பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

31


உடனே அவரது மனைவி 1 யோவான் 4 : 18 'அன்பிலே அச்சமில்லை; முழு அன்பு அச்சத்தைப் புறம்பே தள்ளும்' என்று மேற்கொள் காட்டினார்.

உண்மைதான், அறிவேன், எனக்காக நாள்தோறும் வேண்டுதல் செய்து வந்தால், நான் அன்பினைக் கடவுளிடமிருந்து பெறுகின்ற நல்வாய்ப்புப் பெறுவேன்! உணர்கிறேன் - உலகிலேயே அன்புதான்் மகத்தான் ஒன்று என்று தன் மனைவியிடம் சொன்னார் கணவர் - வானொலியைக் கேட்டு விட்டு உரையாடியவர்.

சில நாள்கள் கழிந்தன; ஒரு நாள், தன் கணவனைப் பார்த்து "அத்தான்! நீங்கள் சொன்னபடியே அன்பு நெறியில் அன்பாக அதுவும் இயேசு ஆண்டவரிடம் இருந்த அன்பினைப் போன்றே மன்னுயிர் அன்பினில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டிரா?" என்று பணிவுடன் கேட்டாள்.

"சொல்ல மறந்தேனே! எனக்காக நீ செய்த தொழுகை வீண்போகவில்லை. என்னை முழுக்க முழுக்க அன்புள்ளவனாக மாற்றிவிட்டது உன் வேண்டுதல். உன் வேண்டுதல் கேட்கப் பட்டது. என் உள்ளமும் அதில் சேர்க்கப்பட்டது. இயேசு தமது அன்பினை என் நெஞ்சத்தில் பொழிந்தார். நான் அன்போடு நடக்கிறேன். அதற்கு எடுத்துக்காட்டாக, என் அலுவலகத்தில் இருப்பவர் ஒருவர், 'உங்களில் ஏதோ ஒரு மாற்றத்ததைக் காண்கிறேன். உங்களின் அகம்புறம் இரண்டும் முன்போலன்றி, அன்பின் வெளிப்பாடாகத் தெரிகிறதே!' என்று கேட்டார். இது கேட்டுத் திகைத்துப் போனேன்" என்றார் தன் மனைவியிடம்.

இப்போது அந்த மனிதர் உள்ளபடியே இயேசு காட்டிய அன்பினில் திகழ்ந்தார்.

உண்மைதான்். அன்பு, அலுவலகத்தில் உள்ளவரையும் மாற்றும், இல்லத்தையும் மாற்றும்; முன்னேற்றும். நம் வாழ்க்கையினையும் அன்புப் பணியில் சேர்க்கும்; நல்வழியில் நாட்டும் என்பது முற்றிலும் உண்மை.

மெய்ப்பொருளான கடவுள், இயேசுவில் அன்பாக இருந்தது போன்று இயேசு நம்மில் அன்பாக இருப்பதனையும் கடவுள், இயேசுவில் அன்பர்க் இருந்தது போன்றே நம்மிலும் அன்பாக இருப்பதனையும் சற்றே நமது உள்ளம் நினைவு கூர்ந்திடும் போதும், நம் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுத்திடும் போதும், நமது வாழ்க்கைதான்் எத்தனை இனிதாகிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/35&oldid=1219190" இலிருந்து மீள்விக்கப்பட்டது