பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

மாகப் புலவர் சொன்னார்; படிப்படியாகச் சொன்னார். அவன் மனத்தில் அது உறைத்தது.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்களால்தான் உடம்பையும் உயிரையும் சேர்த்து வைக்கமுடியும். வானம் நம்முடைய விருப்பப்படி பெய்யாது. நீரைத் தேக்கினவர்களே புகழைத் தேக்குவார்.” இந்தப் பொன்னான வாக்கியங்கள் ஒவ்வொன்றாக அவன் உள்ளத்தில் கணிர் கனிர் என்று மணியடிப்பதுபோல் மீட்டும் ஒலித்தன.

"புலவர் பெருமானே, நானும் நீரைத் தேக்கிப் புகழைத் தேக்க முயல்வேன்" என்ற வார்த்தைகள் அரசன் வாயிலிருந்து வந்தபோது, அங்கிருந்த அமைச்சர்களின் முகங்கள் என்றும் இல்லாத மலர்ச்சியைப் பெற்றன.