கும் போது மறைய வேண்டும். அப்படி செய்தால் மேலும் ஏறத்தாழ 8-10 வரிகள் மெய்ப்பு காண தோன்றும்.

ஒரு பக்கத்தினை திறந்து மாற்றம் செய்ய, கீழ்காணும் பொத்தான்கள் அமைத்தல் வேண்டும்

[தொகு]
  1. பிரிந்த சொற்களை இணைத்தல்
    • 1. முதலில் அச்சொற்களுக்கு இடையில் சுட்டியை வைக்க வேண்டும்; 2. அடுத்து விசைப்பலகைக்கு கையை மாற்றி, back space / delete பொத்தானை அழுத்தி, இணைக்க வேண்டும். இவ்வாறாக நான்கு சொற்கள் இருந்தால் 8முறை கைகளை விசைப்பலகைக்கும், சுட்டிக்கும் இடையை நகர்த்தும் சூழ்நிலை உள்ளது. மாற்றாக, சுட்டியால் நான்கு முறை தெரிவு செய்த பிறகு ஒரே முறையில் அழுத்தினால், தேரந்தெடுக்கப்பட்ட சொற்கள் இணையும் நுட்பம் செய்ய வேண்டும். இதற்கு படச்செதுக்குதல் நுட்பத்தில் உள்ளது போல, படத்திற்கு பதில் பக்கத்தரவு வந்து அமைத்து மாற்றும் கருவி அமைத்தல் வேண்டும்.
  2. மேலடிப் பகுதியை மூன்றாகப் பிரித்தல்: அட்டவணைப் பக்கமொன்றினைத் திறக்கும் போது தொகு என்பதை அழுத்தியவுடன், அப்பக்கம் திறந்து மூன்று பகுதிகள் (மேலடி, நடுப்பகுதி, கீழடி) தோன்றும் . அதுபோல மேலடியில் பெரும்பாலும் 90% {{rh}} வார்ப்புருவையே பயன்படுத்துகிறோம். அது மூன்று பகுதிகளை உடையது. இடப்பக்கத்தரவு, நடுத்தரவு, வலப்பக்கத் தரவு. மூன்று தரவுகளுக்கும் மூன்று கட்டங்களை கிடைமட்டமாக அமைத்து, வார்ப்புருவின் குறியீடுகளை இடாமலேயே, அதனை விளைவினை பெற , php plug in அமைத்தால், புதியவர் செய்யும் முதல் பங்களிப்பான இந்த முதல் செயல் சலிப்பின்றி செய்ய இயலும். தற்போதுள்ள இதன் நுட்பங்கள் புதிய பயனர்களை ஈர்க்கவில்லை. மேலும் இதனைச் சொல்லிக் கொடுத்தாலும், தற்போது மேலடியில் உள்ள மூன்று | (pipe line) குறியீடுகளில் ஒன்றைச் சுட்டியை சரியாக வைப்பது கண் அயர்ச்சியை உருவக்குகிறது. நேரமும் அதிகமாக செலவாகிறது.
  3. பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/181 இந்த பக்கத்தில் உள்ள பாடல் வரிகள் ஒன்றுவிட்டு ஒன்று உள் தள்ளி இருக்கின்றன. பாடல் முழுவதையும் தேர்ந்தெடுத்து, ஒரு பொத்தானைச் சொடுக்கினால் அதுபோல இடைவெளிகள் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். காண்க: பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/95

உள்ளவை

[தொகு]


உள்ளவைகளின் மேம்பாடுகள்

[தொகு]
  1. விக்கிமூலம்:விக்கித்தரவு என்பதில் குறிப்பாக விக்கிமூலம்:விக்கித்தரவு/ஆன்ட்ராய்டு வாசிப்புச் செயலிக்காக, விக்கித்தரவில் மாற்றங்கள் செய்ய உதவி கோரப்பட்டுள்ளது.
  2. தற்போதுள்ள மிதக்கும் பொத்தான்கள் சற்று கீழே அமைக்க வேண்டும். அதாவது பக்கப்பெயர் (h1) உள்ள வரிக்கு, ஆனால் தற்போதுள்ள அதே இடப்பக்கமூலையில் கீழிறக்க வேண்டும். ஏனெனில், மேல் விக்கியின் விளம்பரம் , கருவிகள் தெரிவுப்பட்டியலே சொடுக்க இயலுகிறது. இப்பொத்தான்களைச் சொடுக்க இயலவில்லை.
  3. {{nop}.} பொத்தானையும், இடப்பக்கக் கருவிப் பட்டையில் இருந்து எடுத்து, மிதக்கும் பொத்தான் பட்டியலில் இணைத்தல் நன்று.
  4. மேற்கூறியவாறு nop இணைப்பது போல, - (hyphen) இரு பக்கங்களில் உள்ள பிரிந்த சொற்களை இணைக்க நுட்பத்தினை உருவாக்க வேண்டும்.
  5. தற்போதுள்ள படச்செதுக்கும் கருவியில், தோன்றும் பெட்டியில் வலப்புறம் இடம் வெற்றாக உள்ளது. அவ்விடத்தில் சுட்டியை எளிமையாகப் பயன்படுத்த சுட்டி செல்லும் இடம் பெரியதாகக் காட்டினால், கண்களால் எளிமையாக உணர்ந்து படச்செதுக்கும் பணி எளிதாகும்.
  6. விக்கிமீடிய இடைமுகம் வழங்கும் Dark mode வசதியில் மேலடியில் {{rule}} வார்ப்புரு இருந்தாலும் தெரியாது. ஏனெனில் அது கருமை நிறமாக இருப்பதால், அச்சூழ்நிலயில் அது வெள்ளை நிறமாக இருப்பின், அது ஏற்கனவே போடப்பட்டுள்ளது என அறிய ஏதுவாக இருக்கும். இல்லையெனில், திறந்து பார்த்தால்தான் தெரியும்.
  7. மீடியாவிக்கி பேச்சு:Gadget-Floatingbutton.js
  8. அடிக்குறிப்பு: தெய்வங்களும் சமூக மரபுகளும்/004 என்பதில் {{sup|[[#footnote|<b>1</b>]]}} என்ற அடிக்குறிப்புகளுக்கான விக்கிக்குறியீடுகள் இடப்பட்டுள்ளன. சான்றுகள் தருதல் முறைகளில் ஒன்றான இதில், <ref> பயன்படுத்தும் போது தோன்றும் அம்புக்குறியை அழுத்தினால் , கீழுள்ள சான்றுகள் (மேற்கோள்கள்) பகுதியில் இருந்து மேலே தானாகவே சென்று, அதனைக் காட்டும். அந்த வசதி இந்த footnote வசதியில் கொண்டு வர இயலுமா? செய்தால் நன்றாக் இருக்கும்.
  9. ஒரு நூல் அட்டவணையில் பங்களித்தவர்களின் பெயர்களையும், தொகுப்பு எண்ணிக்கையையும் அறிய https://quarry.wmcloud.org/query/93176 என்ற நுட்பம் பயன்படுகிறது. அதோடு அவர்கள் எந்தெந்த பக்கங்களைச் செய்தார்கள்? என்ன மாற்றம் செய்தார்கள் என்பதை அறிய மேம்படுத்த வேண்டும்.

பிற

[தொகு]