வினாக்களும் சுரதாவின் விடைகளும்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
வினாக்களும்
சுரதாவின் விடைகளும்
உவமைக் கவிஞர்
சுரதா
சுரதா பதிப்பகம்
56அ, இலட்சுமணசுவாமி சாலை,
கலைஞர் கருணாநிதி நகர்,
சென்னை–600078
தொலைபேசி எண் : 428508
- முதற்பதிப்பு : ஆகஸ்டு, 1991
உரிமை : ஆசிரியருக்கு
- முதற்பதிப்பு : ஆகஸ்டு, 1991
- பக்கம் : VIII+176 = 184
- விலை: ரூ.23-00
- அச்சிட்டோர்:
- ஸ்ரீகோமதி அச்சகம்
41, சூரப்ப முதலி தெரு
திருவல்லிக்கேணி, சென்னை–600005
தொலைபேசி எண் : 844554
- ஸ்ரீகோமதி அச்சகம்
- அச்சிட்டோர்:
இது ஒரு மூக்கு நூல்
இலக்கிய மூச்சு நூல்
‘கற்றில னாயினும் கேட்க....’ என்னும் குறள்வரி வாயிலாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வினா—விடை முறைக்கு வித்திட்ட உலகின் முன்னோடிப் பேரறிஞர் நம் திருவள்ளுவரே!
ஒருவரை வேலையில் அமர்த்த அவரது பொது அறிவை மதிப்பீடு செய்யும் வினா—விடை என்னும் ‘இன்டர்வியூ’ (INTERVIEW) முறையை ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தினர்.
அதனை ‘நேர்காணல்’ என்னும் தனித்தமிழ்ச் சொல்லால் முதன்முதல் குறிப்பிட்டவர் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள். வடமொழியே சிறந்தது என்று வாதிட வந்த கோடகநல்லூர் சுந்தரசாமி என்பாரிடம் தமிழே சிறந்தது என்று ஏழு நாள்கள் வாதிட்டு வென்றவர் வள்ளலார். அந்த வாதங்களே நூல் வடிவம் பெற்றிருந்தால் தமிழ் மொழியின் தற்காப்புக்காக நடைபெறும் மொழிப்போருக்கு வலிமையான வாளும் கேடயமும் ஆகியிருக்கும்.
முதல் ‘நேர்காணல்’ என்பது–காசிப்பண்டாரத்துக்கும் கிறித்தவப் பாதிரியாருக்கும் 1857–ல் நடை பெற்ற உரையாடல் ஆகும்.
இந்த இருபதாம் நூற்றாண்டில் பகுத்தறிவுப் பகலவனாய் ஒளிர்ந்த பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்களே மேடைப் பேச்சில் முதன் முதல் வினா—விடை முறையை அறிமுகப்படுத்தி மணிக்கணக்கில் மக்கள் மனத்திலே சிந்தனைச் சுடரைக் கொழுந்துவிடச் செய்தவர்.
பத்திரிகை உலகைப் பொறுத்தவரை வடஇந்தியரான பாபுராவ் பட்டேல் ‘பிலிம் இந்தியா’ என்னும் தமது இதழில் முதன் முதல் கேள்வி—பதில் பகுதியைத் தொடங்கி பண்டித நேரு போன்ற உலகத் தலைவர்களையே வியக்க வைத்தார். அவரது அடிச்சுவட்டில் முதன் முதல் தமிழ் ஏட்டுலகில் தனிச்செல்வாக்கை வளர்த்துக் கொண்டவர் ‘கல்கண்டு’ ஆசிரியர் தமிழ்வாணன். இன்று தமிழ்நாட்டின் எல்லா ஏடுகளுமே அரசியல் தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள் ஆகியோரிடம் வினாக்கள் எழுப்பி விடைகளைப் பேட்டிகளாக வெளியிடுவதைப் பார்க்கிறோம்.
ஊறுகாய் இல்லாத மோர்ச் சோறு வாயின் உள்ளே இறங்காது என்பது போல, எந்த வகையிலாவது வினா—விடைப் பகுதி இல்லாத ஏடும் வாசகர்களின் வரவேற்பைப் பெறாது என்பதே நடைமுறை உண்மை.
