1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter- 1 Of Heaven and the Elements
தோற்றம்
A VOCABULARY
CHAPTER I.
|
௧-ம் தொகுதி
|
| Of Heaven and the Elements. |
வானமும் பஞ்சபூதியத்தினுடையவும். |
| The Supreme Being. | பராபரவஸ்து |
| The Creator | சிருஷ்டிகர் |
| The Creation | சிருஷ்டிப்பு |
| A Creature, a Created being | ஒரு சிருஷ்டி, சீவன் |
| A Soul | ஒரு ஆற்றுமா |
| An Animal, a Dumb creature | மிருகம் |
| An Intellectual being., A Human being | நரசீவன், மனுஷன் |
| The Universe | சர்வ லோகம் |
| Heaven | வானம் |
| Purgatory | உத்தரிப்புஸ்தலம் |
| Hell | நரகம் |
| The Firmament | ஆகாச விரிவு |
| The Empyreal heaven | பரமண்டலம் |
| The Ethereal heaven | ஆகாசமண்டலம் |
| Sky | ஆகாசம், நட்சத்திர மண்டலம் |
| The Azure sky | இருள் வானம் |
| The starry sky | சோதி மண்டலம், சோதிச் சக்கரம் |
| The starry heaven | நட்சத்திர வானம் |
| Stars | நட்சத்திரங்கள் |
| Luminaries | வானசோதிகள், வெளிச்சங்கள் |
| A fixed star | உறுதி நட்சத்திரம், நிலையிலுற்ற நட்சத்திரம் |
| A wandering star | நிலையில்லாத நட்சத்திரம் |
| An Errant | ஒரு கிரகம் |
| A shooting star, Fiery meteor | வானத்திலிருந்து தெரித்து விழுகிற நெருப்பு |
| The Balancings | அம்பரத்தில் தொங்கப்பட்டவைகள் |
| A Planet | ஒரு கிரகம் |
| Primary planet | பிரதான கிரகம் |
| secondary planet | இரண்டாவதான கிரகம் |
| The Sun | சூரியன் |
| The Moon | சந்திரன் |
| Mercury | புதன் |
| Venus | வெள்ளி |
| Earth | பூமி |
| Mars | செவ்வாய் |
| Jupiter | வியாழம் |
| Saturn | சனி |
| Satellites or Moons | சிறு கிரகம் |
| A Comet | வால் நட்சத்திரம் |
| A Constellation | நட்சத்திர இராசி |
| The Rotation | பூமியுருளுதல் |
| The Revolution | வட்டமிட்டோடுதல் |
| The Occultation | பதிவு |
| The Declination | தாழ இறங்குதல், உச்சத்தை விட்டிறங்குதல் |
| The equation of time | சூரியவட்டத்தின் கால வித்தியாசம் |
| The Conjunction | இராசிவட்டத்திற் கிரகங் கூடுதல் |
| The Motion | அசைவு, பிறஸ்தலமாகுதல் |
| The Milky Way or Galaxy | பால் வீதி மண்டலம் |
| Light | வெளிச்சம் |
| Darkness | அந்தகாரம் |
| Splendour | சூரியன் காந்தி, ஒளிவு |
| The Orbit | கிரகத்தின் வட்ட வழி |
| The Disk | சூரியப் பிறவை |
| The Rays | சுடர் |
| The sun beams | சூரியகாந்தி |
| New Moon | அமாவாசை |
| The Phases of the Moon | திதி |
| The Horned moon | நிலாபிறை |
| The Crescent or moon in her increase | வளர்பிறை |
| The decrescent or moon in her decrease | தேய்பிறை |
| The half moon | அஷ்டமி |
| Full moon | பவர்ணமி, பூரண சந்திரன் |
| An Eclipse | கிறணம் |
| Eclipse of the sun | சூரியகிறணம் |
| Eclipse of the moon | சந்திரகிறணம் |
| The Duration | கிறணம் பிடித்திருக்கிற பரியந்தம் |
| The Emersion | சந்திராதித்தர்விம்பங்காணுதல் |
| The Immersion | மறையுதல் |
| The Elongation | நீட்சி, கிறகம், ஒன்றுக்கொன்றிருக்கிற தூரம் |
