பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அன்பு வெள்ளம்


யோவான் 17:23 "என்னை நீர் அனுப்பினதையும் நீர் என்னில் அன்பாயிருக்கிறது போல அவர்களிலும் அன்பாயிருக் கிறதையும் உலகம் அறியும் படிக்கும் நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்".

எந்தை கடவுள், இயேசுவை அன்புடன் விரும்பியது போல நம்மையும் அன்பாக விரும்புவாரேயானால் அவர் நம்மை ஒரு போதும் கைவிடார்! குழந்தையை ஈன்றெடுத்த தாய் இமை கொட்டாது காப்பாது போல, நம்மையும் அந்த எல்லையற்ற அறிவு படைத்த இறை காத்திடும் என்பதைச் சிந்தையில் கொள்ள வேண்டும்.

"எந்தையே! நீவிர் என்னைக் கனிந்த அன்புடன் விரும்பு வதற்காக என்றென்றும் செய்ந்நன்றியுடன் இருப்பேன். எங்குச் சென்றிடினும் எதனை எண்ணிடினும் எதைச் செய்திடினும் பேசிடினும் நீவிரும் நின் மைந்தரான இயேசுவும் என்னை அன்பாக விரும்புவது போலவே எல்லோரையும் அன்பாக விரும்புவேன்" என்று நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து சொல்வோமாக.

கிறித்தவர் திருமறை நூலை நாம் நன்கு படித்துணர்ந்தால் தெரியும் ஒரு வியப்பதிர்ச்சி ஊட்டும் செய்தி.

கிரேக்க மொழியில் (Doulos) 'தெளலசு' என்னும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் (Servant) ஊழியக்காரன்’ என்று பொருள் சொல்லப் பட்டிருக்கிறது. இந்தச் சொல்லாக்கத்தை, எந்த மொழிப் பெயர்ப் பாளரும் ஒர் ஊழியக்காரன் அல்லது 'ஒரு குடும்பத்தின் அடிமை' என்னும் பொருளில் மொழிபெயர்க்கப்பட்டதனை மேலோட்ட மாகக் கூட சரி என்று இசைந்து ஏற்றுக் கொண்டு நிறைவு பெறமாட்டார்.

அதற்கு என்ன காரணம் என்றால், திருமறை அச் சொல்லுக்கு வேறு பொருளைச் சொல்கிறது - "இயேசு கிறித்துவின் அன்புப் பணியாற்றும் மிகச் சிறியன்' 'இயேசு கிறித்துவின் நெறியில் பணி செய்யும் அன்பு இளையன்' இன்னும் சொல்லப்போனால் "இயேசுவின் அன்புக்கு அடிமை” என்றே சொல்கிறது.

திருத்துதர் பவுலின் கூற்றுப்படி, "கடையன்", "மிகச்சிறியன்", "அன்புக்கு அடிமை", "அன்படியன்" என்று பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/36&oldid=1219193" இலிருந்து மீள்விக்கப்பட்டது