பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

xiii

அருங்கலைகளைத் தாய்மொழியில் வடித்துத் தரவேண்டும் என்பது. இந்தக் கனவை காந்தியடிகள் போன்ற பல பெரி யார்கள் நீண்ட நாட்களாகக் கண்டுவருகின்றனர். தமிழைப் பொருத்தமட்டிலும் இந்தக் கனவை நனவாக்க முயல்கின்ற வர்களுள் தலைசிறந்தவர்கள் மூவர். ஒருவர் ராஜாஜி ; முதன் முதல் மாகாண சுய ஆட்சியில் காங்கிரஸ் மகாசபை பதவி யேற்று ராஜாஜி தலைமையமைச்சராகப் பணியாற்றிய பொழுது உயர்நிலைப்பள்ளிகளில் தாய்மொழி வாயிலாகக் கல்விபயிற்றும் திட்டத்தை நிறைவேற்றிவைத்தார்கள். அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டு வருங்கால் நாடு விடுதலைபெற்று திரு. தி. சு. அவினுசிலிங்கம் கல்வியமைச்சராகப் பணியாற்றிய பொழுது தமிழ்மொழிக்கு முதலிடம் அளித்தும், இன்னும் பல்லாற்ருனும் அதனைச் சிறப்பித்தார்கள். திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் கல்வியமைச்சராக இருந்துவரும் நாள் தொட்டு கல்லூரிகளிலும் தாய்மொழி மூலம் கல்வி பயிற்றப் பெறல் வேண்டும் என்று முயன்றுவருகின்றார்கள். அவர்கள் காலத்தில்தான் நம் மாநிலத்தில் தமிழன்னே அரியாசனம் ஏறும் வாய்ப்புப் பெற்றுப் பெருமிதமாகத் திருவோலக்கம் கொண்டுள்ளாள்; சட்டசபையிலும் அரசினர் அலுவகங் களிலும் உலாப் போகின்ருள். தமிழ் வளர்ச்சியிலும் கல்விப் பணியிலும் உண்மையான ஊக்கம் காட்டிவரும் அப்பெரியாரிடம் இந்நூலுக்கு முன்னுரை மூலம் ஆசி பெறவேண்டும் என்பது என் நீண்டநாள் அவா. அந்த அவா நிறை வேறில்லை என் முயற்சி மேலும் மேலும் வளரும் என்பது என் நம்பிக்கை. இந்த அவாவை அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு. T. M. நாராயணசாமிப்பிள்ளை அவர்கள் இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு வந்தபொழுது தெரிவித்தேன். அவர்கள் மிக அன்புடனும் முகமலர்ச்சி யுடனும் ஒப்புதல் தெரிவித்து முன்னுரை வழங்கியும் ஆசி கூறியுள்ளார்கள். அப்பெரியாருக்கு என் உளங்கனிந்த நன்றி.

தமிழ்ப் பணியே தன் பிறவிப் பணியாகக்கொண்ட பெரியார் திரு. தி. சு. அவினுசிலிங்கம் அவர்கள்; தமிழ்