பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4

அணுவின் ஆக்கம்

செய்து 2500 டன் நிலக்கரியை எரித்தால் கிடைக்கும் அளவு சூடு உண்டாகும் என்று கணக்கிட்டுக் கூறுகின்றனர் அறிவியலறிஞர்கள். குறளாய் இருந்த வாமனன் நெடுமாலாய் வளர்ந்து காட்டிப் பேராற்றலை வெளிப்படுத்தியதுபோல் அணுவும் சிதைந்து தன் அற்புத ஆற்றலை வெளிப்படுத்துகிறது. சிவபெருமான் நெற்றிக் கண்ணினின்றும் வெளிப்படும் சுடர்களையொத்த முச்சுடர்களை வீசி நிற்கின்றது. அதனால் பத்துக்கோடி சுழியுள்ள (டிக்ரி) சூட்டினையும் வெளிப்படுத்துகிறது. கதிரவனின் மேற்பரப்பிலுள்ள சூடுகூட சுமார் 6000°C தான். ஆனால், அணுவின் அகட்டில் பொருளனைத்தினையும் உருக்கி ஆவியாக்கவல்ல பெருஞ்சூடு அடங்கியிருக்கிறது. ஒளியோ கோடானுகோடி சூரிய ஒளி போன்றது. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீழ்ந்தபொழுது அந்நகர் சூரியன் வயிறாக மாறியது; நூறு கோடி சூரியர்கள் திரண்டு ஒருங்கே வந்தாற்போன்ற பேரொளி தோன்றியது. இவற்றைத் தவிர, நினiக்கவும் முடியாத நெருக்கடி-காற்றின் அமுக்கம்-இறுக்கம்-உலகமே தலைமீது விழுவதுபோன்ற காற்றின் மோதல்-ஆகியவை ஒன்று சேர்ந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்தது. எம்மருங்கும் வீசிய மின்வீச்சால் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். அணுகுண்டு விளைவித்த சேதத்தில் உருத்திர தாண்டவத்தைத்தான் பார்க்கின்றோம்; ஊழிக்காலத்திறுதியில் சிவபெருமான் ஆடும் ‘கொடு கொட்டி’க் கூத்தைத் தான் காண்கின்றோம்.

அணுச்சிதைவில் எழும் சூடு வேதியல்மாற்றத்தில்5 வெப்பம் வெளியாகிறது. எடுத்துக்காட்டாக கரி எரியும் பொழுது கரியும் காற்றிலுள்ள உயிரியமும்6 சேர்ந்து கரியமில வாயுவாக மாறுங்கால் சூடு வெளிப்படுவதைக் காணலாம். கரியில் நம் கண்ணுக்கும் பிற பொறிகளுக்கும் தெரியாமல் அடங்கிக்கிடந்த சூடு வேதியல் மாற்றத்தின்பொழுது வெளிப்படுகின்றது. கரியிலுள்ள அணுத்திரளைகள்7 அணு


5 வேதியியல் மாற்றம் - chemical change. 6 உயிரியம் - oxygen. 7 அணுத்திரளை - molecule


5 வேதியியல் மாற்றம் - chemical change. 6 உயிரியம் - oxygen. 7 அணுத்திரளை - molecule