பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அணுவின் அமைப்பு
25


படத்தில் (படம்-3) யுரேனிய அணு காட்டப் பெற்றுள்ளது. யுரேனியம்-235 என்பதன் பொருள் என்ன? யுரேனியத்தின் அணு அமைப்பில் 92 நேர் இயல் மின்னிகளும் 143 பொது இயல் மின்னிகளும் கொண்ட உட்கரு உள்ளது. அதைச் சுற்றி ஏழு வெவ்வேறு வட்டப் பாதைகளில் உட்கருவில் உள்ள நேர் இயல் மின்னிகளின் எண்ணிக்கைக்குச் சமமான

படம் 3: யு-235ன் அணுவைச் சித்திரிக்கின்றது. இதில் 92 நேர் இயல் மின்னிகளும் 143 பொது இயல் மின்னிகளும் கொண்ட ஒர் உட்கரு உள்ளது. இதைச் சுத்தி ஏழு வெவ்வேறு அயனப் பாதைகளில் உட்கருவிலுள்ள நேர் இயல் மின்னிகளின் எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கையுள்ள எதிர் மின்னிகள் சுழன்று வருகின்றன.

எண்ணிக்கையுள்ள (92) எதிர் மின்னிகள் சுழன்று வருகின்றன. இந்த யுரேனியத்தின் அணு-எடை 235. நேர்இயல் மின்னிகளின் எடை 92; பொது இயல் மின்னிகளின் எடை 143. இவற்றின் கூட்டுத் தொகை 285; இதுதான் அணு-எடை. இதுபற்றிய விவரங்களைப் பின்னர்க் காண்போம்.