பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

அன்பு வெள்ளம்


லாளர்க்கும் இடையில் சாதி மக்களிடையில் எங்கெங்கும் நடை பெற்றுக் கொண்டிருப்பதைக் காணலாம்,

இந்தச் சிக்கல்களை எல்லாம் தீர்த்து முடிவுக்குக் கொண்டு வரும் நீக்குகை மனிதரிடம் உண்டா?

உண்டு மனிதர்களிடம் உண்டு! நாம் நம்பலாம்!

அதுதான் புதுவகையான அன்பு அந்தப் புதுவகையான அன்பினை, மானுடம் கண்டும் காணாமல் விட்டுவிட்டன் என்பது அண்மைக் காலத்தில் கண்டு உணரப்பட்டது.

புதுமைக் கோலம் பூண்டுவரும் அவ் அன்பினை, இன்றைய புதிய நாகரிக வாழ்க்கையில் கொணர்ந்திட வேண்டும் என்பதுதான் இந்த நூலின் முனைப்பும் முயற்சியும் என்றால் மிகையல்ல.

அன்பு இத்தகையது என்பதை, ஆண்டாண்டுக் காலமாக அறியாமல் இருந்துவிட்டோம் என்னும் ஓர் உண்மையை நாம் ஒப்புக் கொள்ளவேண்டும்.

அன்பில் ஊன்றி, உள்ளது சிறத்தலையும் அறிந்து வெளிப்படுத்தியதில் விஞ்சியும் எஞ்சியும் விளங்கியவர் திருவள்ளுவரே! அதனை முழுமையாக வெளிப்படச் செய்ததும் இயேசு பெருமானின் செயற்பாட்டினால் தான் என்பதைக் கொண்டறியலாம்.

அவ் உண்மையைக் கண்டறிய நான், என் வாணாளில் பெரும்பங்கு செலவிட்டிருக்கிறேன். ஆனால் கண்டறியும் எல்லையைக் கூட இன்னும் சென்றடையவில்லை.

கெனான்ஃபேரர் (Canonferer) என்பவருடைய எழுத்தோவியத்தைக் கண்டேன். அதில், கிரேக்க மொழிச் சொற்களில் அன்பு (Love) அல்லது அறம் அருள் இரக்கம் எனப் பொருள்படும் மன்பதை அன்பு (Charty) என்றும் இரண்டு சொற்கள்ல் மொழி பெயர்ப்பினை, புதிய ஏற்பாட்டில் இருப்பதைக் கண்டு ஒர் உண்மையைத் தெரிந்து தெளிந்தேன். அவ் இரு சொற்கள் 1. Agappa 2. Phitso

அகாபா (Agappa) என்னும் சொல்லுக்குச் சரியான பொருள் இயேசுவின் வெளிப்பாட்டில் தென்பட்டதாகும். ஆனால் அச் சொல், கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில், கிரேக்க இலக்கிடித்தில் வழங்கப்படவில்லை என்று உரைக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/6&oldid=1218863" இலிருந்து மீள்விக்கப்பட்டது