வெளிச்சத்தை நோக்கி
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
(நாவல்)
சு. சமுத்திரம்
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை - 600 017
முதற் பதிப்பு :ஆகஸ்ட், 1987
இரண்டாம் பதிப்பு :(திருவரசு) ஆகஸ்ட், 2000
உரிமை :ஆசிரியருக்கு
விலை : ரு. 35-00
Title : VΕLΙCΗΑΤΗΑΙ ΝΟΚΚΙ...
Author : Su. Samuthiram
Subject : Novel
Language. : Tamil
Edition. : Second Edition - August, 2000.
No. of Pages. : 184
Price. : RS. 35-00
Published By : ΤΗΙRUVΑRΑSU
ΡUΤΗΑΚΑ ΝΙLΑΥΑΜ
13, Deenadayalu Street,
Thiyagaraya Nagar,
CΗΕΝΝΑΙ -600 017
Laser Typesetting at: EKALAIVAN PATHIPPAKAM
Chennai - 600 041. : ✆ 4917594
Printed at. : Malar Printers. Chennai - 600 034.
✆ 8224803
பதிப்புரை
நாடறிந்த நல்லதோர் எழுத்தாளர் திரு. க. சமுத்திரம் அவர்கள். இலக்கியத்தைப் பொழுதுபோக்குச் சாதனமாக மலினப்படுத்தி எழுதி வருகின்ற எழுத்தாளர்களின் பாணியிலிருந்து முற்றிலும் விலகி, திட்டவட்டமான, ஆரோக்கியமான குறிக்கோளுடன் எழுதி வருபவர் திரு. சு. சமுத்திரம். அதே சமயம், மலைப்பிரசங்கம் போல், உபதேச நடையில் வாசகர்களை மிரட்டாமல் எப்படி வாழ்ந்தால் நல்லது என்பதை அவர் இதமான குரலில், தோழமை உணர்வுடன் விளக்குகிறார்.
"வெளிச்சத்தை நோக்கி." என்னும் இந்நாவலின் பெயரே திரு. சமுத்திரத்தின் ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது. மனவியலும் சமூகவியலும் பின்னிப் பிணைந்து உருவாகியுள்ள இந்நாவல் டாக்டர். மு.வ. அவர்களின் இலக்கியப் பரம்பரையில் புதிய தடம் பதிக்கிறது. மு.வ. அவர்களின் மேற்கோள் ஒன்று இந்நாவலில் தரப்படுவதும், குணநலன்களுக்கு ஏற்றபடிக் கதாநாயகனுக்கு மெய்யப்பன் என்று பெயர் சூட்டப்படுவதும் கவனிக்கத்தக்கவை.
மெய்யப்பனைப் போலவே எண்ணற்ற இளைஞர்கள் பளிங்கு போன்ற இதயத்துடனும் லட்சிய வேட்கையுடனும் அலுவலகங்களில் பணிபுரியச் சேர்கின்றனர். ஆனால், அலுவலகச் சூழ்நிலையும் சமூகத்தின் சீர்கேடுகளும் அவர்களுடைய லட்சியங்களையெல்லாம் நசுக்கிவிடுகின்றன. ஆகவே பெரும்பான்மையான இளைஞர்கள் காலப்போக்கில் சூழ்நிலையோடு சமரசம் செய்துகொண்டு, செக்கு மாட்டு வாழ்க்கையில் ஆயுளைக் கழித்து விடுகின்றனர்.
'ஆனால் சூழ்நிலை எதிர்ப்பாக இருந்தாலும் எப்போதும் நன்மையே செய்வேன்; தீமைக்கு விலை போகமாட்டேன்' என்று கங்கணம் கட்டிக்கொண்டு போராடுகின்ற சிறுபான்மை லட்சியவாதிகளின் பிரதிநிதியாக மெய்யப்பன் விளங்குகிறான். இந்தப் போராட்டம் அவனது உடலைச் சிதைக்கிறது; பொருளாதாரத்தைச் சேதப்படுத்துகிறது; உள்ளத்தை ரணகளமாக்குகிறது. மெய்யப்பன் மனநோயாளி ஆகிவிடுகிறான். அவனால் தன் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் பிரமைகளையும் வகைப்படுத்தி ஆராய முடியாமல் போய்விடுகிறது.
