விடுதலை வீரர்கள் ஐவர்/தலைவர் உரை 2
Appearance
தலைவர் உரை
இருமருதை இங்கழைத்து வீரத்
திருமவியும் வரலாற்றைத் தந்திட்டார் நம் நண்பர்
இருமருதும் ஒரு மருதாய்ப் பிறந்திட்ட
பெரும்புலவன் பாரதியைக் காட்டுதற்கு - திரு
முருகு சுந்தரக் கவிவாணர் முனைகின்றார் கேட்போம்.
பழையநடை, பழங்கவிதை, பழந்தமிழ் நூல்
பார்த்தெழுதிப் பாரதியார் உயர்த்தா ரில்லை
அழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை
அறிந்திலதே புவியென்றால் புவிமேற் குற்றம்
களைத்தவர்க்கும் கல்லாத தமிழர்க்கும் தனித்தபடி
தோலுரித்துச்
சுளைத்தமிழால் கவியளித்த சுப்பிரமணிய பாரதியார்
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு மணக்க வந்த கற்பூரச் சொற்கோ என்றெல்லாம்
ஆடும் மயில் தமிழ் என்முன் என
ஆடவைத்த பாரதி தாசன் பாடுகின்றார்
இவரென்ன பாடுகின்றார், பார்ப்போம்.