பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒரு கை விரல்களில்
பெருவிரல் போன்றவர்
உவமைக் கவிஞர் சுரதா


ன்னுடைய நண்பர் திரு. கலைமணி அவர்கள், மிகச் சிறந்த எழுத்தாளர், மேடைப் பேச்சாளர் - நல்ல சிந்தனையாளர்!

இலக்கியத்துறைக்கும், மொழிக்கும், நாடகக் கலைக்கும், பத்திரிகைத் துறைக்கும், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆகியவர்களால் பாராட்டப்படும் அளவிற்கு அரும்பணிகள் ஆற்றியவர் அவர்.

நான், சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பே, எனக்குப் பழக்கப்பட்ட நண்பர்களிலே அவரும் ஒருவராவார்.

தமிழ்நாட்டில் உள்ள எல்லா அறிஞர் பெருமக்கட்கும் பழக்கமானவர்.

பழக்கமானவர் என்றால், அத்தனை பேரும் மதித்துப் பாராட்டுமளவிற்கு நேர்முகமாகவே பழக்கமான பண்பாளர்.

தமிழ்நாட்டின், அரசியலில் - இலக்கியத்தில், வரலாற்றில் மிகச் சிறந்த, வேகமாக, விரைவாக எழுதும் எழுத்தாளர்களை நான் அறிவேன். “கல்கி, தினசரி ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம், காண்டீபம் ஆசிரியர் எஸ்.எஸ். மாரிசாமி” ஆகியவர்கள் வரிசையில் நண்பர் புலவர் என். வி. கலைமணி நான்காவது எழுத்தாளராக என்னால் மதிக்கப்படுபவர்.

மனிதனுக்கு ஒரு கையில் ஐந்து விரல்கள் எப்படி இன்றியமையாததோ அந்த விரல்களில் நண்பர் என். வி. கலைமணி அவர்கள் பெருவிரலைப் போன்றவர்.

56அஇலட்சுமணசாமிசாலை

அன்புடன்

கலைஞர்கருணாநிதி நகர்,சென்னை-600078

-சுரதா

17.1.2000