பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

27


என்பதில் ஒருவர் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று மனைவியருடன் வாழும் இடம் என்றே பொருள்படும். அத்தகு வாழும் இடத்தைக் கூடாரத்தை வீடு என்று வழங்குவதால் அது பொருத்தம் இல்லை என்று கருதி, 'இல்லம்' என்று சிறந்த பொருளைக் கொண்டதாக மொழி பெயர்க்கப் பெற்றது. புதிய ஏற்பாட்டில் கூட, கிரேக்கத்திலிருந்த வீடு எனும் பொருள்படும் சொல்லினை மாற்றி (Home) 'இல்லம்’ என்றே மொழி பெயர்க்கப் பெற்றுள்ளது.

கிறித்துவ வாழ்வியலின்படி 'இல்லம்' என்றால் ஒருவன் ஒருவளோடு நிலைபேறு இறைவனின் இயற்கைப் பண்பினைப் பெற்றுக் கொண்டவராய், இன்புற இணக்கமாக வாழும் இடம் என்றே பொருள் கொள்ளப்படுகிறது.

கணவன் மனைவியாக வாழும் ஆணும் பெண்ணும் தம் வாழ்வில், நிலை பேறான தெய்வப் பேற்றைப் பெற்று வாழ்வார் ஆவார்! அப்படி வாழும் ஆணோ, பெண்ணோ திருமண முறிவை (Divorce) ஒருபோதும் விரும்பார், கேளார், ஏலார்!

அதுபோல நிலைபேறு வாழ்க்கை பெற்ற கணவன் மனைவியானவர் அன்பில் தொடர்ந்து தங்கள் வாழ்க்கை நெறியில் நடப்பவராக இருப்பாரே அன்றி, இருவரிடையே மனமுறிவு ஏற்பட்டு அதனுள் திருமண முறிவு கேட்டு அறமன்றங்களுக்குச் சென்றிடும் எவரையும் நாம் அமெரிக்கா கனடா போன்ற நாடுகளிலே கூட கண்டிட இயலாது.

உண்மையில் இஃது ஒரு தடுமாற்றம் அல்லவா? திருமணத்திற்கோ திருமணத்தின் நிறைவேற்றமான இல்லற வாழ்விற்கோ ஒரு தீர்வு உண்டு என்பது ஒரு கண்கூடாகத் தெரியவில்லையா?

தன்னலம் என்பது பிரிவினை உண்டாக்குவது. அன்பு என்பது ஒன்று சேர வைப்பது.

புதிய அன்பின் மெய்ம்மையை உலகுக்கு இயேசு அறிமுகம் செய்தார் கொணர்ந்தார்; அதனை அவர்தம் வாழ்க்கையின் மூலம் செயல்படுத்தினார். அதுவும் புதிய திருச்சபை தோன்றிய போதே தோற்றுவிக்கப் பெற்றது. அந்த அன்பின் வெளிப்பாடுதான்் ஒவ்வோர் இல்லத்திலும் - ஒவ்வொருவருவர் இல்வாழ்க்கையிலும் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க உதவும் பெரும் உத்தியாகும்; உதவும் கருவியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/31&oldid=1219175" இலிருந்து மீள்விக்கப்பட்டது