பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
x

காரணமாகப் பெற்ற அறிவு மருத்துவத்துறையில் எங்ஙனம் பயன்படுகிறது என்பதையும், அணுவாற்றலால் சில கொடிய நோய்கள் எவ்வாறு சிகிச்சை செய்யப்பெறுகின்றன என்பதையும் பன்னிரண்டாவது அத்தியாயம் நன்கு விளக்குகின்றது. பதின்மூன்றாவது அத்தியாயத்தில் அணுவாற்றல் உழவுத்தொழிலில் பயன்படும் விந்தையும் அணுவாற்றலின் துணையால் உணவு உற்பத்திப் பெருக்கத்தை விளைவிக்கக் கூடிய ஆராய்ச்சி முறைகளும், தாவரங்களுக்கு நேரிடும் நோய்கள், பீடைகள் முதலியவற்றைப் போக்குவதற்கு அணுவாற்றல் துணையாகவுள்ளமையும் ஓரளவு விளக்கமாகக் கூறப்பெற்றுள்ளன. பதினான்காவது அத்தியாயம் அணுவாற்றல் தொழில் துறையை எவ்வெவ்வாறு வளமாக்கியிருக்கிறது என்பதை விளக்கமாக எடுத்தியம்புகின்றது. எதிர்காலத்தில் அணுவாற்றல் எவ்வெவ்வாறெல்லாம் பயன்படக்கூடும் என்பதைப் பதினைந்தாவது அத்தியாயம் ’சோதிடம்’ கூறுகின்றது. உலக ஒற்றுமைக்கும் மானிட வாழ்க்கைக்கும் அணுதான் ’மங்கல வாழ்த்தாக’ அமைகிறது என்பதைப் பதினாறாவது அத்தியாயம் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு இந்நூல் அணுவாற்றல் ஆக்கத்துறைகளில் பயன்படும் முறைகளை ஓரளவு தெளிவாகப் புலப்படுத்துகின்றது.

புத்தகத்தின் இறுதியில் இப்புத்தகம் எழுதப் பயன்பெற்ற நூல்களின் பெயர்களும், இப்புத்தகத்திலுள்ள பொருள் விளக்கத்திற்குத் துணையாக இருக்கும் என்று கருதிய கலைச் சொற்களின் விளக்கங்களும், இப்புத்தகத்தில் மேற்கொள்ளப்பெற்றுள்ள எல்லாக் கலைச் சொற்களும், பொருட்குறிப்பு அகராதியும் பின்னிணைப்புக்களாகச் சேர்க்கப்பெற்றுள்ளன. கலைச் சொற்களின் விளக்கம் அறிவியல் அறிவு வாய்க்கப்பெறாதவர்களுக்குப் பொருள் விளக்கம் பெறுவதற்கும், கலைச் சொற்கள் ஆங்கிலத்தில் அணுவைப் பற்றிப் படிக்கும் கருத்துக்களைத் தமிழில் அமைத்துக் கோடலுக்கும், பொருட் குறிப்பு அகராதி நூலினைப் படிப்போர் பல செய்திகளை அவரவர்கள் விரும்புகிறவண்ணம் தொகுத்