வ.உ.சரித்திரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வ.உ.சிதம்பரம் பிள்ளை சுயசரிதை[தொகு]

தோற்றுவாய்[தொகு]

பூவுல கதனைப் பொருந்தி நின்று

தேவுல கதனிற் சிறந்த வுலகின்

நினைவொடு நிற்கும் *நெல்லை யப்பநீ

கனிவொடு கேட்டவென் கதைக்குறி பிஃதே:

(*-சென்னை “லோகோபகாரி மாஜி பத்திராதிபர் பரலி-சு.நெல்லையப்ப பிள்ளை )

நாட்டுச் சிறப்பு[தொகு]

ஏழ்பெருங் கடல்சூழ் ஏழ்பெருந் தீவினில்

வாழ்பெருந் தீவென மாண்டோர் உரைத்திடத்

திருமகள் என்றும் சித்தம் மகிழ்ந்தவள்

மருமகள் தன்னொடு மருவி உறையும்,

வாய்ந்தநன் மலைகளும் வருமிரு புனல்களும்,

ஆய்ந்தநன்னகர்களும் அழகிய வனங்களும்,

பெரும்பொருள் யாவும் பெட்பன பலவும்,

அரும்பொருள் யாவும் ஆலயம் பலவும்,

தக்க விளையுளும் தாழ்விலாச் செல்வரும்

தக்கார் பலரும் தவத்தினர் பலரும்,

பொறைவருங் காலம் பொறுத்தும் இறைவற்

கிறைதனை எளிதில் இறுக்கும் குடிகளும்,

காவலும் நன்மையுங் கல்வியும் நிறைந்துள

    • நாவலந் தீவெனும் நற்பெருங் கண்டத்துச்

சரதமு மின்பத் தழைக்கச் சுரந்திடும்

      • பரதக ண்டத்துப் பாரிய தேயத்து

{** - ஆசியாக் கண்டம் }

{*** - இந்திய தேசம் }

"https://ta.wikisource.org/w/index.php?title=வ.உ.சரித்திரம்&oldid=478369" இருந்து மீள்விக்கப்பட்டது