விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பயனர்:Sridhar G, பயனர்:Balajijagadesh கவனத்திற்கு போட்டிக்கான நூல்களைத் தேர்ந்தெடுக்கும்போது அனைத்து பக்கங்களும் உள்ள நூல்களைத் தேர்ந்தெடுப்பதே விக்கிமூலத்துக்கு ஆக்கத்தசைச் சேர்க்கும். எடுத்துக்காட்டாக கால்டுவெல்-திருநெல்வேலி சரித்திரம் நூலின் பேச்சுப் பக்கத்தைப் பார்க்கும்போது இது அனைத்துப் பக்கங்களையும் கொண்ட நூலாக இல்லை எனத் தெரிகிறது. இது போன்று அனைத்துப் பக்கங்கள் இல்லாத நூல்கள் ஏதாவது பட்டியலில் இருந்தால் அவற்றை நீக்குவதே நல்லது.--அருளரசன் (பேச்சு) 14:40, 30 ஏப்ரல் 2020 (UTC)

ஆயிற்று அருளரசன். நன்றி. மற்ற நூல்களையும் சரிபார்க்கிறோம். Sridhar G (பேச்சு) 08:25, 1 மே 2020 (UTC)

நான் மெய்ப்புக்காண விரும்பும் நூல்களை இணைக்கலாமா?[தொகு]

@Sridhar G: பொதுவாக எனது பரப்புரையில் சிலருக்கு அறிமுகம் செய்துள்ளேன். அவர்கள் புதியவர்கள் என்பதால் முழுமையற்ற பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர். அந்நூல்களை இணைத்து, முழுமையாக பச்சையாக்க உள்ளேன். அதற்காகவே வினவுகிறேன்.-- உழவன் (உரை) 11:05, 3 மே 2020 (UTC)

@Info-farmer: மெய்ப்பு பார்க்கப்பட்ட நூல்கள், சரிபார்ப்பு செய்ய வில்லை என்றால் அந்த நூல்களையும் சேர்க்கலாம். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 04:20, 5 மே 2020 (UTC)
இணைத்துள்ளேன். நன்றி. இந்த இரண்டு நூல்களையும் வேறு இந்திய திட்டப்பக்கங்களில் இணைத்த பிறகு மெய்ப்புத் தொடங்கலாமா? அல்லது இப்பொழுதே செய்யத் தொடங்கலாமா?-- உழவன் (உரை) 04:53, 5 மே 2020 (UTC)
இங்கே இணைக்கப்பட்ட பின்பே செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.-- உழவன் (உரை) 07:49, 5 மே 2020 (UTC)

இந்திய திட்டபக்கத்தில் பங்களிப்பாளர்கள் பெயர் விடுபட்டுள்ளது[தொகு]

இந்திய திட்டபக்கத்தில் தமிழ்பங்களிப்பாளர்கள் பட்டியலைச் சரிபார்க்கவும்-- உழவன் (உரை) 12:24, 3 மே 2020 (UTC)

அந்தக் கருவியில் சில பிழைகள் உள்ளதாகவும் அதனைச் சரிசெய்வதாகவும் கூறியுள்ளனர். நன்றிSridhar G (பேச்சு) 18:15, 7 மே 2020 (UTC)

விருப்ப நூல்கள்[தொகு]

  1. அட்டவணை:இலக்கிய அமைச்சர்கள்.pdf
  2. அட்டவணை:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf
  3. அட்டவணை:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf
  4. அட்டவணை:காலம் தேடும் தமிழ்.pdf
  5. அட்டவணை:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf --Guruleninn (பேச்சு) 12:50, 5 மே 2020 (UTC)

Guruleninn அப்படியே இந்த நூல்கள் வரலாறா, இலக்கியமா போன்றவற்றையும் குறிப்பிட்டால் meta வில் குறிப்பிட வசதியாக இருக்கும். நன்றி

Guruleninn இலக்கிய அமைச்சர்கள் எனும் நூல் [www.tamilvu.org/library/nationalized/pdf/47-a.k.navaneethakiritinan/illaikkyaamaicharkal.pdf எனும்] பக்கத்தில் உள்ளது. எனவே வேறு நூல்களைப் பரிந்துரைக்கவும். மற்ற நூல்களும் மதுரைத் திட்டம், தமிழ் இணையப் பல்கலைக் கழகம் போன்றவற்றில் உள்ளதா என சரிபார்த்து பின்னர் தெரிவிக்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 06:51, 8 மே 2020 (UTC)

@Sridhar G: மேற்கண்ட இணையதளத்திலிருந்துதான் அந்நூல் விக்கிமூலத்திற்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டி விதிகளின்படி யுனிகோடாக இல்லை.

