விடுபூக்கள்
தோற்றம்
பண்பாட்டு ஆய்வாளர். தமிழ்நாட்டில் தற்போது நடை பெற்று வரும் பண்பாட்டு மாற்றங்களைத் தொடர்ந்து அவதானித்து வருபவர். தேவையான மாற்றங்கள் எவை என்பது பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் இவர் எழுதி உள்ளார். இவரது நூல்கள்: அழகர்கோயில், பண்பாட்டு அசைவுகள், வழித்தடங்கள், பரண், செவ்வி, இந்து தேசியம், உரைகல், மானுட வாசிப்பு. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தமிழியல் துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார்.
தொ. பரமசிவன்
- விடுபூக்கள்
- தொ.பரமசிவன்
- உரிமை : ஆசிரியருக்கு
- முதல் பதிப்பு : டிசம்பர் 2012
- மறுபதிப்பு : ஜூலை 2013
- மூன்றாம் பதிப்பு : அக்டோபர் 2016
- விலை ரூ. 60
- வெளியீடு :
- மணி பதிப்பகம்
- 29ஏ, யாதவர் கீழத் தெரு
- பாளையங்கோட்டை- 627 002.
- நெல்லை மாவட்டம்
- தொலைபேசி 0462 - 2560083
விடுபூக்கள்
தொ. பரமசிவன்
நன்றி...
- இந்நூல் மூன்றாம் பதிப்பாக வெளி வருகிறது. நூலின் அட்டைப் படத்தை வடிவமைத்த ஓவியர். வே. செந்தில் செல்வன், தட்டச்சு செய்து உதவிய இராசபாளையம் எழுத்தாளர் திரு.தீத்தாரப்பன், மெய்ப்பு திருத்துவதில் துணை நின்ற திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவர் திரு. ச. வெண்மதிவேந்தன், மதுரை செந்தமிழ் கல்லூரி மாணவர் திரு.சபரி சுப்பிரமணியன், செம்மையாக நூலாக்கம் செய்த கோவில்பட்டி திரு. மாரீஸ் நூல் வெளிவருவதற்கு எல்லா வகையிலும் துணை நின்ற பேராசிரியர் தொ.ப.வுடன் 27ஆண்டுகளாக உடன் பயணிக்கும் மாணவர் சங்கரன்கோவில் தாய்த்தமிழ்ப் பள்ளி நிறுவனர் ஆசிரியர் திரு. வே.சங்கர்ராம் ஆசி ஆகியோருக்கு நன்றி உரியது.
மணி பதிப்பகம்
பாளையங்கோட்டை
முன்னுரையாக...
- இந்நூல் கட்டுரைகள் அனைத்தும் ஒரு பொருள் பற்றியனவோ, ஒரு காலப்பகுதி பற்றியனவோ அல்ல. மாலை கட்டியபின் எஞ்சிய பூக்களை எங்கள் பகுதியில் விடுபூக்கள் என்பார்கள். இந்நூற் கட்டுரைகள் அனைத்தும் விடுபூக்கள்தான்.
- வட்டார வரலாறுகள் தொகுக்கப்படும்போதுதான் தமிழ்ச் சமூக வரலாறு முழுமையடையும் என்பது இந்த நூல் உங்களுக்குத் தரும் செய்தியாகும்.‘தம்பிடையான்’ கட்டுரையினை நீங்கள் அப்படித்தான் பார்க்க வேண்டும்.
- இந்த விடுபூக்களையும் திரட்டித் தொகுத்து நூலில் சேர்த்து மாலையாக்கிய நன்றிக்குரிய நண்பர்கள் திரு. சித்தானை திரு. நவநீதகிருஷ்ணன் ஆகியோராவர். அவர்கள் இருவருக்கும் நன்றி உரியது.
தொ.பரமசிவன்
பாளையங்கோட்டை
பொருளடக்கம்
| 1. | 13 |
| 2. | 18 |
| 3. | 20 |
| 4. | 23 |
| 5. | 27 |
| 6. | 31 |
| 7. | 34 |
| 8. | 37 |
| 9. | 40 |
| 10. | 44 |
| 11. | 48 |
| 12. | 51 |
| 13. | 54 |
| 14. | 57 |
| 15. | 61 |
| 16. | 65 |
| 17. | 69 |
| 18. | 73 |
| 19. | 77 |