| Total Eclipse | முழுக் கிறாணம் |
| Partial Eclipse | பாரிசக் கிறாணம் |
| Annular Eclipse | வட்ட கிறாணம் |
| Sun shine | வெய்யல் |
| Moon shine | நிலா வெளிச்சம் |
| The quarters of heavens | வானத்தின் திசைகள் |
| East | கிழக்கு, கீழ்த்திசை |
| West | மேற்கு, மேற்றிசை |
| South | தெற்கு, தென்றிசை |
| North | வடக்கு, வடதிசை |
| Eastern, Oriental | கீழ்த்திசையான, கீழ்ப்புறமான |
| East-ward | கிழக்கே |
| Western, Occidental | மேற்றிசையான, மேற்புறமான |
| West-ward | மேற்கே |
| Southern, Austral | தென்றிசையான, தென்புறமான |
| South-ward | தெற்கே |
| Northern, Boreal | வடதிசையான, வடபுறமான |
| North-ward | வடக்கே |
| The Cardinal points | பிறதான திக்கு, கோணங்கள் |
| The Equator | பூச்சக்கரத்தைச் சுத்திலும் வடக்குக்குந் தெற்குக்குமிருக்கிற நடு மையம் |
| The Meridian | மத்தியான எல்லை |
| The Zodiac | இராசியெல்லை |
| A Sign | இராசி |
| THE TWELVE SIGNS OF THE ZODIAC | பன்னிரண்டு இராசி |
| Aries | மேஷம் |
| Taurus | ரிஷபம் |
| Gemini | மிதுனம் |
| Cancer | கற்கடகம் |
| Leo | சிங்கம் |
| Virgo | கன்னி |
| Libra | துலாம் |
| Scorpio | விருட்சிகம் |
| Sagitarus | தனுசு |
| Capricornus | மகரம் |
| Aquarius | கும்பம் |
| Pisces | மீனம் |
| A meteor, a Phoenomenon | வானத்திற்காணப்பட்ட விசேஷித்த அடையாளம் |
| The Hemisphere | பாதிவானம் |
| The Atmosphere or Ambient air | மெகங்கள் மட்டும் பூமியைச் சுற்றியிருக்கிற அம்பரம் |
| The Horizon | அடி வானம் |
| The Tropics | அபனத்தின் இரண்டு எல்லைகள் |
| A Region | ஒரு திக்கு, திசை |
| A Climate | ஒரு திசை |
| Hot Climate | உஷ்ண தேசம் |
| A Wholesome climate | ஆரோக்கியமான தேசம் |
| A Sphere | ஒரு சக்கரம் |
| A Globe | ஒரு உண்டை |
| A Circle | ஒரு வட்டம் |
| A Celestial Globe | வான உண்டை |
| A Terrestial Globe | பூச்சக்கரம் |
| A Degree | பூச்சக்கரத்தில் (௩௱௬௰ பங்கில் ஒரு பங்கு |
| The Latitude | பூச்சக்கரத்தின் தெற்கு வடக்குச்சுற்றளவு |
| The Longitude | பூச்சக்கரத்தின் கிழக்கு மேற்குச் சுற்றளவு |
| The Poles of the world | பூச்சக்கரத்தின் முனைகள் |
| Arctic Pole | வடமுனை |
| Antarctic Pole | தென்முனை |
| The Polar Circle | முனைச் சக்கரம் |
| Zenith | மேலுச்சம் |
| Nadir | கீழுச்சம் |
| Zone | ஒரு சக்கர புறம் |
| The Torrid zone | உஷடண சக்கர புறம் |
| The two temperate zones | இரண்டு சாந்த சக்கர புறங்கள் |
| The two Frigid zones | இரண்டு குளிர் சக்கர புறங்கள் |
| THE ELEMENTS | பஞ்சபூதியம் |
| Water | நீர் |
| Fire | அக்கினி |
| Earth | பூமி |
| Air | ஆவி |
| THE FOUR PARTS OF THE WORLD | பூச்சக்கரத்தின் நாலுபுறமான பங்குகள் |
| Europe | ஐரோப்பா |
| Asia | ஆசியா |
| Africa | ஆப்பிரிக்கா |
| America | அமேரிக்கா |
| The Spring | ஊத்து |
| Hill Spring | சுனை |
| Well Spring | கயம், கிணத்தூற்று |
| The Stream | நீரோட்டம், ஓடை |