நானே பல ஏடுகளுக்கு 150க்கும் மேற்பட்ட பேட்டிகள் தந்திருக்கின்றேன். என்னிடம் முதன்முதல் பேட்டி கண்டவர் புகழ் பூத்த தமிழ் நாவலாசிரியர் ஜெகசிற்பியன். 15–5–1952 ‘சிரஞ்சீவி’ மாத இதழில் அது வெளியாயிற்று. ஆனந்த விகடன், கல்கி, தினத்தந்தி, ராணி, குமுதம், குங்குமம், மாண்புமிகு அமைச்சர் எஸ். டி. சோமசுந்தரம் வெளியிட்ட ‘போர்வாள்’ முதலானவை என் பேட்டிகளை ஏந்தி வந்தவற்றுள் குறிப்பிடத் தக்கவை. மலேசியாவின் தமிழ்நேசன், தினமணி, வானம்பாடி, சிங்கப்பூரின் தமிழ்முரசு ஆகிய ஏடுகளும் கூட என் பேட்டிகளை வெளியிட்டுள்ளன.
தமிழ் நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றுக்கும் பேட்டிகள் கொடுத்திருக்கிறேன். சிறந்த எழுத்தாளர் தயாரிப்பாளர் எம்.எஸ். பெருமாள் முயற்சியால் 1988–ல் நான் அளித்த தமிழ்ப் பேட்டி ஆங்கில விளக்கவுரையுடன் இந்தியா முழுவதும் ஒளிபரப்பு ஆயிற்று. தமிழகக் கவிஞர்களில்— பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில்—அத்தகைய ஒருமணிநேரப் பேட்டிக்கான வாய்ப்பு வழங்கப்பட்ட முதல் கவிஞன் இந்தச் சுரதாவே? அந்தப் பேட்டியில் முக்கியப் பங்கேற்றவர்; நான் பயின்ற தஞ்சை மாவட்டம் உரத்தநாடு உயர்நிலைப் பள்ளியில் படித்தவரும் பலதுறை இலக்கியப் படைப்பாளியுமான கவிஞர் அ. மறைமலையான். அப்போது உறுதுணை புரிந்தவர் வானொலி நாடக ஆசிரியர் பட்டுக்கோட்டை குமாரவேல்.
இதுகாறும் நான் கொடுத்த பேட்டிகளில் ஐம்பதை மட்டுமே தேர்ந்தெடுத்து ‘வினாக்களும் சுரதாவின் விடைகளும்’ எனும் இந்நூலில் இணைத்திருக்கிறேன். எஞ்சியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட என் பேட்டிகளை அடுத்தடுத்து ‘சுரதா பதிப்பகம்’ நூல்களாக வெளியிடும்.
தன் வரலாற்றுக்கு ஒரு முன் வரலாறு இத்தகைய வினா–விடை நூல் என்பது என் கருத்து. ஒருவரது அறிவை அனுபவத்தை எடை போட்டுக் காட்டும் துலாக்கோல் ஆகவும் இது துலங்கும்.
முகத்திலே முந்திக்கொண்டு இருப்பது மூக்கு. அப்படித் தான் ஓர் அறிஞனின் அறிவு வரலாற்றுக்கு அடிப்படை அறிமுகம் அவனுடைய பேட்டிகள். அந்தப் பேட்டிகள் அடங்கிய நூலை, ஒரு மூக்கு நூல் —இலக்கிய மூச்சு நூல்—எனவும் கூறலாம்.
இப்படிப் பேட்டிகளையே நூலாக்கலாம் என்று முதன் முதலாக நான் சொன்ன கருத்தை நிறைவேற்றியவர் கவிஞர் நாரா. நாச்சியப்பன். அவரது நூலைப் பார்த்ததும் என் பேட்டிகளும் ஏன் நூலாக மலரக் கூடாது என்னும் வினாவினை என் மனைவி சுலோச்சனா தொடுத்தார். கவிமாமணி அ. மறைமலையான், சேலம் கவிஞர் எழுஞாயிறு, கவிமாமணி சாஸ்திரி வெங்கட்ராமன், அன்னையன்பன் போன்ற நண்பர்களும் அதே வினா எழுப்பினர். அவர்களுக்கு விடையாக வருவதே இந்நூல்.
