பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அன்பு வெள்ளம்


மீண்டும் பிறப்பெடுக்கப் பெற்ற மாந்தருள் விளங்கும் ஆவி - அன்பின் கனியாகும்.

எதற்கெடுத்தாலும் ஏன்? எதற்கு? என்று வினாக்கள் கேட்டு ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவின் விளைவுகளிலிருந்து தோன்றுவதில்லை அன்பு வாழ்க்கை.

அன்பு வாழ்க்கையைப், பகுத்தறிவு ஒருபோதும் தோற்றுவிக்காது. தூய ஆவியிலிருந்து பிறப்பது - அன்பு.

உரோமன் 5 : 5-ஐ நினைவு கூர்வோமாக "நமக்கு அருளப் பட்ட தூய ஆவியினாலே, தேவ அன்பு, நம்முடைய நெஞ்சங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது".

'நெஞ்ம்’ (Heart) என்னும் சொல் 'ஆவி' (Spirit) என்றும் கொள்ளப்படுகிறது. இவ் இரு சொற்களும் இணையானவை. மாற்றுச் சொற்கள்.

மீண்டும் புதிதாகத் துய ஆவியினால் - நாம் பிறந்த பின்பு, நம்முடைய நுரையிரல்களின் காற்றைக் கொண்டு மூச்சு உட் கொள்வதும் வெளியிடுவதும் போன்றே இயேசுவின் அன்பு வாழ்க்கை தோய்ந்த நம் ஆவியில், நாம் உயிர் மூச்சுப் பெறுகிறோம்.

அளப்பரிது அன்பு; அதாவது அருளாளரின் அன்பே அன்பானது; அளப்பரிது. அவ் அன்பு கடவுளின் அன்பு. நம்மில் அவ் அன்பு இறைவனின் தெய்விகத்தை அதன் இயல்பினைக் கொண்டுள்ளது. அவ் அன்பு எல்லோரிடத்தும் எல்லா உயிர்களிடத்தும் போய்ப் பரவிட வேண்டுமாயின், பரவிடத்தக்க வகையில் பல்கிப் பெருகிடச் செய்வோமாயின், யார் எவர் என்று எண்ணாமல், எல்லோருக்கும் எல்லா உயிர்க்கும் உதவி செய்ய நமக்கு அவ் அன்பே உதவுகிறது.

நாள்தோறும் நாம் ஒரு பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். அப் பயிற்சி, நாம் காலையில் விழித்தெழும்போதே, விழிப்புணர்வு பெற்றிடும் போதே, "என்னுள் கடவுள் வந்துறைகிறது இன்று" என்று எண்ணுவதுதான்! அக் கடவுள் என் பணிகளை நான் செவ்வனே செய்து முடிக்க, எளிதாக முடித்துவிட, அருள் செய்யும் மாபேராற்றல் உடையது; எல்லாம் வல்லது: ஆகவே கடவுள் என்னுள் இருந்து என்னை ஊக்குவித்து எண்ணமாயினும் சொல்லாயினும் செயலாயினும் அனைத்தினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/32&oldid=1219178" இலிருந்து மீள்விக்கப்பட்டது