பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அணுவின் ஆக்கம்


 கொத்துக்கள், அணுத்திரளைகள் என்று வழங்கப் பெறுகின்றன. இந்த அனுத்திரளைகளைக் குறிப்பது எப்படி ? சேர்க்கைப் பொருள்களில் கலந்துள்ள தனிமங்களின் குறியீட்டாலேயே இவற்றைக் குறியிடுதல் வேண்டும். எடுத்துக்காட்டாக, சோற்றுப்பு எவ்வாறு குறிக்கப்பெறுகிறது என்பதைக் காண்போம். சோற்றுப்பு என்பது சோடியமும் குளோரினும்31 சம அளவில் வேதியல் முறையில் கலந்த தொரு பொருள். சோடியத்தின் குறியீடு Na என்பது; குளோரினின் குறியீடு Cl என்பது. இவை இரண்டினையும் சேர்த்து Nacl என்று எழுதினால் அது சோற்றுப்பின் அறிகுறி யாகும். இந்தச் சேர்க்கைப் பொருள் சமமாக அன்றிப் பல விதங்களில் சேர்ந்திருக்குமானல் அவற்றைக் குறிப்பது எங்ஙனம் ? அப்பொழுது பொருள்கள் சேர்ந்திருக்கும் விகிதத்தினையும் சேர்த்துக் குறியிடல் வேண்டும். அங்ஙனம் குறியிடுங்கால் அந்த எழுத்தினை அடுத்துக் கீழே 1, 2 என்ற எண் குறியீட்டினைக் குறிப்பது வழக்கம். நீர் என்பது நீரிய அணு (H) இரண்டு, உயிரிய அணு (0) ஒன்று ஆகியவை சேர்ந்ததொரு பொருள். நீரின் குறியீடு H20 என்பது. தனிக்குறிகள் அணுவின் குறியீடுகள். கொத்துக் குறிகள் அணுத்திரளையின் குறியீடுகள். கரி, அஃதாவது கார்பன் C ; இரும்பு Fe ; இவை உயிரியத்துடன் கலப்பதனை CO, CO2, FeO, Fe203, Fe304, என்று வெவ்வேறாக எழுதிக் காட்டுவர். இங்ஙனமே, பொட்டாசியம் (K), குளோரின் (cl), உயிரியம் (0) சேர்ந்து பொட்டாசியம் குளோரேட்32 (KClo3) என்ற பொருளாகிறது. நீரியம் (H), கந்தகம் (S) உயிரியம் (0) சேர்ந்து கந்தக அமிலம்33 (H2SO4) ஆகிறது. இவ்வாறு பொருள்களை எழுதுவது அவ்வவற்றின் வாய்பாடு எனப்படும் ; அவை அணுத்திரளை வாய்பாடாகும்."


இன்னொரு உண்மை : 'பொருள்கள் யாவும் அணுவால் ஆகியவை; அணு மின்சாரத்தால் ஆகியது. எனவே, உலகி


31குளோரின் -chlorine. 32 பொட்டாசியம் குளோரேட்-potassium chlorate.33 கந்தகஅமிலம் -sulphuric acid34அனுதிரளை வாய்பாடு- molecular formula.