பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

xii

இப்புத்தகத்தை எழுதப் புகுவதற்கு முன்பு பல ஆங்கில அறிவியல் நூல்களைப் படிக்கவேண்டியிருந்தது. சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு சிலவற்றைப் பெற்றேன். ஆனால், அண்மையில் வெளியான நூல்களையும் பருவ வெளியீடுகளையும் எனக்கு உதவியவர்கள் அமெரிக்க செய்தித் துறையைச் சார்ந்த நூலகத்தார். சென்னையில் மவுண்ட்ரோட்டில் அமைந்துள்ள நூலகத்திற்கு யான் நேரில் சென்ற பொழுது இன்முகத்துடன் வரவேற்று யான் வேண்டிய புத்தகங்களைத் தந்தார்கள், அஞ்சல்வழி நூல்களை அனுப்பிய பொழுதெல்லாம். அடையாளம் வைத்து படிக்க வேண்டி பகுதிகளைச் சுட்டினார்கள். அவர்கள் உதவியின் றேல் நூலின் பொருளமைப்பு இவ்வளவு விரிவாக அமைந்திராது. அவர்கட்கு என் உளமார்ந்த நன்றி என்றும் உரியது.

இப்புத்தகம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுது பிரதி சரியாக அமைவதற்குப் பலவிதமான யோசனைகளைக் கூறியவர் என் கெழுதகை நண்பர் உயர் திரு. சா. கணேசன் அவர்கள். புத்தகம் அச்சுவடிவம் பெறுவதற்கும் அவர்களே முதற்காரணமாக இருந்தவர்கள். அவருடைய துணையால் தான் என் கல்லூரி வாழ்வு தொடங்கியது; அவர் துணையால் தான் அது சிறந்தது. பல்லாண்டுகளாகக் கூம்பி பிருந்த என் அறிவுத்துறைவாழ்வும் மலர்ந்தது. தொடர் நிலை விளைவு தொடங்குவதற்கு ஒரு பொது இயல்மின்னி உறு துணையாக இருக்குமாப்போல, அவர் தொடங்கிவைத்த ஒரு வெளியீடு ஏனைய என் நூல்கள் யாவும் அச்சு வடிவம் பெற்று உலாப்போதற்குக் காரணமாக அமைந்தது. இங்ஙனம் பல்லாற் சனும் எனக்கு உதவியும், என் தீயூழால் என் சொந்த வாழ்வில் நேரிடும் பல இடையூறுகளைக் களைந்தும் எனக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் இப்பெரியாருக்கு என் மன மொழி மெய்களால் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

குறைந்த காலத்தில் மாணாக்கர் களின் பொருளுணர்வுக்கும், தாய்மொழி வளர்ச்சிக்கும் முக்கியாமாக வேண்டப் பெறுவது ஆங்கிலம் போன்ற மேனாட்டு மொழிகளிலுள்ள