| The channel or canal | நீர்க்கால், வாய்க்கால் |
| The mouth or entrance | வாய் |
| The bed of river | ஆற்றுக்கால் |
| A Brook | மடு |
| An abyss, abysm or bottomless pit | பாதாளம், கெடிலம் |
| A Whirl pool | சுழல் தண்ணீர், நீர்ச்சுழி |
| A Bubble | நீர்க்குமிளி |
| An Inundation, Over flowing | வெள்ளம், பெருக்கு |
| A Flood, a Deluge | சலப்பிரளையம் |
| A Dike | வாய்க்கால் |
| A sluice | கலிங்கு, மதவு |
| A Gullet | கலிங்குகால் |
| A Cascade, a waterfall | செங்குத்தான, இடத்திலிருந்து நீர் பாயுதல் |
| A Fountain | ஊற்று |
| A Tank, a pond | குளம், ஏரி |
| A Pool | குட்டை, மடு |
| A Dam | அணை |
| A Floodgate | முகற்றுவாரம், மதவு |
| A River | ஆறு |
| A Rivulet | ஏரி |
| The Sea | கடல் |
| A Rolling sea | அலை துரிதமான கடல் |
| Rough sea | மும்மரமான கடல் |
| Great or turbulous sea | கொந்தளிக்கிற கடல் |
| The Mediterranean sea | பூச்சக்கரத்து; (௩) திசைகளுக்கு நடுசமுத்திரம் |
| The Ocean | நடுசமுத்திரம் |
| Waves, Billows | அலை |
| Tide of flood or flow | ஏற்றம் |
| Tide of Ebb or Ebb | வற்றம் |
| Flux and Reflux | ஏற்றம் வற்றம் |
| A Gulph | குடாவு, கடல்கிளை, பாதாளம் |
| A Bay | குடாக்கடல் |
| The Shoal | கடலின் திட்டு |
| A Lake | தடாகம் |
| A Creek | கடற்கால், சின்னக்குடா |
| Roads | கடல்வழி |
| Offing | கரைகிட்டான சமுத்திரம் |
| A Strait | கணவாய், கடற்கால் |
| A port, Harbour or Haven | குடாக்கடல், கரை, துறை |
| A Sea port Town | கரை, துறைப் பட்டணம் |
| The Shore | கடற்கரை |
| Bank | கரை மேடு |
| Beach | சமுத்திரக் கரை |
| A Mole | குடாக்கடல், அணை |
| A Coast | கரை துறை, கரை துறை தேசம் |
| A Shallow, a Ford | நிலைப்பு, பரவுதண்ணீர் |
| The Surfs | மூன்றலை |
| A Wharf or Quay | சரக்கு ஏற்றவும் இறக்கவுமான கரை மேடு |
| The Brink | ஆத்துக்கரை, ஏரிக்கரை |
| A Continent | தீவில்லாத பூமி |
| An Inland Country | நாடு, நாட்டுப்புறம் |
| A Firm or Mainland | தீவில்லாத தேசப்புறம் |
| A mediterraneous country | நடுதேசப்புறம் |
| An Isle | தீவு |
| An Island | தீவான தேசம் |
| A peninsula | ஒரு பங்கு குறைய மற்றதெல்லாந் தண்ணீராற் சூழ்ந்திருக்கப்பட்டபூமி |
| Isthmus | மேற்சொன்ன பங்கின் பெயர் |
| A promontory | கடல் முனை |
| A Cape, a Headland | கடல் முனை தேசம் |
| A Cluster of Islands | ஒன்றுக்கொன்றுகிட்டான தீவுகள் |
| A Rock | கற்பாறை, கல்மலை |
| A Hill | ஒரு மலை |
| A Ridge of Hills | ஒரு வரிசையாயிருக்கிற அநேக மலைகள் |
| A Track of Hills | ஒன்றோடொன்றாயிருக்கிற மலைகளின் வரிசை |
| A Hillock | குன்று, கல் மேடு |
| A Mount, Mountain | பறுவதம், மலை |
| A chain or Range of mountains | ஒன்றின் பின்னொன்றாயிருக்கிற மலைகளின் வரிசை |
| A Tapering Mountain | சிகரங்கூரான மலை |
| A Topping Mountain | மகாவுயரமான பறுவதம் |
| A Land | ஒரு நாடு, ஒரு தேசம் |
| A Track of Land | சில தூரம் போகிற நாடு |
| A Moor Land | சதுப்பு நிலமான நாடு |
