பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

களுக்குச் செருக்கு உண்டாகியிருக்கிறது. பகையுணர்ச்சி மூண்ட உள்ளத்தில் நிதானம் இராது. என்னுடைய படைப் பலத்தை அவர்கள் கருதவில்லை. அதனை நினைந்து அஞ்சாமல், சினம் மிகுந்து சின்னத்தனமான வார்த்தைகளைச் சொல்லித திரிகிறார்கள், கிடக்கட்டும். அதற்குப் பதில் சொல்லிக்கொண்டிருப் பதில் பயன் இல்லை.”

அரசன் யோசனையில் ஆழ்ந்தான். படைத்தலைவரையும், மந்திரிமாரையும் வருவித்தான். ஆலோசனை செய்தான். "போர் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். நம்முடைய நாட்டின் எல்லைக்குள்ளே அவர்கள் வருவதற்குமுன் நாம் எதிர்சென்று போராட வேண்டும்" என்று நெடுஞ்செழியன் வீரம் ததும்பக் கூறினான். படைத் தலைவர் உடம்பட்டார். மந்திரிமார் பின்னும் யோசனை செய்தனர்.

"இனி யோசனைக்கு நேரம் இல்லை. சிறு சொல் சொல்லிய வேந்தரைச் சிதையும் படி அருஞ்சமத்தில் தாக்கி அவர்களை அவர்களுடைய முரசத்தோடு ஒருங்கே சிறைப்படுத்துவதாக உறுதி கொண்டு விட்டேன். அப்படிச் செய்யாவிட்டால், இதோ ஆணையிடுகிறேன், கேளுங்கள். அவர்களைச் சிறை செய்யா விட்டால், என்னுடைய குடை நிழலில் வாழ்பவர் யாவரும் புகலிடம் காணுமல் வருந்தி, எம் அரசன் கொடுங்கோலன் என்று கண்ணிருடன் நின்று பழி தூற்றும், பாவி ஆகக் கடவேன்!"

அரசன் முகம் சிவந்தது. அவனுடைய இளமையழகிலே இப்போது வீரமுறுக்குத் தெளிவாகத் தெரிந்தது அமைச்சர் வியப்புடன். வனை உற்று நோக்கி