ஆகவே, மெய்யப்பனைக் குணப்படுத்த, அவனைப்போல் தத்தளிக்கின்ற லட்சியவாதிகளுக்கு வழிகாட்ட, மனநல மருத்துவராக டாக்டர்.ரகுராமன் வருகிறார். அவருடைய அறிவுரைகளின் வடிவில் திரு. சு. சமுத்திரம், வாழ்க்கையில் பிரச்சினைகளைச் சமாளிக்கும் விதம் குறித்துத் தனது கண்ணோட்டத்தைத் தெளிவாக்குகிறார்.
மெய்யப்பனிடம் என்ன குறை? நல்லவன்தான் என்றாலும் அவன் இயங்கிய சமூகம் குறுகியது. அலுவலகத்தில் சிலருக்கும் வெளியில் சத்யாவிற்கும் அவனது கருணை கிடைத்தது. பாலைவனத்தில் விழுந்த மழைத்துளி போல் இது போதாது. அறிவை விசாலமாக்கி, சேவையின் எல்லையை விரிவாக்கி, தனி மனிதன், சமூக மனிதனாக மாறவேண்டும். கார்ல் மார்க்சும் சரி, காந்தியடிகளும் சரி, சமூகச் சிந்தனையை விரிவாக்குவதையே வற்புறுத்தியதைத் திரு. சு. சமுத்திரம் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நாவலில் வருகின்ற சம்பவங்கள். உண்மையில் நடந்தவை என்கிறார் திரு. சு. சமுத்திரம். அதனால்தான் இந்நாவலைப் படிக்கும் போது யதார்த்தமான வாழ்க்கையை அணு அணுவாக அனுபவிப்பது போன்ற உணர்வை நாம் பெறுகிறோம். தமிழ் நாட்டு இளைய தலைமுறையினர் அனைவரிடமும் இருக்கவேண்டிய இந்நூலை வெளியிடும் வாய்ப்பை எங்கள் புத்தக நிலையத்திற்கு அளித்த சு. சமுத்திரம் அவர்களுக்கு நன்றி.
திருவரசு புத்தக நிலையத்தார்
என்னுரை
"வெளிச்சத்தை நோக்கி." என்ற இந்த நாவல், நான் மிகவும் ஒன்றிப்புடன் எழுதிய படைப்பாகும். திரு. வலம்புரிஜான் அவர்களை ஆசிரியராகக் கொண்ட "தாய்" பத்திரிகையில் தொடர்கதை லட்சணங்களோடு எழுதாமல், நாவல் மாதிரியே எழுதப்பட்டது. இதற்காக வலம்புரிஜான் அவர்களுக்கும், இந்த நாவல் வெற்றிபெற உறுதுணையாக இருந்த கீதப்பிரியன் அவர்களுக்கும் இன்றளவும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக உணர்கிறேன்.
நான் டெல்லியில் பணியாற்றியபோது, ஒரு இளைஞனுக்கு நேர்ந்த மனநோயையும், அவனிடம் ஈடுபாடு கொண்ட என்னையும் இணைத்து உள்ளதை உள்ளபடி எழுதிய நாவல். உண்மை நிகழ்வை எழுதியதால் மனநோய் பற்றிய ஆராய்ச்சி நூல்களை படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும், டெல்லி வெலிங்டன் மருத்துவமனையில் அந்த இளைஞனுக்கு சிகிச்சை செய்த மனநோய் நிபுணரும் - மனநோய் மருத்துவரும் விவரித்த விவரங்களை இந்த நாவலில் சேர்த்திருக்கிறேன். இதில் வரும் வசிய சிகிச்சை முறையும் நான் கண்ணாரக் கண்டது.
பொதுவாக, "சிசோபோனியா" (Schizophrenia) என்று கூறப்படும் மன அழுங்கு நோய்க்குரிய அத்தனை வெளிப்பாடுகளும் அந்த இளைஞனுக்கு இருந்தது.இந்த நோயில் சிக்குபவர்களுக்கு தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதோ, தங்களுடைய செயல்பாடுகளோ தெரியாது. ஆனால் கெட்ட வேளையிலும் ஒரு நல்லவேளையாக, இந்த இளைஞனை பிடித்த மனநோய் தீவிர நரம்புத்தளர்ச்சி (Compulsive Neurosis) என்ற வகையைச் சார்ந்தது. இதனால் இவனுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது நன்றாகவே தெரிந்தது. இதனால் ஒருவகையில் மனவேதனையும் அதிகரித்தது என்று சொல்லலாம். ஆனாலும், இது நரம்புத் தளர்ச்சி முற்றிய நிலையில் அமைந்த மனநோய் என்பதால், இந்த இளைஞனுக்கு வசிய சிகிச்சை முறை கைகொடுத்தது.இதுவே முன்னால் குறிப்பிட்ட மன அழுங்கு நோயாக இருந்தால், இந்தச் சிகிச்சை பலன் அளித்திருக்காது.