இதே போன்று இதுவரை ஏறத்தாழ நூறு நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றின் பட்டியலையும் இணைத்துள்ளேன்.
இந்தச் சுரதா எத்தகைய துணிச்சலான புதுமைக் கருத்துகளுக்குச் சொந்தக்காரன் என்பது இந்நூலில் வரும் என் விடைகளைப் படித்தாலே விளங்கும். நான் இறந்து கிடக்கும் நிலையில் நான் எழுதிய பாடல்களையே ஒலிபரப்ப வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். என் முதல் நூலின் தலைப்பே ‘சாவின் முத்தம்’! இப்படிச் சாவைச் சந்திக்கும் துணிவுள்ள கவிஞனாக என்னைத் தவிர, ஒரு ஷேக்ஸ்பியரையோ, ஷெல்லியையோ, காளிதாசனையோ, கபீர்தாசையோ கூற முடியுமா? ‘மங்கலம்’ ‘அமங்கலம்’ என்றெல்லாம் பார்க்காத உண்மையான பகுத்தறிவுப் பாவலன் இந்தச் சுரதா!
எதிர்கால இளைஞர்கள் தங்கள் எண்ணக் கழனியில் எழுச்சிக் கருத்துப் பயிர்கள் செழிக்க இத்தகைய நூல்கள் இலக்கிய உரமாகும் என்பது உறுதி.
இந்நூல் அழகுற அச்சிட்டுத்தந்த ஸ்ரீகோமதி அச்சக உரிமையாளர் திரு. S. சரவணகுமார், செல்வன் மகேஷ்குமார், மெய்ப்புத் திருத்தி உதவிய கவிஞர் நெ.அ. பூபதி, ஓவியர் அமுதோன் ஆகியோர்க்கும் நன்றி.
56–அ, டாக்டர் இலட்சுமண சாமி சாலை
கலைஞர் கருணாநிதி நகர்
சென்னை–600078
தொலைபேசி எண் : 428508
1–8–1991.
அன்புள்ள,
சுரதா
தமிழ் வித்துவான் தாண்டவராயரின்
வினா விடை முதல்
தன்மானக் கவிஞர் சுரதாவின்
வினா விடை வரை
(1820—1991)
1820 — இலக்கண வினா விடை
—வித்துவான் தாண்டவராய முதலியார்1828 — இலக்கணச் சுருக்க வினா விடை
—திருத்தணிகை விசாகப்பெருமாளையர்1846 — தமிழ் இலக்கண நூற் சுருக்க வினா விடை
—ஜி.யு. போப்பையர்1857 — சத்திய சுவிசேஷ சபையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவருக்கும், சிவ சமயத்தைச் சேர்ந்த ஒரு காசிப் பண்டாரத்திற்கும்
நடந்த சம்பாஷணைகள்1865 — இலக்கண வினா விடை
—யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர்1865 — பரிமத்தேசு தூஷணை மறுத்தலாகிய தர்க்கக் கும்மி
—புதுவை அந்தோணி நாதர்1866 — பஞ்சபத மகாவாக்கியம் (வினா–விடை)
—மொழிபெயர்ப்பு: சிதம்பரம் தௌட் சுவமிகள்1868 — யாப்பிலக்கண வினா விடைச் சுருக்கம்
—சைதாபுரம் காசி விசுவநாத முதலியார்1871 — விவாக விதிவிளக்க வினா விடை
—தரங்காபுரம் த. சண்முகக் கவிராயர்1878 — தனலட்சுமிக்கும் தைரிய லட்சுமிக்கும் தர்க்கம்
—ராஜரத்தின முதலி1879 — சைவ சமய விளக்க வினா விடை
—காஞ்சிபுரம் சபாபதி முதலியார்1880 — மகாலட்சுமிக்கும் பார்வதிக்கும் வாக்கு வாதம்
—சீனிவாச ஐயங்கார்1891 — காங்கிரஸ் வினா விடை
—சென்னை மு. வீரராகவாசாரியார்1892 — பதிப்பிலக்கண வினா விடை
—முனுசாமி நாயுடு1894 — புருடார்த்த தீபிகை என்னும் பால சம்வாத வினா விடை
—புதுவை ஏ. வே. இராமாநுஜ நாவலர்1896 — இலக்கணச் சுருக்கம்
—மழவை மகாலிங்க ஐயர்1897 — சர்வ மத சித்தாந்த விளக்க வினா விடை
—ஈ. ஆர். சச்சிதானந்த சுவாமிகள்1900 — வினா விடை மாலை
—பாலகிருஷ்ண முதலியார்1901 — ஸ்ரீ தத்துவ போதம் (வினா விடை)
—ஸ்ரீ சங்கர பகவற்பாதாசாரியர்.