| A Marsh, Fen, Bog | சதுப்பு நிலம் |
| A Quagmire | அதிர்த்தலுள்ள சதுப்பு நிலம் |
| A Pit | ஒரு பள்ளம், குழி |
| A Salt pit or pan | உப்பளம் |
| A Slough | பள்ளச் சேறு, உளைக் குட்டை |
| Mud | சேறு |
| Slime, Mire | உளை |
| The Clay | களிமண் |
| A Cause Way | மேடான வழி, மேடாக்கப்பட்ட வழி |
| A Cliff | செங்குத்தான கல்மலை |
| A Precipice | செங்குத்தான கல் மலை |
| The Peak, Ridge or Summit | சிகரம், குவடு |
| The foot of Mountain | மலையடி |
| A Cloud | மேகம் |
| A Rainy cloud | மப்பு |
| Rain | மழை |
| A Shower | மழையிறக்கம், கன மழை |
| A Drizzling Rain | தூறல் |
| A Sluicy rain, a storm of rain | பலத்த மழை |
| A Peal of rain, a Heavy rain | கன மழை |
| A Storm, Tempest | பிசல், பெருங்காற்று |
| A Stress of weather | பிசல் |
| A Hurricane | பெருங்காற்று |
| Monsoon | மழைக்காலம், திட்டகாலத்துக் காற்று மழை |
| Snow | உறைந்த மழை |
| Hail, Hailstone | ஆலங்கட்டிமழை |
| The Frost | மகாக் குளிர், நீருரைகிற குளிர் |
| Hoary Frost | ஆலங்கட்டி |
| Fog or Mist | மூடுபனி |
| Ice | உறைந்த நீர் |
| Dew | பனி |
| The Damp, Mildew | கருக்சாயிருக்கும் பனி |
| A Blast | பயிர் தீச்சுங்காற்று |
| The Rime | உறைந்த பனி |
| A Vapour | நீராவி |
| An Exhalation | ஆவிப் பறியுதல் |
| A Drop | ஒரு துளி |
| A Flash of water | தண்ணீர் தெறித்தல் |
| Thunder | குமுறல் |
| Thunder-bolt | இடி |
| Thunder Clap | இடி முழக்கம் |
| The Peals of Thunder | இடி முழக்கம் |
| An Eruption | வெடிப்பரியுதல் |
| An Explosion | நெருப்பெரியுதல் |
| Lightning | மின்னல் |
| A Flash of Lightning | மின்னல் கொடி |
| The Rain-bow | பச்சைவில்லு, இந்திர தனுசு |
| Wind | காத்து |
| The Trade wind | திட்டகாலத்தின் கடற்காத்து |
| The Whirl vind | சுழற்காத்து |
| A Gentle wind | குளுங்காத்து |
| A Breeze | கடற்காத்து |
| A Gale of wind | வீசியடிக்கிற காத்து |
| A Puff of wind | காத்து வீச்சு |
| A Flaw of wind | காத்து மோதுதல் |
| A Zephyr | மேற்காத்து |
| The East-wind | கீழ்க்காத்து |
| The West-wind | மேற்காத்து |
| The South-wind | தென்காத்து, தென்றல் |
| The North-wind | வடகாத்து, வாடை |
| A Flame, Blaze | சுவாலை |
| Heat | அனல், காங்கை |
| Warmth | காங்கை |
| A Spark of fire | தீப்பொறி |
| A Smoke | புகைச்சல் |
| A Fuming trail | புகைக்கால் |
| Soot | ஒட்டடை |
| Wood | மரம் |
| A Log or Billet of wood | ஒரு துண்டு கட்டை |
| A Faggott | விறகு கட்டு |
| Brushwood, Bavin | செத்தை, சரகு |
| Chips, Splinter | சிராய் |
| Coals, Charcoal | கரி |
| Pit Coal | கற்கரி |
| Sea Coal | கடற்கரி |
| Small Coal | பொடிக் கரி |
| Live Coal | தணல் |
| A Firebrand | கொள்ளி |
| Beats, Turf | புல்லு, செத்தை |
| Cinders | தணற் பூர்ந்த சாம்பல் |
| Ashes | சாம்பல் |
| Embers | தணற் சாம்பல் |
| Fuel, Firewood | விறகு |
| Conflagration | அக்கினிப் பிரளையம் |