ஓரிரண்டு இளைஞர்களை, மனநோய் மருத்துவர்களிடம் நான் அழைத்துச் சென்றிருக்கிறேன். மனநோய் மருத்துவர்களோ மணிக் கணக்கில் காத்திருக்கும் இந்த நோயாளிகளிடம் நிமிடக் கணக்கில் பேசிவிட்டு, மாத்திரையை எழுதிக் கொடுத்து விடுகிறார்கள். இந்த மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றியும், இவர்கள், இந்த வகை நோயாளிகளுக்கோ அல்லது உடன் செல்கிறவர்களுக்கோ எடுத்துக் கூறுவதில்லை. இப்படிப்பட்ட மனநோய் வருவதற்குரிய காரண காரியங்கள் பற்றியோ கூடப் போகிறவர்களிடமும் சொல்வதில்லை. மனநோயாளிகளின் எண்ணிக்கைப் பெருக்கமும் அவசர அவசரமாக பணம் பண்ணும் குறிக்கோளுமே பெரும்பாலான மனநல மருத்துவர்களுக்கு லட்சியமாகி, அந்த லட்சியமே மருத்துவ வியாபாரமாகி விட்டது.
ஒருவருக்கு மனநோய் என்பது, உடல் அளவாலும், மனோ ரீதியிலும் ஏற்படலாம். முதலில் உடல் அளவில் ஏற்பட்டிருக்கிறதா என்பதற்கு மூளை சம்பந்தப்பட்ட பாகங்களை "எக்ஸ்ரே" எடுப்பதும், "ஸ்கேன்" செய்வதும் மிகவும் முக்கியமானது. மூளையின் நரம்புகளோ செல்களோ பாதிக்கப்பட்டிருந்தால், மனநோய் மருந்து பயன்படாது. இதைப் பற்றி மனநோய் மருத்துவர்கள் கவலைப் படாததால்தான், பல நோயாளிகள் சாகும் வரைக்கும் அல்லது பல ஆண்டுகளுக்கு மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மாத்திரைகளை விடாப்பிடியாக விழுங்குகிறார்கள். இதனால் நோயின் தாக்குதல் தணிகிறதே தவிர, நோய் தீருவதில்லை. பெளதீக ரீதியில் மூளை எப்படி இருக்கிறது என்பதை முதலில் கண்டறிய வேண்டுமென்ற அடிப்படை உண்மை, நமது மனநல மருத்துவர்களுக்கு தோன்றாமல் இருப்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. வியாபாரம் என்று வந்தால் இப்படித்தான் போலும்.
இந்தவகை மருத்துவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர் டாக்டர். எம். திருநாவுக்கரசு. இவரைப்போல் சில மருத்துவர்கள் இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரியாது. எந்த மனநோயாளியையும் முதலில் அவரது மூளையில் குறைபாடுகள் இருக்கிறதா என்பதை விஞ்ஞானக் கருவிகள் மூலம் கண்டறிந்த பிறகே, இவர் சிகிச்சையை துவக்குகிறார். இதில் வெற்றியும் பெறுகிறார். மனயியல் பற்றி பல மனிதாபிமானக் கட்டுரைகளை இவர் சிறப்பாக எழுதுவதற்குக் காரணம், "இரட்டை சிகிச்சை முறை"யை ஆதாரமாக வைத்திருப்பது தான் காரணம் என்று கருதுகிறேன். இதனால்தான் பதிப்பகத் துறையில் நல்ல நூல்களை மட்டுமே வெளியிடும் நாடறிந்த நிறுவனமான வானதிப் பதிப்பகம், இவரது "குழந்தைகள் மனநலம்" என்ற நூலை மிகச் சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.
இந்த நாவலில் வரும் மனயியல் நுட்பங்கள், விஞ்ஞான ரீதியில் இருக்கவேண்டும் என்பதற்காக புகழ்பெற்ற மொழி பெயர்ப்பாளரான திருமதி. சரஸ்வதி ராம்நாத் அவர்களின் மகனும், பிரபலமான மனநோய் மருத்துவ நிபுணருமான டாக்டர். ரகுராமனுடன் பலதடவை உரையாடி குறிப்புக்களை எடுத்துக் கொண்டேன். நான் பெங்களூரில் பணியாற்றியதும், அவர் அங்குள்ள "நிமான்ஸ்” என்ற புகழ்பெற்ற மனநோய் மருத்துவமனையில் பணியாற்றியதும் வசதியாய்ப் போயிற்று. சலிக்காமல் பல தகவல்களை எனக்குத் தந்துதவினர். இதனால்தான் இந்த நாவலில் வரும் மெய்யப்பனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டருக்கு, அவரது பெயரையே சூட்டினேன்.