மொழிபெயர்ப்பு: தஞ்சை மாநகரம் குப்புசாமி ராஜீ1903 — வேதாந்தத்தைக் குறித்த வியாசம்
—ஸ்ரீமத் பாம்பன் குமர குருதாச சுவாமிகள்1904 — சோதிட சூத்திர விளக்க வினா விடை
—செஞ்சி மாநகரம் ஏகாம்பர சோதிடர்1907 — மகாபாரத வினா விடை
—கஸ்தூரி ரங்கையர்1908 — கணிகா ஞாநி ஸம்வாதம் (கவிதை நூல்)
—நாகை சக்கரபாணி1911 — ராமாயண வினா விடைக் கும்மி
—பை. அன்னம்மாள்1913 — ஜாதி வித்தியாசத் தடை விடை
—தில்லை வாணன்1918 — வேலூர் தீர்ப்பு
(புதுக்கோட்டை ப்ரம்ஹஸ்ரீ வெங்கட சுப்பா சாரியார், சித்தூர் ஜில்லா ஆற்காடு தாலுகா திமிரியில், பஞ்சாங்கம்
கிருஷ்ணமாசாரியாரோடு செய்த வாக்கு வாதம்.)1914 — ஒழுக்க விளக்கம் வினா விடை
—தாராபுரம் சி. வி. கிருஷ்ண ராஜு1915 — பெண்கள் நீதி விளக்க வினா விடை
—எம். குப்புசாமி நாயகர்1917 — தேவ லோகக் கிரிமினல் கேஸ்
—கோட்டாறு கா. ப. செய்கு தம்பிப் பாவலர்1917 — சச்சிதானந்த சிவம்
—சுப்பிரமணிய சிவா
(ஆசிரியர் மாணவர் உரையாடும் முறையில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது)1919 — பகவத் கீதை வினா விடை
—நித்யாநந்த முதலி, எம். ஏ.,1920 — ராஜ ரீக சீர்திருத்த வினா விடை
—ஏ ரங்கஸ்வாமி ஐயர்1921 — விவசாய வினா விடை
—சென்னை சி. வி. ஆறுமுக முதலி1921 — சித்தர்கள் மகத்துவ வினா விடைக் கும்மி
—கே.வி. வீரராகவலுதாஸ்1921 — சைவ சமய விளக்க வினா விடையும்
ஆசௌச வினா விடையும்
—சபாபதி முதலி அண்டு ஏராம்பய்யர், எஸ்.1921 — காப்பிக்கும் பழையதுக்கும் சண்டை
தேத்தண்ணீர் மத்தியஸ்தம்
—கும்பகோணம் இராமச்சந்திரன்1922 — கிராம முன்சீப் சிறப்புத் தேர்வு வினாவிடை
—செல்லையா பிள்ளை1922 — புத்த மார்க்க வினா விடை
—கே. அயோத்திதாஸ்1923 — பரமார்த்த போத வசன வினா விடை
—கோ.வடிவேலு செட்டி1924 — சிற்றிலக்கண வினா விடை
—சீகாழி எஸ். அருணாசல தேசிகர்1925 — பஞ்ச தசப்பிரகரணம்
—ஸ்ரீ வித்தியாரண்ணிய சுவாமிகள்1929 — எரியாத கட்சி கேள்வி லாவணி
—தஞ்சை வி.எஸ். பாப்புதாஸ்1929 — சீமைத்துணி கதர்த்துணி சண்டை
ஜப்பான் துணி சமாதானம்
—பழனி எம். எஸ். எஸ். வேலுசாமிக் கவிராயர்1929 — அதியுல்லாச சல்லாப லாவணி
—நாகை வெளி காயாரோகணம் பிள்ளை1931 — ஆஸ்திக நாஸ்திக ஸம்வாதம்
—டி. முத்துசாமி1932 — மதாராய்ச்சிக் குறிப்புகள் (கேள்விகள் — விடைகள்)
—எம். கே. கேசவனுண்ணி நாயர் என்னும்
ஸ்வாமி சிவானந்த சரஸ்வதி1933 — சிற்றிலக்கண வினா விடை
—கா.நமச்சிவாய முதலியார்1935 — நாத்திக லாவணியும் சுயமரியாதைத் தாலாட்டும்.
