பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

43


சொல்லாதீர்கள். காதல் என்பது நல்லது நலம் மிக்கது என்று அவர்களுக்கு உணர்த்திடுங்கள். அவர்கள் உறவினைத் தீய செயல் என்று பகராதீர்கள்; அது பாவச் செயலேயானாலும், அந்த தீயதைக் குணமாக்கும் வகையைக் கண்டு எடுத்துக் கூறுங்கள்.

"கடவுள் உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் விரும்பு கிறார். உங்கள்கள் நலனுக்காகவே-தமது ஒரே பேரரான மீட்பரைத் தந்தருளினார்” என்பதை ஆண்கள் பெண்கள் அனைவரிடமும் விளக்கமாகச் சொல்லுங்கள். அன்பின் வெளிப்பாடாக வந்த அன்புத் தெய்வம், இயேசுவின் வரலாற்றை எடுத்து விளக்குங்கள். அதனால் அம் மக்களின் உள்ளங்களை நீங்கள் கவர்ந்து விடுவீர்கள்.

ஏதும் அறியா மக்கள் அன்றன்று வேண்டிய உணவைக் கேட்கிறபோது அவர்களிடம் கல்லினைத் தராதீர்கள்... வாழ்க் கைக்கு உணவாகிற அன்பு என்னும் அமிழ்தினைத் தாருங்கள். . அன்றன்று வேண்டிய உணவுடன். அன்பினைப் பற்றிய 'தத்துவ'ச் சொற்பொழிவினை ஆற்றிடாதீர்கள். ஏதும் அறிந்திடாத அப் பேதை மக்களிடம் அதுவரை அறிந்திராத பண்பாளரின் அன்பு வரலாற்றை விளக்கிக் காட்டுங்கள்.

அன்பே அனைத்தின் திறவுகோல், அஃதறிய
நன்றே புரிவீர் நயந்து.

அன்பு நோக்குடன் மாந்தரைக் காணுதல்

ந்தை நம் மக்கள் அனைவரையும் மாறாத மெய்ம்மை - பற்றார்வம் என்னும் கண்ணோட்டத்தில் பார்த்தார் என்பதில் உறுதியாக இருக்கிறேன். பற்றார்வம் கொண்டு பார்ப்பது என்பது வேறொன்றுமில்லை, அன்பென்னும் கண்கொண்டு பார்ப்பது என்பதுதான்.

இயேசு கிறித்துவில் காணப் பெற்ற ஈகத்திற்கு மாந்த இனம் கடமைப்பட்டிருக்கிறது.

வாழ்வில் தோல்வி என்பது ஆடிய களியாட்டங்களை வென்று பெற்ற வெற்றியும்; துன்ப துயரங்களே ஆட்சி செய்த இடத்தில் எல்லையற்ற மகிழ்ச்சியும் நிறைந்த நிலைபேறுடைய வாழ்க்கையே வேண்டும் என்று மானுடம் விரும்பும் என்று கட்வுள் நம்புகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/47&oldid=1515468" இலிருந்து மீள்விக்கப்பட்டது