பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

அணுவின் ஆக்கம்


னின் ஆற்றலைப் பெரிதாக மதிக்கின்றாள். இலக்குவன்-அணு; மேகநாதன்-மேருமலை-என்றும் ஒப்பிடுகிறாள், பாவம் ! அணுவின் ஆற்றலே அறியாத அபலை மண்டோதரி. கம்ப நாடன் காலத்தில் அணுவினைப்பற்றி மக்கள் ஓரளவு அறிந்து தான் இருந்தனர். என்றாலும், இன்று அதன் அற்புத ஆற்றலை மக்கள் அறிந்திருக்கும் அளவுக்கு அன்று மக்கள் அறியவில்லை. அதை அறிந்துகொள்ளும் அளவுக்கு அறிவியல் அக்காலத்தில் வளர்ச்சி பெறவுமில்லை.

அணுவின் ஆற்றல் : ஹிரோஷீமா, நாகஸாகி என்ற இரண்டு ஜப்பான் நகர்களிலும் வீழ்த்தப்பெற்ற அணுகுண்டின் திருவிளையாடலுக்குப் பிறகு மக்கள் அணுவின் அளப்பரிய ஆற்றலை ஒருவாறு அறிந்தனர். இன்று அணுவின் ஆற்றலைக் கண்டு உலகமே நடுநடுங்குகிறது. இரஷியாவும் அமெரிக்காவும் மாறிமாறி அணுகுண்டுச் சோதனைகளை நடத்தி வருகின்றன. மனிதனுடைய ஆணவமும் அகங்காரமும் இவ்வுலகை என்னென்ன பாடுபடுத்துமோ என்று அருளுள்ளம் படைத்த அறிஞர்கள் நெஞ்சம் கவல்கின்றனர். ஐக்கிய நாட்டு மக்கள்சபை அணுவின் ஆற்றலை மானிட நலனுக்குப் பயன்படுத்த வேண்டுமென்று அடிக்கடி வற்புறுத்தி வருகின்றது. அமெரிக்க நாட்டு அணுவாற்றல் குழுவும் அதுபோன்ற பிறநாடுகளில் உள்ள கழகங்களும் அணுவாற்றலை எந்தெந்த வகைகளிலெல்லாம் மக்கள் நலனுக்குப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ந்துவருகின்றன. ஆண்டுதோறும் கோடிக் கணக்கான டாலர் இதற்காகச் செலவிடப்பெறுகின்றது. ஆயிரக்கணக்கான அறிவியலறிஞர்கள் இத்துறையில் தங்கள் முழு நேரத்தையும் செலவழித்து ஆராய்ந்துவருகின்றனர்.

அறிவியல் மேதை ஐன்ஸ்டைன்[1] தந்துள்ள மந்திரத்தால் அறிவியலறிஞர்கள் அணுவின் இரகசியத்தை அறிந்தனர். அம்மையப்பர் தன்மையில் உள்ள அணுவின் அற்புத அமைப்பைக் கண்டு இறும்பூது எய்துகின்றனர். ‘சடமே சக்தி’ என்று அம்மந்திரம் கூறுகின்றது; பொருண்மையே[2] ஆற்றலாக[3] மாறுகின்றது என்பது ஐன்ஸ்டைன்


  1. ஐன்ஸ்டைன் - Einstein.
  2. பொருண்மை - mass.
  3. ஆற்றல் - energy.