—திண்டுக்கல் எம். ஆர். மத்திரன்1936 — ஜீவ காருண்ய போத வினாவிடை
(நாயகி நாயக சம்பாஷணை)
—சுவாமி அருணகிரி நாதர்1945 — சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்
—மொழி பெயர்ப்பு: சுவாமி விபுலானந்தர்1948 — சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்
—சித்தவைத்திய அ.சி. சுப்பையா (சிங்கப்பூர்)1959 — அது யாருக்குத் தெரியும்?
—சாது மாணிக்க சீவகன்1960 — ஒயில் கும்மிப் பாட்டு
—கும்பகோணம் கே. குருசாமிதாஸ்1961 — சுதந்திரத் தமிழ்நாடு (வினா—விடை)
—சி. பா. ஆதித்தனார்1966 — தடைகளும் விடைகளும்
—முரு.பழ. இரத்தினஞ் செட்டியார்1967 — எம்.ஜி.ஆர்—எம்.ஆர். ராதா
வழக்கு விசாரணை
—தொகுத்தவர் : ஏ.எஸ். மூர்த்தி1967 — கழகம் பிறந்தது ஏன்?
(திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிய கேள்வி—பதில்)
—மா. செங்குட்டுவன்1973 — அன்பு, அருணா தமிழ் நண்பன்
—புலவர் மு. அன்பரசன்,
புலவர் அருணா பொன்னுசாமி1978 — தமிழ்வாணனின் தலைசிறந்த அரசியல் கேள்வி—பதில்கள்
—தமிழ்வாணன்1981 — கேட்டலும் கிளத்தலும்
—பாரதிதாசன்1984 — கேள்விகளால் ஒரு வேள்வி
—வைரமுத்து1984 — பொது அறிவு வினாடி வினா
—பட்டுக்கோட்டை பி.எல். ராஜேந்திரன்1984 — ‘மனைவி’
ஜெமினி கணேசன்
உஷாசுப்பிரமணியின் விமர்சனம்
அடியார் பதில்கள்1985 — பெரியாரியம்
(கொள்கை விளக்க வினா—விடை)
—குடந்தை குகன்1987 — விடைகள் ஆயிரம்
—கி.வா. ஜகந்நாதன்1987 — என்ன? ஏன்? எப்படி?
—நாரா. நாச்சியப்பன்1987 — ஆயுத பேரத்தில் ஊழலா?
