பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ஆரோகண அவரோகண கதியிலே அவன் இன்னும் மூழ்கியிருந்தான்.

மாலையில் நள்ளி தன் அவைக்களத்தில் வீற்றிருந்தான். அவனுக்கு அருகில் வன்பரணர் அமர்ந்திருந்தார். இரு பக்கங்களிலும் வேறு சில புலவர்களும் நண்பர் களும் அதிகாரிகளும் அயலூர்க்காரர்களும் இருந்தார்கள். ஏதிரே பாணனும் அவனைச் சார்ந்தாரும் தம் தம் இசைக் கருவிகளுடன் உட்கார்ந்திருந்தனர். பாணர் தலைவன் முன்னே அமர்ந்திருந்தான்.

இசையரங்கு தொடங்கியது. யாழுக்குச் சுருதி சேர்த்தார்கள். முதலில் பாணர் தலைவனே வாசிக்கத் தொடங்கினன். காலையிலே மருதப் பண்ணிலே தோய்ந்து நின்ற அவன் உள்ளம் இன்னும் அந்த நிலையினின்றும் மாறாமலே இருந்தது. இப்போது மாலை; முறைப்படி செவ்வழிப் பண்ணை வாசிக்கவேண்டும்; ஆளுல் பாணன் உள்ளமும் காதும் இன்னும் மருதப் பண்ணிலே ஈடுபட்டிருந்தன. ஆதலின் அவன் பாடத் தொடங்கியபோது அவனையே அறியாமல் அவன் விரல்கள் மருதப் பண்ணின் சுரங்களை எழுப்பின; பிறகு அதன் இன்னிசை ஒலி மீட்டும் அவனுக்குக் காலையிலே யாழ் வாசிக்கிறோம் என்ற மயக்கத்தை உண்டாக் கியது; காலையில் வாசித்ததன் தொடர்ச்சியாக வாசிப்பதாகவே அவன் எண்ணிக்கொண்டு விட்டான். அப்படிச் சொல்வதைவிட இப்போது மாலை என்ற நினைப்பே அவன் உள்ளத்திலே தோன்றவில்லை என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

தொடக்கத்தில், "மாலை நேரத்தில் அவர் மருதப் பண்ணைப் பாடுகிறாரரே!” என்று இசையிலக்கணம் தெரிந்தவர்கள் மயங்கினர்கள். நள்ளியும் அப்படியே - -