தாய் - மாக்சீம் கார்க்கி - தகுதியிழப்பு தொடர்பாக[தொகு]

@Sridhar G: @Balajijagadesh: அட்டவணை:தாய்-மாக்சிம்_கார்க்கி-தமிழாக்கம்.pdf நூல் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எந்த தளத்தில் யுனிகோடாக அந்நூல் உள்ளது ? தமிழ் இணையப் பல்கலைக் கழக தளத்தில் உள்ள நூல் மின்வருடிய pdf வடிவமே தவிர யுனிகோடாக இல்லை.

-- :@Sridhar G: @Balajijagadesh: நான் தேடியா வரையில், இந்தப் புத்தகம் யுனிகோடாக எந்தத் தளத்திலும் இல்லை. தாங்கள் எந்தத் தளத்தில் யுனிகோடாக உள்ளது என்ற இணைப்பைப் பகிரவும். --கலீல் ஜாகீர் (பேச்சு) 09:37, 9 மே 2020 (UTC)

-- :@Jskcse4: எனது தவறுதலான புரிதலால் இந்த நூல்களை நீக்கியமைக்கு எனது வருத்தங்கள் . தற்போது அந்த நூல்களை சேர்த்துள்ளேன். இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். தங்களது புரிதலுக்கு நன்றி. Sridhar G (பேச்சு) 11:05, 9 மே 2020 (UTC)

மதிப்பெண்கள்[தொகு]

@Sridhar G: - நேற்றைய தினம் எனது மதிப்பெண்கள் 1024 ஆக இருந்தது. இன்று 915 ஆக குறைந்துள்ளது. —-காரணத்தை அறிய முடியுமா? Fathima rinosa (பேச்சு) 11:01, 10 மே 2020 (UTC)
@Fathima rinosa: வணக்கம் நேற்று மதிப்பெண்கள் இற்றைப் படுத்தப்பட்டதினை சற்று கவனிக்கவும். அதில் contributions என்று இருக்கும் அதாவது proofread+validations என்றும் தனியாக validations என்றும் தவறாக இருந்தது. நாம் சுட்டிக் காட்டிய பிறகு தனித் தனியாக கொடுத்துள்ளனர். மதிப்பெண்களை இற்றைப் படுத்துவதில் விக்கிப்பீடியா போன்று இது இருப்பதில்லை. அங்கு அனைவராலும் என்ன மதிப்பெண் இருக்கிறது என்பதனை உடனடியாக பார்க்க இயலும். எங்களால் கூட தற்போதைய மதிப்பெண்ணை காண இயலாது. இரவும் 8-9 மணிக்கு அவர்களாகவே update செய்த பிறகே எங்களால் காண இயலும். தங்களுக்கு மேலும் சந்தேகம் இருந்தால் தங்களது பங்களிப்பினையும் இதனையும் சரிபார்க்கலாம். நன்றிSridhar G (பேச்சு) 11:09, 10 மே 2020 (UTC)


@Sridhar G: நான் மெய்ப்பு பார்த்த பக்கங்களின் எண்ணிக்கை 225 ஐ விட அதிகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். சரிபார்த்து கூற முடியுமா? Fathima rinosa (பேச்சு) 11:59, 10 மே 2020 (UTC)

தங்களது பங்களிப்புகளைச் சரிபார்த்தால் அது தெரிய வரும். நன்றி Sridhar G (பேச்சு) 13:45, 10 மே 2020 (UTC)

பங்களிப்புகளை சரிபார்த்த போது 225 பக்கங்களுக்கும் அதிகமான பக்கங்களை மெய்ப்பு பார்த்துள்ளேன். Fathima rinosa (பேச்சு) 14:02, 10 மே 2020 (UTC)

@Sridhar G: விந்தன் கதைகள்-1 என்ற நூல் நீக்கப்பட்டுள்ளது. அதில் ஏறத்தாழ 70 பக்கங்களை மெய்ப்பு பார்த்துள்ளேன். அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதா? — Fathima rinosa (பேச்சு) 12:09, 10 மே 2020 (UTC)

ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. முழு முடிவு தெரிந்த பிறகு ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும். Sridhar G (பேச்சு) 10:43, 11 மே 2020 (UTC)