பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



செந்தமிழ் சந்தனாடவி
பேராசிரியர்
கே.எஸ். சிவராமலிங்கம், எம்.ஏ.


"அய்யன் திருவள்ளுவர்" என்று தலைப்பிட்டு நாற்பத்தைத் தாண்டு கால அருமை நண்பர், திரு. புலவர் என்.வி. கலைமணி எம்.ஏ அவர்கள் படைத்துத் தந்துள்ள இந்தப் பசுந்தமிழ் நூல் அவரது கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ளது.

அவருடைய கட்டுரைகளின் தமிழ் நடை என்றும் மாறா எழிலோடுதான் விளங்குகிறது. கட்டுரையின் கருப் பொருட்கள் பல்வேறு தலைப்புகளில் கவினுற விளக்கம் பெற்றுள்ளன.

திருப்புகழ் இசை வகுப்பில் ஒன்றாகப் பயின்றதன் அடிப் படையில், இந்நூலுக்கு அணிந்துரை எழுதும் உரிமை இயல் பாகவே உண்டு. பேரறிஞர் அண்ணாவின் கம்பரசத்தைப் பருகி அதன்வழி திருப்புகழ் ரசம் வடித்துத் தந்தவர் திரு. கலைமணி.

அதே போல் 'ஆரிய மாயை' நூலை ஆழ்ந்து கற்று 'வஞ்சக வலை' என்ற நூலை அந்தக் காலத்திலேயே வனைந்த பெருமைக்குரியவர்.

ஐம்பதுகளில் தி.மு.க.வின் வளர்ச்சிக்கு திராவிடன் மூலமாக உரமிட்டவர் கலைஞர். அந்தக் காலத்தில் தி.மு.க.வின் ஐம்பெரும் தூண்களில் ஒருவராகிய என்.வி. நடராசன் நடத்திய வார இதழ் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

ஆக, திராவிட இயக்கப் பாசறையின் தேன் தமிழ்க் கவிஞர் இவர் என்பதனாலோ என்னவோ இவருக்குத் கலைமணி என்னும் பெயர் பொருந்துவதாயிற்று.

நண்பர் கலைமணியின் சொற்சுவையும், பொருட்சுவையும் கலந்த நற்றமிழ் என்னும் கற்கண்டாக இனிக்கும் இயல்புடையது. கற்கண்டை எப்பக்கம் சுவைத்தாலும் எவ்வகையில்

29