இந்த நாவலுக்கு அருமையான பதிப்புரை வழங்கிய திருவரசு புத்தக நிலையத்திற்கு நான் பெரிதும் நன்றியுடையேன். இந்த நாவலை வெளியிட வேண்டுமென்று சொன்ன மறுநாளே இதை அச்சுக்கு எடுத்துக் கொண்டார்கள். பெரியவர் திருநாவுக்கரசு அவர்கள், எடுத்த காரியம் எதிலும் துல்லியமாகவும் துளக்கமாகவும் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறவர். அவரது இந்த சிந்தனையை பிரதிபலிக்கும் வகையில், அவரது புதல்வர்களான அருமைத் தம்பிகள் ராமுவும் சோமுவும் பணியாற்றுவது பதிப்பகத் துறைக்கே ஒரு வரப்பிரசாதமாகும். இந்த வகையில், நான் மட்டுமல்ல. இந்த நாவலும் கொடுத்து வைத்தது என்று கருதுகிறேன். பெரியவர் திருநாவுக்கரசு அவர்களின் இலக்கிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இன்னும் பல படைப்புக்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
இந்த நாவல் தங்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி வாசகப் பெருமக்கள் ஒரு வரி எழுதிப்போட்டால் நன்றியுடையேன்.
சு. சமுத்திரம்
மனையிலும் - சமூகவியலும்
பின்னிப்பிணைந்து...
'வெளிச்சத்தை நோக்கி...” என்னும் இந்நாவலின் பெயரே எழுத்தாளர் சமுத்திரத்தின் ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது. மனவியலும் சமூகவியலும் பின்னிப் பிணைந்து உருவாகி உள்ள இந்நாவல், டாக்டர். மு.வ. அவர்களின் இலக்கியப் பரம்பரையில் புதிய தடம் பதிக்கிறது. மு.வ. அவர்களின் மேற்கோள் ஒன்று இந்த நாவலில் தரப்படுவதும், குணநலன்களுக்கு ஏற்றபடிக் கதாநாயகனுக்கு மெய்யப்பன் என்று பெயர் சூட்டப்படுவதும் கவனிக்கத்தக்கவை.
அறிவை விசாலமாக்கி, சேவையின் எல்லையை விரிவாக்கி, தனி மனிதன், சமூக மனிதனாக மாறவேண்டும். கார்ல் மார்க்சும் சரி, காந்தியடிகளும் சரி, சமூகச் சிந்தனையை விரிவாக்குவதையே வற்புறுத்தியதைத் திரு. சு. சமுத்திரம் சுட்டிக் காட்டியுள்ளார். த மி ழ் நா ட் டு இ ளை ய தலை மு றை யி ன ர் அனைவரிடமும் இருக்கவேண்டிய இந்நூலை வெளியிடும் வாய்ப்பை எங்கள் புத்தக நிலையத்திற்கு அளித்த சு. சமுத்திரம் அவர்களுக்கு நன்றி.
திருவரசு புத்தக நிலையத்தார்,
சென்னை - 600 017.
அத்தியாயங்கள்
- வெளிச்சத்தை நோக்கி/001
- வெளிச்சத்தை நோக்கி/002
- வெளிச்சத்தை நோக்கி/003
- வெளிச்சத்தை நோக்கி/004
- வெளிச்சத்தை நோக்கி/005
- வெளிச்சத்தை நோக்கி/006
- வெளிச்சத்தை நோக்கி/007
- வெளிச்சத்தை நோக்கி/008
- வெளிச்சத்தை நோக்கி/009
- வெளிச்சத்தை நோக்கி/010
- வெளிச்சத்தை நோக்கி/011
- வெளிச்சத்தை நோக்கி/012
- வெளிச்சத்தை நோக்கி/013
- வெளிச்சத்தை நோக்கி/014
- வெளிச்சத்தை நோக்கி/015
- வெளிச்சத்தை நோக்கி/016
- வெளிச்சத்தை நோக்கி/017
- வெளிச்சத்தை நோக்கி/018
- வெளிச்சத்தை நோக்கி/019
- வெளிச்சத்தை நோக்கி/020
- வெளிச்சத்தை நோக்கி/021
- வெளிச்சத்தை நோக்கி/022
- வெளிச்சத்தை நோக்கி/023
