பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அன்பு வெள்ளம்


"நானும் எந்தையும் ஒருவரே என்பது போல, நீங்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். ஒருவரே என்றாக வேண்டும் என்பதுதான் அந்த அமைப்புமுறை - வகை வடிவம்; திட்டம்.

எப்படி ஒன்று சேர்வது? ஒன்றாவது என்றால் அதற்குத்தான்் இயேசு காட்டிய அன்பினைப் போன்ற அன்பு இருக்கிறது.

நம் மனத்தின்கண் அன்பு வந்துள்ள கணமே, நம் உயிர் சுடர் விட்டொளிர்கிறது. நம்பிக்கையின் முழுமை - மொத்தம் நம்முள் நிரப்பப்டுவதை உணர்ந்திடலாம்.

இறைப் பற்றார்வத்திற்காகவும் ஆன்மிக வலிமைக்காகவும் நாம் வேண்டிய முறைகளும் நாள்களும் எண்ணற்றவை. ஆனால் மேற் சொல்லப்பட்ட ஒரே ஒரு மெய்மொழியைக் கடைப் பிடித்தால் இயேசுவில் நாம் கொள்ள வேண்டிய பற்றார்வமும் ஆன்மிக வலிமையும் ஒரு கணத்தில் நம்மை வந்தடைந்தாகக் கொள்ளலாம். அப்படிக் கொண்டால், நம்மில் இயேசு பற்றிய அன்பார்வமும் தெய்விக ஆற்றலும் வந்து நிரம்பி வழியும். அந்த நிறைவினை நாம் அடைந்தோம் என்றுணர்ந்திட, நம்மில் கடவுள் உறைகிறார் என்னும் உறுதியும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

        எங்கே உலகம் இரண்டற்று உழல்கிறதோ
        அங்குளதாம் அன்பின் உயிர்ப்பு.

அன்பில் நிலைத்தோங்குதல்

நீங்கள் இது போன்ற அழகிய அருள் மொழிகளைச் சிந்தித்துப் பார்க்க முடியுமா என்று படித்துப் பாருங்கள்.

1 தெசலோனி 3:11:13, "நம்முடைய தந்தையாகிய தேவனும் நம்முடைய மீட்பரான இயேசு கிறித்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழி நடத்துவாராக."

"நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மாந்தரிடத்தில் வைக்கும் அன்பிலும் மீட்பர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து,

இவ்விதமாய் நம்முடைய மீட்பராகிய இயேசு கிறித்து நமது தூயவர்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்க்ள் நம்முடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/40&oldid=1515464" இலிருந்து மீள்விக்கப்பட்டது