பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அன்பு வெள்ளம்


விலகுவோமானால் - விலகிச் சென்றோமானால் பிறகு இயேசுவின் திருப்பெயரைச் சொல்லுவதால் நமக்கு எவ்வகை மதிப்பும் கிடையாது. அன்பு நெறியில் நடந்திடத் தக்கவரானால் மட்டும் நாம், நமது ஆண்டவராகிய இயேசுவின் திருப்பெயரைக் கூறலாம்.

அன்பு நெறியை விட்டுச் சென்றால், நமது கடவுளுடன் நமக்கு வாய்த்துள்ள தோழமை - நெருக்கம் தடைப்படும்; நமது பேரன்பு - பற்றுறுதி தளரும்; தூய திருமறை நம் நெஞ்சத்திற்கு ஏறத்தாழ மூடப்பட்டதாகிவிடும்.

அன்பு என்பது உலகிலேயே எளிதான் ஒன்று.

அன்பு என்பது கடவுளின் திருவருள் வெளிப்பாடு என்பது நமக்கு உணர்த்திடப்பட்டுள்ளது.

இயேசுவில் புதிதாகத் தோற்றுவித்த குடும்பத்தின் புதிய திட்டம் என்பது என்னவெனில் 'நாம் நம்மில் ஒருவரை மற்றொருவர் அன்புடன் விரும்புகிறோம் - இயேசு ஆண்டவர் நம்மை அன்புடன் விரும்பியது போல' என்பதுதான்.

நாம் நோய்வாய்பட்டு, அந் நோயிலிருந்து குணமாகவில்லை என்றால், அதற்கான விடை என்ன என்பதைவிட நாம் அன்பு நெறியில் நடக்கிறோமா? என்பதுதான்் நம் வினாவாக இருத்தல் வேண்டும்.

பெரும்பாலான மக்கள், நோய்வாய்ப்பட்ட பின்பு தன்னலமிக்கவர் ஆகின்றனர். இந்தக் கருத்து அனைவருக்கும் பொருந்தாது. ஆனால் பலருக்கும் இது பொருந்தும். நோய்வாய்பட்டவரை அவர்தம் குடும்பத்தினர் அனைவருமே அவர் பக்கத்திலிருந்து கவனித்து வருகிறார்கள். வேண்டிய பணிவிடைகள் செய்கிறார்கள். இருந்தும் அவர்கள் தன்னலத்தாலேயே அன்பின் பெரு வெளியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அந்த அன்பின் பெரு வெளியில் இருந்து சரியான விடை - பயன், வேண்டுதல் மூலம் அவர்களுக்குக் கிடைக்கிறது.

நாம் நோய்வாய்ப்பட்ட பொழுது நமக்காக யாரேனும் ஒருவர் வேண்டுவதால் நம்மைக் குணப்படுத்துகிறார் என்றால் அதனைக் கருத்தில் கொண்டு நாம் தொடர்ந்து அன்பு ந்ெறியில் நடந்துவரல் வேண்டும். இல்லையென்றால், நமக்காக வேறு எவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/20&oldid=1219728" இலிருந்து மீள்விக்கப்பட்டது