ஜெத் மாலியின் கேள்விகளுக்குப் பதில்கள்
—எம்.பி. நாராயணசாமி1988 — கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்
—கண்ண தாசன்1990 — திறந்த புத்தகம்
—மு.மேத்தா1990 — ஐந்திலக்கண வினா விடை
—புலவர் கபிலவாணன்1990 — கேட்டதும் கிடைத்ததும்
—தசாவதானி இரா. கனக சுப்புரத்தினம்1991 — உங்கள் பாக்யராஜின் கேள்வி—பதில்கள்
—கே. பாக்யராஜ்1991 — சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு
ஐயமும் தெளிவும்
—திருச்சி வே. ஆனைமுத்து1991 — வினாக்களும் சுரதாவின் விடைகளும்
—சுரதா
தொகுத்தவர் : உவமைக் கவிஞர் சுரதா
☐ ☐ ☐
என்னைப் பேட்டி கண்டவர்கள்
15–5–1952 சிரஞ்சீவி ஜெகசிற்பியன் 10–3–1958 குமுதம் அருண் 1–3–1967 உலகம் எழில் முதல்வன்,
காஞ்சி அமிழ்தன்19–9–1969 கடற்கரைப் பேட்டி முருகுசுந்தரம்,
அப்துல் ரகுமான்5–2–1970 குமுதம் பால்யூ 11–4–1971 கல்கி பி. வி. கிரி, 25–7–1971 ஆனந்த விகடன் சுந்தரம் ஜனவரி–1973 நான்கு பக்கம் புலவர் உசேன் 15–4–1974 தமிழ் முரசு சே.ப. குட்டியப்பன் அக்டோபர்–1974 மனம் த. பழமலை, எம்.ஏ., 19–3–1978 குங்குமம் பாவை 4–5–1978 தென்னகம் மு.கோ. வசந்தன் 13–5–1978 மாலைமுரசு கருணைதாசன் ஜூலை–1979 புதிய சமுதாயம் பாதாசன் 1–6–1979 தமிழ் நேசன் பழ.எ. அன்பழகன் 3–6–1979 தமிழ் மலர் பழ. எ. அன்பழகன் 21–7–1979 வானம்பாடி க. இளங்கோவன் (சிங்கை) 21–10–1979 குங்குமம் கிரிஜா 7–3–1982 தாய் பரபநாசம் குறள்பித்தன் 1–7–1983 சேலம்மாலைமுரசு மாலை முரசு நிருபர் 10–7–1983 தாய் பாபநாசம் குறள்பித்தன் 27–7–1983 தேவி பாகுபி 12–8–1988 மூக்குத்தி பாரதி சுகுமாரன் 21–8–1988 தாய் பாபநாசம் குறள்பித்தன் செப்டம்பர் 1983 வண்ணமயில் பாரதிசுகுமாரன் மார்ச்சு–1985 வரலாற்றின் குரல் தீ. வீரபாண்டியன் 21–8–1985 தேவி எஸ்.விஜயன்,ஞானபாரதி ஏப்ரல்–27 மே–3–1986 இதயம் பேசுகிறது ம. முருகன் அக்டோபர் 1986 பேசும் படம் எஸ். விஜயன் 23–11–1986 தாய் பு.வி. உமா சந்திரன் 1–2–1987 சினிமா எக்ஸ்பிரஸ் திரைஞானி 14–6–1987 ஆனந்த விகடன் கே. அசோகன் 17–6–1987 ஜூனியர் விகடன் கே. அசோகன் 6–12–1987 தினமணி (மலேசியா) பழ. எ. அன்பழகன் 6–12–1987 தமிழ்ஓசை (மலேசியா) அக்கினி 1–4–1989 சுபமங்களா நிர்மலா சுரேஷ் 20–7–1989 குமுதம் துரை. ராமசந்திரன் 15–10–1989 நாரதர் நாரதர் நிருபர் 19–10–1989 குமுதம் ராம் சந்த் 10–11–1989 குங்குமம் சி.கண்ணன் 23–11–1989 குமுதம் துரை. ராமச்சந்திரன் 31–12–1989 தாய் பாபநாசம் குறள்பித்தன் 4–2–1990 நம்வாழ்வு எம். டேவிட் மைக்கேல் 15–8–1990 சுபமங்களா நாகராஜகுமார் ஏப்ரல்–1990 திரைச்சிற்பி ரஜினி இ. சபீதா ஜோசப் 13–5–1990 ஆனந்த விகடன் எஸ். ராமன் 16–12–1990 ராணி ராணி நிருபர் 16–12–1990 தமிழரசு பி.வி.கிரி 28–4–1991 தாய் அர குணசீலன் 27–5–1991 மங்களம் அனலேந்தி
☐ ☐ ☐
உள்ளடக்கம்
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/001
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/002
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/003
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/004
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/005
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/006
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/007
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/008
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/009
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/010
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/011
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/012
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/013
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/014
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/015
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/016
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/017
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/018
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/019
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/020
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/021
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/022
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/023
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/024
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/025
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/026
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/027
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/028
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/029
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/030
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/031
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/032
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/033
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/034
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/035
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/036
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/037
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/038
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/039
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/040
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/041
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/042
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/043
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/044
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/045
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/046
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/047
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/048
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/049
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/050
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்/051
